ஆண்ட்ராய்டு கருவியை பாதுகாக்க இதை செய்யனும்னு கூகுளே சொல்றாங்க
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் தங்களது கருவி பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றே நினைப்பர். இன்று பலரது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அவர்களது ஸ்மார்ட்போனில் தான் சேமித்து வைக்கின்றனர்.
{புகைப்படம் எடுப்பவர்களுக்கான வித்தியாச கேஜெட் வகைகள்}
வங்கி சேவையில் துவங்கி ஷாப்பிங், பணம் செலுத்துவது என எல்லாவற்றிற்கும் ஸ்மார்ட்போன் அவசியமாக இருக்கின்றது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உங்களது ஸ்மார்ட்போன் பாதுக்காப்பானதாக இருக்கின்றதா.
{உலகின் சிறந்த மெல்லிய ஸ்மார்ட்போன்கள்}
இங்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை பாதுகாப்பாக வைக்க கூகுள் பரிந்துரைக்கும் சில எளிய வழிமுறைகளை தான் தொகுத்திருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்.

டிவைஸ் மேனேஜர்
ஆண்ட்ராய்டு கருவி தொலைந்து போனால் பயன்படும் அம்சமாக ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் செயல்படுகின்றது. அதனால் ஆண்ட்ராய்டு கருவியில் டிவேஸ் மேனேஜர் செட் அப் செய்து வைப்பது நல்லது.
கூகுள் அக்கவுன்டு சைன் இன் செய்து ரிமோட்லி லொகேட் திஸ் டிவைஸ் "Remotely locate this device" பின் அலோ ரிமோட் லாக் அண்டு இரேஸ் "Allow remote lock and erase" ஆப்ஷன்களை ஆன் செய்ய வேண்டும்.

ஸ்கிரீன் லாக்
ஆண்ட்ராய்டு கருவியில் ஸ்கிரீன் லாக் செய்வது அவசியமாகும். பின், பாஸ்வேர்டு அல்லது பேட்டர்ன் என லாக் செய்வது போனை மற்றவர்கள் எளிதாக பயன்படுத்துவதை தவிர்க்கும்.
இதை செய்ய செட்டிங்ஸ்>> செக்யூரிட்டி>>ஸ்கிரீன் லாக் ஆப்ஷன் செல்ல வேண்டும்.

லாக் ஸ்கிரீன் கான்டாக்ட்
உங்களது கான்டாக்ட் தகவல்களை லாக் ஸ்கிரீனில் வைத்து கொண்டால் அவை பாதுகாப்பானதாக இருக்கும். இதை செய்ய செட்டிங்ஸ்>>செக்யூரிட்டி>>ஓனர் இன்ஃபோ சென்றால் போதுமானது.

என்க்ரிப்ட்
உங்களது போனை என்க்ரிப்ட் செய்வதன் மூலம் போனில் இருக்கும் தகவல்களை பாதுகாப்பானதாக மாற்ற முடியும். இதை செய்ய செட்டிங்ஸ்>>செக்யூரிட்டி>>என்க்ரிப்ட் போன் ஆப்ஷனை க்ளிக் செய்தாலே போதுமானது.

ஆப்ஸ்
போனில் எவ்வித செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பதிவிறக்கம் செய்யும் தளம் நம்பகமானதாக இருப்பதோடு பிரபலமானதாகவும் இருக்க வேண்டும்.

விளம்பரம்
தேவையில்லாத விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். மேலும் உங்களது பாஸ்வேர்டு அல்லது தனித்துவம் வாய்ந்த தகவல்களை கேட்கும் எவ்வித செயலிகளையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

பேக்கப்
சீரான இடைவெளியில் உங்களது தகவல்களை பேக்கப் செய்வது மிகவும் அவசியமானதாகும். திடீரென உங்களது கருவி தொலைந்து விட்டால் உங்களது தகவல்கள் மட்டுமாவது பாதுகாப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications