Home
How to

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஐஓஎஸ்)

உங்கள் ஐஓஎஸ் கருவியின் பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

By Muthuraj

நாம் தினசரி அடிப்படையில் நமது ஸ்மார்ட்போனில் டஜன் கணக்கான செயல்பாடுகளை நிகழ்த்துகிறோம் அதில் ஒன்று தான் யூ ட்யூப். யூட்யூபை பொருத்தமட்டில் நாம் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் அதாவது மிகவும் பயன்படும் மற்றும் தேவைப்படும் யூட்யூப்-இல் விடீயோக்களை பிண்ணனியில், அதாவது யூட்யூப் ஆப்பில் இருந்து வெளியேறி அனுபவிக்க இயலாது

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஐஓஎஸ்)

ஆனால் ஒரு எளிய தந்திரத்தை பின்பற்ற உங்கலின் ஐஓஎஸ் கருவியின் பிண்ணனியில் பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்யலாம்.

கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும் :

1. உங்கள் ஐஓஎஸ் சாதனத்தில் சபாரியை (ஆப்பிள் ப்ரவுஸர்) திறக்கவும்.
2. பின்னர் யூட்யூப் உள்நுளைந்து, நீங்கள் கேட்க விரும்பும் பாடல் தேர்வை நிகழ்த்தவும்.
3. இப்போது, பாடலை ப்ளே செய்துவிட்டு ஹோம் பொத்தானை அழுத்தவும்.
4. ஆப்அப்படி செய்த உடனேயே பாடல் தானாக நிறுத்தப்படும்.
5. இப்போது, ஸ்க்ரீனில் கீழிருந்து மேலாக ஸ்வைப் செய்து கன்ட்ரோல் சென்டர் திறக்கவும், பின்னர் ஸ்க்ரோல் செய்து அடுத்த பக்கம் சென்று அங்கு மியூசிக் ப்ளேபேக் கன்ரோல்ஸ் கண்டறியவும்.
6. அதன் பின்னர் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஸ்க்ரீனில் தோன்றும் ப்ளே பட்டனை அழுத்த வேண்டியது மட்டும் தான், அதை நிகழ்த்திய வேகத்தில் நிறுத்தப்பட்ட யூட்யூப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும்.

தமிழ் கிஸ்பாட் வழங்கும் மேலும் பல டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!

Best Mobiles in India

English summary
A Simple Trick to Play YouTube Audio in Background on iOS. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X