கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா?

By Siva
|

கடந்த மாதம் கூகுள் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் அடுத்த தலைமுறைக்கான கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மிக விரைவில் வெளியாகும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பிக்சல் ரசிகர்களுக்கு மாபெரும் உற்சாகத்தை கொடுத்தது.

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா?

கடந்த ஆண்டு வெளியான கூகுள் நிறுவனத்தின் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL ஸ்மார்ட்போன்களின் மாபெரும் வரவேற்பு பின்னர் இதன் அடுத்த வெர்ஷனை மிக ஆவலுடன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

கூகுள் நிறுவனத்தின் இரண்டாவது தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி வெளிவந்து கொண்டிருக்கும்போதே பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 என இரண்டு மாடல்களில் அடுத்த ஜெனரேஷன் ஸ்மார்ட்போன் வெளிவர உள்ளதாக அந்த அதிகாரி உறுதி செய்துள்ளார்.

ஆண்ட்ராய்டு O' வெர்ஷனில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

இந்த செய்தி வெளியான நிமிடத்தில் இருந்து இந்த புதிய மாடல்களுக்கான எதிர்பார்ப்பு இருமடங்காகி உள்ளது என்று கூறினால் அது மிகையில்லை

கூகுள் நிறுவனத்தின் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் XL ஸ்மார்ட்போன்களின் விமர்சனத்தை ஏற்கனவே பார்த்தோம். ஆனாலும் இந்த மாடல்களின் சிப்செட் சில விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 எந்த மாதிரியான புதிய டெக்னாலஜியை பெற்றிருக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்

தண்ணீரில் இருந்து முழு பாதுகாப்பு

தண்ணீரில் இருந்து முழு பாதுகாப்பு

ஸ்மார்ட்போனை கையில் வைத்து கொண்டு யாரும் நீச்சல் குளத்தில் குதிப்பதில்லை. இருப்பினும் தவறுதலாகவோ அல்லது மழையின்போதோ ஸ்மார்ட்போனில் தண்ணீர் படும்படி நேரிட்டால் பாதுகாக்கும் வகையிலாவது ஸ்மார்ட்போன்கள் இருக்க வேண்டும்.

அந்த வகையில் தண்ணீரில் இருந்து முழு பாதுகாப்பு அம்சத்தை கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 பெற்று இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. தண்ணீரில் இருந்து பாதுகாக்கும் இந்த அம்சம் கடந்த பிக்சல் மாடல்களில் இல்லை என்பது ஒரு பெரும் குறையாக இருந்தாலும் அடுத்த ஜெனரேஷன் மாடல்களில் நிச்சயம் வாட்டர் ரெசிஸ்டெண்ட் இருக்கும் என்று எதிர்பார்ப்போம்

எட்ஜ் டு எட்ஜ் டிஸ்ப்ளே கிடைக்குமா?

எட்ஜ் டு எட்ஜ் டிஸ்ப்ளே கிடைக்குமா?

கடந்த சில மாதங்களாக டூயல் கர்வ் எட்ஜ் டு எட்ஜ் டிஸ்ப்ளே மிக வேகமாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. சாம்சங் மற்றும் சியாமி நிறுவனங்கள் ஆரம்பித்து வைத்த இந்த டிரெண்ட் தற்போது பல நிறுவன ஸ்மார்ட்போனின் மாடல்களில் பரவி வரும் நிலையில் கூகுள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் இந்த வசதியை எதிர்பார்ப்பதில் தவறில்லை தானே. எனவே இந்த எட்ஜ் டு எட்ஜ் வசதி வரும் புதிய மாடல்களில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

எதிர்பார்க்கப்படும் கூகுள் அசிஸ்டெண்ட்:

எதிர்பார்க்கப்படும் கூகுள் அசிஸ்டெண்ட்:

ஆப்பிள் நிறுவனத்தின் சிறி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கோர்ட்டானா ஆகியவை போன்று கூகுள் நிறுவனத்தின் பதில் கூறும் சாப்ட்வேரான கூகுள் அசிஸ்டென்ண்ட் பிக்சல் போன்களில் புகழ் பெற்று விளங்கியது. இந்த சாப்ட்வேருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இதை பயன்படுத்த பல நிறுவனங்கள் வரிசையில் நிற்கின்றன.

ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு மிகப்பெரும் வசதியாக இருக்கும் இந்த அசிஸ்டெண்ட் மூலம் ஆப்ஸ் ஓப்பன் செய்வது, எஸ்.எம்.எஸ் டெக்ஸ்ட் செய்வது, போன் அழைப்பு செய்வது, விளையாட்டு மற்றும் மியூசிக்கை நிறுத்துவது அல்லது ஆன் செய்வது, டுவிட்டரில் டுவீட் போடுவது, சினிமா டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்வது உள்பட பல வேலைகளை நம்முடைய பெர்சனல் அசிஸ்டெண்ட் போல செய்து முடிக்கும். இந்த மிகப்பெரிய வசதி வரும் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 மாடல்களில் இடம்பெறும் என்று நம்புவோம்

கூடுதல் ஸ்டோரேஜ் கிடைக்குமா?

கூடுதல் ஸ்டோரேஜ் கிடைக்குமா?

கூகுள் பிக்சல் மாடல்களில் 32GB மட்டுமே இண்டர்னல் ஸ்டோரேஜ் இருந்தது. மேலும் ஸ்டோரேஜை அதிகரிக்க எஸ்டி கார்ட் வசதியும் இல்லை. மிக அருமையான கேமிராவை கொண்ட பிக்சல் போன்கள் மூலம் நாம் பார்க்கும் விதவிதமான இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து தள்ளுவதால் இந்த ஸ்டோரேஜ் பலருக்கு போதுமானதாக இல்லை.

எனவே கூகுள் டீம் இதனை கருத்தில் கொண்டு குறைந்தது 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் அளவுக்கு இந்த அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனை உருவாக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். அதுமட்டுமின்றி எஸ்டி கார்ட் வசதியும் கூடுதலாக வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை ஆகும்

வெர்ட்சுவல் ரியாலிட்டி வேண்டும்

வெர்ட்சுவல் ரியாலிட்டி வேண்டும்

லேட்டஸ்ட் டெக்னாலஜியான வெர்ட்சுவல் ரியாலிட்டி என்பதை விரும்பாத ஸ்மார்ட்போன் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். இந்த ஆண்டு வெளிவரவுள்ள பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் டேட்ரீம் வெர்ட்சுவல் ரியாலிட்டி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகள் கூகுள் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. எனவே பிக்சல் 2 ஸ்மார்ட்போன் மாடல்களில் நிச்சயம் வெர்ட்சுவல் ரியாலிட்டி வசதி இருக்கும் என்றே கருதப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Google Pixel 2 is releasing later this year and here are some features we expect to see in this phone such as water resistant build support for Daydream 2, new Google Assistant and more. Read more...

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X