Home
Mobile

ஆண்ட்ராய்டு O' வெர்ஷனில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

ஆண்ட்ராய்டு O' வெர்ஷனில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

By Siva

சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது அடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷன் ஆன 'ஆண்ட்ராய்ட் O' வெர்ஷனின் பிரிவியூவை ரிலீஸ் செய்தது. ஓரியோ என்பதன் சுருக்கம் தான் ஆண்ட்ராய்ட் O' என தற்போதைக்கு இந்த வெர்ஷன் அழைக்கப்பட்டு வந்தாலும் மிக விரைவில் இதன் அதிகாரபூர்வ பெயர் அறிவிக்கப்படவுள்ளது.

ஆண்ட்ராய்டு O' வெர்ஷனில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்

இந்த பிரிவியூ வெர்ஷன் மூலம் ஆண்ட்ராய்டு பயனாளிகள் பல விதங்களில் பயன்படும் வகையில் பல புதிய வித்தியாசமான வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் பயனாளிகளுக்கு ஆச்சரியத்தையும் புதிய அனுபவத்தையும் கொடுக்கும் என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் இல்லை.

கூகுள் மேப்ஸ் மூலம் லோக்கேஷன் ஷேர் செய்வது எப்படி.?

குறிப்பாக பிக்சர் இன் பிக்சர் மோட், ஃபைல் மேனேஜர் உள்பட ஒரு சில வசதிகள் பயனாளிகள் கனவிலும் எதிர்பாராத வசதிகள். தற்போது ஆண்ட்ராய்ட் O'-ல் என்னென்ன புதிய வசதிகள் இருக்கின்றது என்பது குறித்து பார்ப்போம்

நோட்டிபிகேசன்:

நோட்டிபிகேசன்:

ஸ்மார்ட்போனில் அலாரம் அடிக்கும்போது அதை சிறிது நேரம் தள்ளி வைக்கும் 'Snooze என்ற ஆப்சன் இருப்பது போல் நோட்டிபிகேசனிலும் இதுபோன்ற 'Snooze' வரவுள்ளது. எனவே நோட்டிபிகேசனை சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தோன்றும் போதும் பார்த்து கொள்ளலாம்..

மேலும் இதில் நமக்கு வரும் நோட்டிபிகேசனை நோட்டிபிகேசன் சேனல் என்ற வகையில் பிரித்து கையாண்டு கொள்ளலாம். உதாரணமாக சோஷியல் நெட்வொர்க்கில் இருந்து வரும் நோட்டிபிகேசனை தனியாக பிரித்து சோஷியல் நெட்வொர்க் சேனல் என்று வைத்து கொள்ளலாம். இந்த சேனலில் சோஷியல் நெட்வொர்க் நோட்டிபிகேஷன் தவிர வேறு எதுவும் இருக்காது.

பிக்சர் இன் பிக்சர்:

பிக்சர் இன் பிக்சர்:

ஒருசில மாடல் தொலைக்காட்சியில் இந்த வசதியை பலர் பார்த்திருக்கலாம். ஒரு மெயின் சேனல் ஓடிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு சேனலை அதன் மேலேயே வைத்து பார்க்கலாம்.

இந்த வசதிக்கு பெயர்தான் பிக்சர் இன் பிக்சர் என்று கூறப்படுவதுண்டு. இந்த வசதி தற்போது ஸ்மார்ட்போனிலு வரப்போகிறது. நீங்கள் யூடியூப் ஃபுளோட்டிங் வீடியோ சென்று ஒரு வீடியோவை பார்த்து கொண்டே இன்னொரு யூடியூப் வீடியோவையோ அல்லது வேறு ஆப்ஸ்களையோ பார்க்கும் வசதி கிடைக்கும்.

லாக் ஸ்க்ரீனிலும் கிடைக்கும் ஷார்ட் கட்:

லாக் ஸ்க்ரீனிலும் கிடைக்கும் ஷார்ட் கட்:

ஏற்கனவே பல மாடல் ஸ்மார்ட்போனில் ஹோம் பக்கத்தில் ஷார்ட் கட் ஆப்ஸ்கள் இருக்கின்றது என்பது தெரிந்ததே. இந்நிலையில் ஸ்க்ரீன் லாக்-இல் இருக்கும்போதும் ஒருசில ஷார்ட் கட் நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா. அதற்கு நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று ஸ்டார்ட் என்ற ஆப்-ஐ டவுண்லோடு செய்ய வேண்டு. இந்த ஆப் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் லாக்-இல் இருந்தாலும் ஒருசில முக்கிய ஆப்ஸ்களை ஷார்ட் கட் மூலம் பயன்படுத்தலாம்

ஐகானுடன் நோட்டிபிகேசனை பார்க்கலாம்

ஐகானுடன் நோட்டிபிகேசனை பார்க்கலாம்

ஐஓஎஸ் மாடல் போன்களில் இருப்பது போல தற்போது ஆண்ட்ராய்டு போனிலும் நோட்டிபிகேசனை ஆப்களின் ஐகான்களுடன் நோட்டிபிகேசனை பார்க்கலம். நோட்டிபிகேசனை படித்துவிட்டால் அந்த ஐகான்கள் மறைந்துவிடும். இந்த வசதியை பெறுவதற்கு நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று 'Notifyer' என்ற ஆப்-ஐ டவுண்லோடு செய்ய வேண்டும்

எளிதாக லான்ச் ஆப் செய்யலாம்:

எளிதாக லான்ச் ஆப் செய்யலாம்:

உங்கள் ஆண்ட்ராய்டு போன் லாக்கில் உள்ள நிலையில் நீங்கள் வைத்திருக்கும் ஆப்ஸ்கள் ஹோம் ஸ்க்ரீனில் தெரியும் வகையில் இருப்பதற்கு பெயர்தான் லான்ச் ஆப். ஆண்ட்ராய்டு நெளகட் மாடலில் மேல் நோக்கி ஒரே ஒரு ஸ்வைப் செய்தால் போதும் உங்கள் ஆப்ஸ்கள் தெரியும்.

ஆனால் இந்த ஆண்ட்ராய்டு ஓ வெர்ஷனில் நீங்கள் ஹோம் ஸ்க்ரீனில் எந்த இடத்தில் ஸ்வைப் செய்தாலும் லான்ச் ஆப் செயல்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே இதுவொரு எளிதான முறை ஆகும். ஒருவேளை உங்களது போனில் இந்த ஆப்சன் செயல்படவில்லை என்றால் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று App Swap drawer என்ற செயலியை டவுன்லோடு செய்து வைத்து கொண்டீர்கள் என்றால் மிக எளிதாக இருக்கும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Recently, Google released its preview edition of the upcoming Android O. While, we still don't know its official name, 'Oreo' has a good chance of making it to the top as per Android Head Hiroshi Lockheimer.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X