Home
Mobile

இதுதான் உண்மையான NOKIA ரிட்டர்ன்ஸ்.. 4ஜி, AI பட்டன், 1450mAh பேட்டரி உடன் 4 புது போன்கள் அறிமுகம்!

நோக்கியா 235 4ஜி 2026 (Nokia 235 4G 2026), நோக்கியா 215 4ஜி 2026 (Nokia 215 4G 2026), நோக்கியா 210 4ஜி (Nokia 210 4G) மற்றும் நோக்கியா 200 4ஜி (Nokia 200 4G) ஆகிய 5 புதிய ஃபீச்சர் போன்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த புதிய நோக்கியா போன்கள் அனைத்தும் 4ஜி இணைப்பு வசதியை கொண்டிருப்பதோடு, எஸ்30+ இயங்குதளத்தில் (operating system) இயங்குகின்றன. அனைத்து மாடல்களிலும் 1450mAh பேட்டரி மற்றும் 32ஜிபி வரையிலான விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் (expandable storage) வசதி ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன.

NOKIA.. 4ஜி, AI பட்டன், 1450mAh பேட்டரி உடன் 4 புது போன்கள் அறிமுகம்!

இவைகளில் வயர்டு (wired) மற்றும் வயர்லெஸ் (wireless) முறைகளில் செயல்படும் எப்எம் (FM) ரேடியோ வசதியும் உள்ளது. மேலும் வாய்ஸ் கமாண்ட்கள் மூலம் பல்வேறு அம்சங்களை அணுகுவதற்கான ஏஐ அசிஸ்டென்ட் பட்டனும் (AI assistant button) இந்த புதிய நோக்கியா போன்களில் இடம்பெற்றுள்ளது.

முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை, நோக்கியா 210 4ஜி மற்றும் நோக்கியா 200 4ஜி ஆகிய 2 மாடல்களுமே 2.4-இன்ச் QVGA டிஸ்பிளேவை கொண்டுள்ளன. அதேவேளையில், நோக்கியா 235 4ஜி (2026) மற்றும் நோக்கியா 215 4ஜி (2026) ஆகிய 2 மாடல்களும் 2.8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளன.

நோக்கியா 235 4ஜி 2026 சிறப்பம்சங்கள்:
- QVGA ரெசல்யூஷன் கொண்ட 2.8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே
- LED ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 2-மெகாபிக்சல் ரியர் கேமரா
- VGA செல்பீ கேமரா
- S30+ ஆப்ரேட்டிங் சிஸ்டம்
- 64MB ரேம் மற்றும் 128MB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32GB வரை அதிகரிக்கலாம்
- 1450mAh பேட்டரி

- 10 மணிநேரம் வரை டால்க் டைம் மற்றும் 12 நாட்கள் வரை ஸ்டேண்ட்பை டைம்
- USB Type-C போர்ட்
- Bluetooth 5.0, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், USB Type-C, FM ரேடியோ
- GSM, WCDMA மற்றும் LTE பேண்டுகளில் 2G, 3G மற்றும் 4G ஆதரவு
- அளவீட்டில் 128.85 x 55.8 x 12.86 மிமீ
- எடையில் 106 கிராம்.

நோக்கியா 215 4ஜி 2026 சிறப்பம்சங்கள்:
- QVGA ரெசல்யூஷன் கொண்ட 2.8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே
- 1,450mAh பேட்டரி
- S30+ ஓஎஸ்
- VGA ரியர் கேமரா
- 64MB ரேம் மற்றும் 128MB ஸ்டோரேஜ்
- நோக்கியா 235 4ஜி 2026-ல் உள்ள அதே கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள்
- அளவீட்டில் 128.8 x 55 x 12.8 மிமீ
- எடையில் 104 கிராம்.

நோக்கியா 2010 4ஜி மற்றும் நோக்கியா 200 4ஜி சிறப்பம்சங்கள்:
- 2.4-இன்ச் QVGA டிஸ்பிளே
- LED ஃபிளாஷ் வசதியுடன் கூடிய VGA ரியர் கேமரா மற்றும் VGA செல்பீ
- 1450mAh பேட்டரி
- Bluetooth 5.0, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட்
- GSM, WCDMA மற்றும் LTE பேண்டுகளில் 4G கனெக்டிவிட்டி

மேற்கண்ட 4 நோக்கியா போன்களிலும் பிரத்யேக ஏஐ அசிஸ்டென்ட் (AI assistant) பட்டன் இடம்பெற்றுள்ளது. வாய்ஸ் கமாண்ட்கள் மூலம் டார்ச் லைட்டை இயக்கவும், ரீமைண்டர்கள் மற்றும் அலாரங்களை செட் செய்யவும் அல்லது உங்கள் காண்டாக்ட்களில் உள்ளவர்களை அழைக்கவும் இதை பயன்படுத்தலாம். இந்த 4 போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை; இருப்பினும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Nokia 235 4G 2026 Nokia 215 4G 2026 Nokia 210 4G Nokia 200 4G With 1450mAh Battery Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X