NOKIA ஐயா நீங்களா இது.. 32GB மெமரி, டபுள் டிஸ்பிளே, 1450mAh பேட்டரி.. Detox Device ஆக HMD 2660 Flip அறிமுகம்!
நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை தன்வசம் கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது எம்டபிள்யூசி 2025 (MWC 2025) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2025 (Mobile World Congress 2025) நிகழ்வில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.
அதில் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் (Smartphones) மற்றும் 4 புதிய ஃபீச்சர் போன்கள் (Feature Phones) என மொத்தம் 6 புதிய எச்எம்டி மாடல்கள் மற்றும் எச்எம்டி ஆம்பெட் பட்ஸ் (HMD Amped Buds) என்கிற ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸும் அடக்கம்.

புதிய ஃபீச்சர் போன்களை பொறுத்தவரை எச்எம்டி பார்கா 3210 (HMD Barca 3210), எச்எம்டி 2660 பிளிப் (HMD 2660 Flip), எச்எம்டி 130 மியூசிக் (HMD 130 Music) மற்றும் எச்எம்டி 150 மியூசிக் (HMD 150 Music) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களை எச்எம்டி பியூஷன் எக்ஸ்1 (HMD Fusion X1) மற்றும் எச்எம்டி பார்கா ஃப்யூஷன் (HMD Barca Fusion) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவைகளில் எச்எம்டி 2660 பிளிப் மாடலை பற்றி இங்கு விரிவாக காண்போம்:
எச்எம்டி 2660 ஃபிளிப் மொபைல் போனின் முக்கிய அம்சங்கள்: எம்டபிள்யூசி 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய எச்எம்டி 2660 ஃபிளிப் மொபைல் போன் ஆனது காஸி பிளாக் (Cozy Black) மற்றும் டுவைலைட் வயலெட் (Twilight Violet) கலர்களில் வாங்க கிடைக்கும். விரைவில் ராஸ்பெரி ரெட் (Raspberry Red) கலர் ஆப்ஷனும் அறிமுகமாகும்.
- 2.8-இன்ச் QVGA மெயின் டிஸ்பிளே
- 1.77-இன்ச் கவர் டிஸ்பிளே
- நம்பர்களுக்கான பெரிய பட்டன்கள்
- டி9 மெசேஜிங் ஆதரவு
- ஃபிளிப் டு ஆன்சர் கால் அம்சம்
- 0.3எம்பி சிங்கிள் ரியர் கேமரா
- கேமரா ஃபிளாஷ்; அதுவே டார்ச் எல்இடி லைட் ஆகவும் செயல்படும்
- ப்ளூடூத் 4.2 மற்றும் வோல்ட்இ (VoLTE) ஆதரவு
- 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டுகளுக்கான ஆதரவுடன் 32ஜிபி வரை விரிவாக்கக்கூடியது
- இன்-பில்ட் எப்எம் ரேடியோ ஆதரவு
- 1450mAh நீக்கக்கூடிய பேட்டரி
- யூஎஸ்பி டைப் சி சார்ஜிங் ஆதரவு
எச்எம்டி நிறுவனம் அதன் எச்எம்டி 2660 ஃபிளிப் மொபைல் போனை "டிடாக்ஸ் டிவைஸ்" (Detox Device) என்று அழைக்கிறது. ஏனென்றால் இது நவீன ஸ்மார்ட்போன்களில் உள்ள ஸ்மார்ட் அம்சங்களை நம்பியிருப்பதை குறைக்க உதவும் என்று எச்எம்டி க்ளோபல் நிறுவனம் நம்புகிறது. இந்த மொபைல் போனின் விலை விவரங்கள் மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எச்எம்டி ஃப்யூஷன் எக்ஸ்1 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்
- 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ்
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56 இன்ச் எச்டி டிஸ்பிளே
- 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2எம்பி சென்சார்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 33W பாஸ்ட் சார்ஜ் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி
எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் கூற்றுப்படி, எச்எம்டி ஃப்யூஷன் எக்ஸ்1 ஸ்மார்ட்போன் ஆனது இளம் தலைமுறை மக்களுக்கு உதவும் நோக்கம் கொண்ட நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் (First smartphone designed to help younger users) ஆகும். இது இளம் வயதினர் உட்பட இளம் பயனர்கள் இண்டர்நெட்டை பாதுகாப்பாக ஆராய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் லோக்கேஷன் சேஃப்டி அம்சங்களை (Location Safety Features) அணுகலாம், காண்டாக்ட்களை அங்கீகரிக்கலாம், குறிப்பிட்ட ஆப்களுக்கான அணுகலை தடுக்கலாம் (அல்லது அதற்கான அட்டவணையை செட் செய்யலாம்) மற்றும் தங்கள் குழந்தையின் ரியல்டைம் லோக்கேஷனை பார்க்கலாம். இந்த அம்சங்கள் எச்எம்டி-யின் எக்ஸ்ப்ளோரா பெற்றோர் கட்டுப்பாடுகள் சேவையின் ( HMD's Xplora parental controls service) ஒரு பகுதியாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications