2016-ன் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்.!

ஒவ்வொரு பிரிவிலும் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது என்பதை பார்ப்போம்,

By Siva
|

சமீபத்தில் முடிந்த 2016ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தைக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில்தான் பெஸல் லெஸ் டிஸ்ப்ளே போன்கள், மாடுலர் போன்கள், அன்லிமிடெட் ஸ்டோரேஜ் போன்கள், டூயல் கேமிரா போன்கள் உள்பட பல புதுமையான மாடல்களில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.,

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஐஓஎஸ்)

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான அனைத்து போன்களின் விபரங்களையும் நாம் அவ்வப்போது பார்த்தோம். தற்போது ஒவ்வொரு பிரிவிலும் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது என்பதை பார்ப்போம்

அனைத்து வகையிலும் சிறந்த போன்கள்:

அனைத்து வகையிலும் சிறந்த போன்கள்:

இந்த வகையில் நாம் முதலில் தேர்வு செய்வது சாம்சங் கேலக்ஸி S7 மாடல் ஸ்மார்ட்போன் தான். கேமிரா, பேட்டரி லைஃப், அபாரமான டிஸ்ப்லே, டிசைன் ஆகிய அனைத்திலும் சிறந்தது இந்த போன் தான்.

இதனை அடுத்து நாம் தேர்வு செய்வது HTC 10. இந்த மாடலின் தரம், பேட்டரி, கேமிரா ஆகியவை அனைவராலும் சிறந்தது என்று ஏற்று கொள்ளப்பட்ட ஒன்று

சிறந்த கேமிரா ஸ்மார்ட்போன்:

சிறந்த கேமிரா ஸ்மார்ட்போன்:

கூகுள் பிக்சல் XL, சாம்சங் கேலக்ஸி S7, ஆப்பிள் ஐபோன் ப்ளஸ் ஆகியவை இந்த பிரிவுகளில் சிறந்த போன்களாக தேர்வு செய்யப்படுகின்றது.

2016ஆம் ஆண்டில்தான் முதன்முதலில் டூயல் கேமிரா வெளிவந்தது. அந்த வகையில் நம்பர் ஒன் நல்ல கேமிரா போனாக கூகுள் பிக்சல் விளங்குகிறது. கூகுளின் முதல் மாடல் போனாக இருந்து போட்டியில் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் இல்லை

கூகுள் பிக்சலை அடுத்து சாம்சங் கேலக்ஸி, ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் மாடல்களில் கேமிரக்களின் தரம் மிகவும் அபாரம் என்று வாடிக்கையாளர்களால் பாராட்டப்பட்டது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சிறந்த பேட்டரி லைஃப் உள்ள ஸ்மார்ட்போன்கள்

சிறந்த பேட்டரி லைஃப் உள்ள ஸ்மார்ட்போன்கள்

மோட்டோரோலா Z ப்ளே, லெனோவா Z ப்ளஸ், ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் ஆகிய மாடல்கள் அதிக நேரம் சார்ஜ் தரும் போன்கள் என்ற பிரிவில் வெற்றி பெறுகின்றன

ஸ்னாப்டிராகன் 625 பிராஸசரில் வெளிவந்த மோட்டோரோலா Z ப்ளே தொடர்ந்து 6 மணி நேரம் பயன்படுத்தலாம் என்ற அளவில் அதன் பேட்டரியின் தரம் இருந்தது. இதேபோல் லெனோவா Z ப்ளஸ் மாடல் மற்றும் ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் மாடல் ஆகியவை ஐந்து மணி நேரமும், சார்ஜ் நின்று சாதனை செய்தது

சிறந்த ஃபேப்ளட் போன்கள்

சிறந்த ஃபேப்ளட் போன்கள்

சாம்சங் கேலக்ஸி S 7 எட்ஜ், கூகுள் பிக்சல் XL, மற்றும் எல்.ஜி V20 ஆகிய போன்கள் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்கும் ஃபேப்ளட் போன்களாக தேர்வு செய்யப்பட்டுள்லது. டிஸ்ப்ளே, சைஸ், டிசைன், பேட்டரி லைப், கேமிராவின் தரம், டூயல் ஸ்க்ரீன், ஆகிய சிறப்பு அம்சங்கள் இந்த போன்களில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த டிசைன்களில் வெளிவந்த போன்கள்

சிறந்த டிசைன்களில் வெளிவந்த போன்கள்

2016ஆம் ஆண்டின் சிறந்த டிசைன் போன்கள் என்றால் மறுபடியும் சாம்சங் கேலக்ஸி S 7 மாடல்தான் ஞாபகம் வருகிறது. மேலும் சியாமி மி மிக்ஸ் டிசைனும் அபாரமாக இருந்தது.

