Subscribe to Gizbot

'அப்பட்டமாக' சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்றே இருக்கு, விலை மிக குறைவு.!

Written By:

சாம்சங் கேலக்ஸி வரிசையில் வெளியான எஸ்6 எட்ஜ் மற்றும் எஸ்7 எட்ஜ் கருவிகள் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவிலான ஆர்வத்தை கிளப்பியது அதற்கு முக்கிய காரணமாக அக்கருவிகளின் வளைந்த டிஸ்ப்ளே மற்றும் அனைத்து பக்கங்களிலும் குறைந்த அளவிலான உளிச்சாயுமோரம் கொண்ட வடிவமைப்பு ஆகியவைகளை குறிப்பிட்டு கூறலாம்.

அக்கருவிகளின் அம்சங்கள் ஒருபக்கம் அசத்தலாய் இருக்க மறுபக்கம் அக்கருவிகளின் விலை பலருக்கும் அதை வாங்க மாபெரும் இடையூறாக உள்ளது. சாம்சங் ரசிகர்கள் இக்கருவியின் விலையை மனதிற்கொண்டு இக்கருவிகளை வாங்க வாங்க தயக்கம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி இதே போன்ற பிரிவிலான வன்பொருள் கொண்டு குறைந்த விலையில் சில சாதனங்கள் ஏற்கனவே ஹை-எண்ட் அம்சங்கள் மற்றும் நல்ல செயல்திறன் கொண்டு இன்று சந்தையில் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாங்க முடியவில்லை

வாங்க முடியவில்லை

அப்படியான கருவிகளில் ஒன்று தான் ப்ளூபூ எட்ஜ், நீங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியின் ஒரு உண்மையான ரசிகர் ஆனால் அதை உங்களால் வாங்க முடியவில்லை அல்லது நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனிற்காக நிறைய பணம் செலவழிக்க விரும்பவில்லை என்றால், உங்களுக்கு சரியா சாய்ஸ் - ப்ளூபூ எட்ஜ் கருவிதான்..!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அப்பட்டமாக

அப்பட்டமாக

ப்ளூபூ எட்ஜ் ஆனது சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் வடிவமைப்பை அப்பட்டமாக நினைவூட்டுவதாக உள்ளது. ஸ்மார்ட்போனின் இடது மற்றும் வலது பக்கம் இரண்டுமே வளைந்த டிஸ்ப்ளே மற்றும் உண்மையிலேயே குறைந்தபட்ச அளவிலான உளிச்சாயுமோரம் வடிவமைப்பு கொண்டுள்ளது. அதாவது சாம்சங் நிறுவனத்தின் எஸ்7 எட்ஜ் போன்றே.!

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போலவே இக்கருவி கொரில்லா கிளாஸ் 4 0.8 மிமீ மெல்லிய பெசல்களில் மூலம் விளிம்பிடப்பட்ட பாதுகாக்கப்படுகின்றது. ஐபிஎஸ் ஓஜிஎஸ் பேனல் கொண்ட ஒரு 5.5-அங்குல டிஸ்ப்ளே, ஆனால் 1280 x 720 பிக்சல்கள் மட்டுமே கொண்ட எச்டி திரை ஆகியவைகளை கொண்டுள்ளது. இதன் டுவல் லேயர் பேனல் ஆனது 5 பாயிண்ட் மல்டி டச் பேனல் கொண்டுள்ளதால் ஒரே நேரத்தில் ஐந்து விரல்கள் வரையிலான கண்டறிதலை இக்கருவி அனுமதிக்கிறது உடன் இக்கருவியை ஈரமான விரல்களால் அல்லது கையுறைகள் மாட்டிக்கொண்ட விரல்களால் கூட இயக்கலாம்.

ஹோம் பட்டன்

ஹோம் பட்டன்

இக்கருவியின் உற்பத்தியாளர் வடிவமைப்பு மற்றும் காட்சி அடிப்படையில் மட்டுமல்லாமல், ஹோம் பட்டனில் கூட கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியின் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளது. ப்ளூபூ ஒரு சிங்கிள் பட்டன் நேவிகேஷன் மற்றும் பில்ட் இன் ஸ்மார்ட் டச் சென்சார் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது.

க்வாட் கோர் மீடியா டெக்

க்வாட் கோர் மீடியா டெக்

இந்த ஸ்மார்ட்போன் ஒரு 1.4 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் சிபியூ மற்றும் ஒரு 600 மெகா ஹெர்ட்ஸ் டுவல் கோர் மாலி டி720 எம்பி2 ஜிபியூ கொண்ட ஒரு க்வாட் கோர் மீடியா டெக் 6737 செயலி மூலம் இயக்கப்படுகின்றது உடசன் 2ஜிபி ரேம், 16 ஜிபி வரை உள் நினைவகம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் விரிவாக்கக்கூடிய வசதி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

கேமிரா துறையை பொருத்தவரை சோனி கேமராக்கள் சென்சார் கொண்ட ஒரு 13 எம்பி முதன்மை கேமிரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமிரா, இரண்டு சிம் அட்டை, ப்ளூடூத், ஜிபிஎஸ், வைஃபை மற்றும் சில எல்டிஇ நெட்வொர்க்குகள் ஆதரவு, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது

விலை

விலை

ப்ளூபூ கருவியின் விலை சுமார் ரூ. 9,500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் வாரத்திலேயே 30,000 ப்ரீ ஆர்டர் பதிவு செய்துள்ளது என்கிறது ஒரு தகவல். விலை அடிப்படையில் பார்த்தல் ஒரு மிக நியாயமான விலையில் ஒரு உயர் தரம் மற்றும் புதுமையான ஸ்மார்ட்போன் தான் இது என்பதில் சந்தேகமில்லை மற்றும் ப்ளூபூ நிச்சயமாக சீனாவை சார்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

போட்டியாளர்களை 'லெஃப்ட் & ரைட்' வாங்கப்போகும் லெனோவா ப்ஹாப் 2.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
This Smartphone is an Exact Copy of Samsung Galaxy S7 Edge. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot