Home
Mobile

போட்டு தாக்கும் OnePlus.. போன வருஷம் வந்த மாடல் மீது திடீர் விலைக்குறைப்பு.. எல்லாம் புது Phone வரும் நேரம்!

ஒன்பிளஸ் நிறுவனமானது கூடிய விரைவில் - ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) என்கிற - புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில், கடந்த ஆண்டு அறிமுகமான இன்னொரு பட்ஜெட் விலை மாடலின் மீது திடீர் விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். அறியாதோர்களுக்கு இது ரூ.20,000 என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாகும். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஏப்ரல் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

போன வருஷம் அறிமுகமான OnePlus மாடல் மீது திடீர் விலைக்குறைப்பு!

தற்போது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் மீது ரூ.2,000 என்கிற விலைக்குறைப்பு (Price Cut) அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் (Storage Options) மீதும் இந்த விலைக்குறைப்பு கிடைக்கிறது.

பழைய விலை VS புதிய விலை: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஆனது 6ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 128ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.21,999 க்கு அறிமுகமானது. தற்போது ரூ.2000 என்கிற விலைக்குறைப்பிற்கு பின்னர் 6ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.19,999 ஆக குறைந்துள்ளது. இந்த இரண்டுமே ப்ளூ டைட் மற்றும் பிளாக் டஸ்க் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி-யின் புதிய விலை நிர்ணயம் ஒன்பிளஸ்.இன் (OnePlus.in) மற்றும் அமேசான்.இன் (Amazon.in) ஆகிய இரண்டிலுமே பிரதிபலிக்கிறது.

முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 x 2412 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்ட 6.59-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ (Android 12 OS) அடிப்படையாக கொண்ட ஒன்பிளஸின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 12.1 உடன் வரும் இந்த நோர்ட் சீரீஸ் மாடலானது மைக்ரோஎஸ்டி கார்டிற்க்கான ஆதரவையும் (MicroSD Card Support) கொண்டுள்ளது. இதை பயன்படுத்தி இன்டர்னல் ஸ்டோரேஜை 1டிபி வரை விரிவாக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 64எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளன. முன்பக்கத்தில், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா உள்ளது

டூயல் சிம் (Dual SIM) ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நீண்ட கால பயன்பாட்டை உறுதி செய்யும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. கடைசியாக இது அது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) ஆதரவையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
First OnePlus Phone Launched Under Rs 20000 Budget OnePlus Nord CE 2 Lite 5G Gets Rs 2000 Price Cut
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X