கவனிக்கப்படாமல் மறந்து போன ஸ்மார்ட்போன்கள்

கவனிக்கப்படாமல் மறந்து போன ஸ்மார்ட்போன்கள்

நல்ல டிசைன், டூயல் கேமிரா, டீசண்ட்டான பேட்டரி ஆகிய அம்சங்கள் இருந்தும் சரியான விளம்பரம் இன்மை, அதிகளவான போட்டி ஆகியவை காரணமாக மறக்கடிக்கப்பட்ட போன்கள் ஹூவாய் P9, HTC 10, LG V20 ஆகிய மாடல் போன்கள்தான். மேற்கண்ட மாடல்கள் சரியாக போகாததால் விலையை குறைத்தபோதிலும் மக்கள் இடம் போய் சேரவில்லை என்பது ஒரு சோகமே

குறைந்த விலையில் நிறைந்த திருப்தி தரும் போன்கள்

குறைந்த விலையில் நிறைந்த திருப்தி தரும் போன்கள்

இந்த பிரிவில் நிச்சயமாக நாம் குறிப்பிடுவது ஒன்ப்ளஸ் 3T மாடல் போன் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதனை அடுத்து சியாமி மி 5, லெனோவா Z2 ப்ளஸ் மாடல்கள் உள்ளது.

ஆச்சரியம், அதிசயம் தரும் ஸ்மார்ட்போன்கள்

ஆச்சரியம், அதிசயம் தரும் ஸ்மார்ட்போன்கள்

சியாமி மி மிக்ஸ் போன் இந்த பிரிவில் முதலிடம் பெறுகிறது. அனைத்து சிறப்பு அம்சங்கள் இருந்தும் குறைவான விலையில் இந்த போன் கிடைப்பது ஒரு அதிசயமே. பெஸல் லெஸ் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே இதன் முதல் சிறப்பு. இதனை அடுத்து ஹூவாய் ஹனர் மேஜிக் இந்த பிரிவில் அடுத்த இடத்தை பெறுகிறது.

அதிருப்தி அளித்த ஸ்மார்ட்போன்கள்

அதிருப்தி அளித்த ஸ்மார்ட்போன்கள்

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு வெளிவந்த பின்னர் புஷ்வாணமாகி போன ஸ்மார்ட்போன் வரிசையில் முதலிடம் பெறுவது சாம்சங் கேலக்ஸி நோட் 7. இந்த மாடல் என்ன பாடுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இதனை அடுத்து ஆப்பிள் ஐபோன் 7, எல்.ஜி G5 ஆகிய மாடல்கள் இந்த பிரிவில் அடுத்தடுத்த இடங்களை பெறுகிறது

வித்தியாசமான டெக்னிகல் போன்

வித்தியாசமான டெக்னிகல் போன்

இந்த பிரிவில் முதலிடம் பிடிக்கும் மாடல் நெக்ஸ்ட்பிட் ராபின் மாடல்தான். மிக அதிகமான ஸ்டோரேஜை உடன் வந்த முதல் போன் இதுதான். இதனை அடுத்து மோட்டோரோலா மோட்டோ Z மாடல் மற்றும் எல்.ஜி G5 மாடல் போன்கள்

சிறந்த பட்ஜெட் போன்:

சிறந்த பட்ஜெட் போன்:

எல்லாம் ஓகே, ஆனால் எனக்கு குறைந்த விலையில் ஒரு நல்ல போன் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு கையை காட்டுவது சியாமி ரெட்மி நோட் 3 மாடல்தான். இந்த மாடல் விலையில் இதில் உள்ள வசதிகள் வேறு எந்த போனிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
2016 will be marked as the year which showed us smartphones in an entirely different. There are many phones released, but here are the top smartphones of 2016

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X