உலகின் சிறந்த மெல்லிய ஸ்மார்ட்போன்கள்

Posted By:

எந்நேரமும் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் கச்சிதமாகவும் அழகுடனும், அதே நேரம் வியக்கவைக்கும் சிறப்பம்சங்களையும் சரியான விலை பட்டியலில் ஸ்மார்ட்போன்கள் இருக்க வேண்டும்.

[என்னது ஆப்பிள் வாட்ச் வாங்க கூடாதா, ஏன்]

துவக்கத்தில் செங்கல் வடிவில் இருந்த மொபைல் போன் இன்று கைகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதை தொடர்ந்து சில நிறுவனங்கள் மெலிதாக இருக்கும் ஸ்மார்ட்போன்களை வெளியிட துவங்கின, இங்கு உலகளவில் மெலிதாக இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை தான் பார்க்க இருக்கின்றோம்.

[இந்த டிவியை சுவற்றில் பொருத்த வேண்டாம், ஒட்டினாலே போதும்]

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் உலகின் மெல்லிய தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விவோ எக்ஸ்5மேக்ஸ்

விவோ எக்ஸ்5மேக்ஸ்

தற்சமயம் உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் தான் விவோ எக்ஸ்5மேக்ஸ். 4.75 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவி சிறந்த பயன்பாடு மற்றும் சிறப்பான புகைப்படங்களை வழங்கும் கேமராக்களை கொண்டிருக்கின்றது.

ஒப்போ ஆர்5

ஒப்போ ஆர்5

விவோ எக்ஸ்5மேக்ஸ் போன்றே இந்த கருவியும் சிறப்பான ஹார்டுவேர் கொண்டிருக்கின்றது. 5.2 இன்ச் 1080 பி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.85எம்எம் தட்டையாக இருக்கின்றது.

ஜியோனி ஈலைஃப் எஸ்5.1

ஜியோனி ஈலைஃப் எஸ்5.1

விவோ மற்றும் ஒப்போ நிறுவனங்களுக்கு முன்பே உலகின் முதல் ஸ்மார்ட்போனை தயாரித்த பெருமை ஜியோனி நிறுவனத்தையே சேரும். ஆக்டா கோர் பிராசஸர் 2ஜிபி ரேம் மற்றும் 8 எம்பி ப்ரைமரி கேமராவும் வழங்கப்பட்டிருக்கின்றது.

ஜியோனி ஈலைஃப் எஸ்5.5

ஜியோனி ஈலைஃப் எஸ்5.5

2014 ஆம் ஆண்டில் 5.5எம்எம் போன்கள் யாரும் கண்டிறாத ஒன்றாக இருந்தது, இதை முறியடிக்கும் விதமாக வெளியிடப்பட்டது தான் ஜியோனி ஈலைஃப் எஸ்5.5, 5இன்ச் 1080பி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே மற்றும் 2ஜிபி ரேம் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்தது.

ஜியோனி ஈலைஃப் எஸ்7

ஜியோனி ஈலைஃப் எஸ்7

புதிய ஜியோனி ஈலைஃப் எஸ்7 5.2 இன்ச் ஃபுல் ஹெச்டி ஸ்கிரீன், 64பிட் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கின்றது.

விவோ எக்ஸ்3

விவோ எக்ஸ்3

ஜியோனி ஈலைஃப் எஸ்7-ஐ விட சற்று தட்டையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 5 இன்ச் 720பி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர், 1ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் அசென்டு பி6

ஹூவாய் அசென்டு பி6

இன்னும் இந்தியாவில் வெளியாகாத இந்த ஸ்மார்ட்போன் 6.18 எம்எம் மெலிதாக இருக்கின்றது. 4.7 இன்ச் 720பி ஸ்கிரீன், 2ஜிபி ரேம், 8/16 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Here you will find the Best and slimmest phones in the world. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot