சாம்சங் கேலக்ஸி S8 vs ஆப்பிள் ஐபோன் 8 மாடல்களின் போட்டி அம்சங்கள்

இந்த இரண்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் வெடித்து சிதறுவதால் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது.

By Siva
|

கடந்த சில வருடங்களாகவே சாம்சங் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு நிறுவனங்களை அறிமுகம் செய்வதில் மட்டுமின்றி அவ்வப்போது இந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் வெடித்து சிதறுவதாலும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி S8 vs ஆப்பிள் ஐபோன் 8 மாடல்களின் போட்டி அம்சங்கள்

இந்த இரு நிறுவனங்களின் அடுத்த தயாரிப்புகளில் நிச்சயம் இந்த வெடி பிரச்சனை இருக்காது என்றே கருதப்படுகிறது. ஏனெனில் ஒருமுறைக்கு பலமுறை இந்நிறுவனங்கள் தங்களது அடுத்த தயாரிப்புகளை சோதனை செய்து வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு சாம்சங் கேலக்ஸ் 8 என்பதும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஆப்பிள் ஐபோன் 8 என்பதும் அனைத்து மொபைல் போன் பிரியர்களும் தெரிந்ததே

'அப்பட்டமாக' சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்றே இருக்கு, விலை மிக குறைவு.!

கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பான சாம்சங் கேலக்ஸ் 8 மாடலின் ரகசியம் வெளிவராதவாறு பாதுகாத்து வருகிறது. அதே நேரத்தில் தனது போட்டியாளரின் அடுத்த தயாரிப்பை அறியவும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களின் அடுத்த தயாரிப்புகள் குறித்து வெளிவந்துள்ள ஒருசில வதந்திகளை தற்போது பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி 8 மாடலின் புதுவித ஐடியா

சாம்சங் கேலக்ஸி 8 மாடலின் புதுவித ஐடியா

சாம்சங் கேலக்ஸ் 8 மாடலில் இன்னொரு முறை வெடிக்கும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகவும், இழந்த மார்க்கெட் மற்றும் நன்மதிப்பை மீண்டும் பெறுவதற்காகவும், இந்த பாடலில் புதுவித ஐடியாக்களை செயல்படுத்தியுள்ளார்களாம். அவற்றில் ஒன்று AI என்று சொல்லப்படும் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் என்ற முறை. இந்த வசதி இன்னும் ஆப்பிள் ஐபோன் கூட அறிமுகம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

AI எப்படி செயல்படும் தெரியுமா?

AI எப்படி செயல்படும் தெரியுமா?

விரைவில் வெளிவரவுள்ள சாம்சங் கேலக்ஸ் 8 மாடலில் இரண்டு விதமான AI அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆண் AI என்று கூறப்படும் அமைப்பிற்கு பிக்ஸ்பை என்றும், பெண் AI என்று கூறப்படும் வகைக்கு கேஸ்ட்ரா என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

ஆப்பிள் ஐபோனில் இதேபோன்று AI வசதி இருந்தாலும் இது முற்றிலும் வித்தியாசமான ஆப்பிள் பயனாளிகளுக்கு அறிமுகம் ஆகாத ஒன்று என்று கூறப்படுகிறது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய உத்தி

சாம்சங் நிறுவனத்தின் புதிய உத்தி

இந்த AI ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியிருந்தாலும் ஏற்கனவே வந்தது போல டிரேட்மார்க் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக சாம்சங் நிறுவனம் இந்த புதிய AI வசதியை தென்கொரியா மற்றும் ஐரோப்பிய யூனியனில் வெளியிடும்போது டிரேட்மார்க் உரிமை பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் 8-ல் என்னென்ன மாற்றம்?

ஆப்பிள் ஐபோன் 8-ல் என்னென்ன மாற்றம்?

புதிய OLED டிஸ்ப்ளே உள்பட பல்வேறு புதிய மாற்றங்களை ஆப்பிள் ஐபோன் கொண்டு வரவுள்ளது. பத்தாவது ஆண்டில் காலெடுத்து வைக்கும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளிவந்த மாடல்களிலேயே பெஸ்ட் மாடலாக இந்த ஆப்பிள் ஐபோன் 8 மாடல் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சாம்சங் நிறுவனம் பல புதிய வசதிகளையும் ஆப்பிள் நிறுவனம் பல புதிய கேம்ஸ்களுடன் மார்க்கெட்டில் களமிறங்க உள்ளதால் வரும் 2017ஆம் ஆண்டு புதிய மொபைல் போன் வாங்குபவர்களுக்கு இரண்டில் எதை தேர்வு செய்வது என்பது ஒரு சவாலான காரியம் என்பதில் சந்தேகம் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here's how Samsung is working to take on Apple's iPhone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X