இனி நாங்களும் OnePlus வாங்குவோம்ல.. பட்ஜெட் வாசிகளை குஷிப்படுத்தும் விலையில் புது மாடல்.. ரெடியா இருங்க!
நாட்டில் உள்ள பட்ஜெட் வாசிகளை குஷிப்படுத்தும் வண்ணம், ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது அதன் அடுத்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்துள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? அது எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:
என்ன ஸ்மார்ட்போன், எப்போது அறிமுகமாகும்? நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் நார்ட் 3 (OnePlus Nord 3) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஒன்பிளஸ் நிறுவனமானது இந்த போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, அதிகாரப்பூர்வ டீஸர் வெளியாகிவிட்டதால், இது வரும் நாட்களில் அல்லது வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 3 என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனானது 1.5கே ரெசல்யூஷனை கொண்ட 6.74 இன்ச் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். ரெஃப்ரெஷ் ரேட்டை (Refresh Rate) பொறுத்தவரை, மற்ற நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இருப்பது போலவே 120ஹெர்ட்ஸ் இடம்பெறலாம்.
ஒன்பிளஸின் இந்த புதிய ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் (MediaTek Dimensity 9000 SoC) மூலம் இயக்கப்படலாம். அறியாதோர்களுக்கு இதுவொரு ஃபிளாக்ஷிப்-கிரேடு சிப்செட் ஆகும்; நினைவூட்டும் இதே சிப்செட் தான் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் பேட்டிலும் (OnePlus Pad) உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை (50MP Main Camera) உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) செட்டப்பை பேக் செய்யலாம். இதில் 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கேமராவும் சேர்க்கப்படலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம்.
சுவாரசியமாக, ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனில் அலர்ட் ஸ்லைடர் (Alert Slider) அம்சம் தக்கவைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர்த்து, ஒன்பிளஸ் நோர்ட் 3 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் அனுப்பப்படலாம். ஏனென்றால் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) இன்னும் வெளிவரவில்லை.
கடைசியாக, ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனானது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை (Fast Charging Technology) ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை பேக் செய்யலாம். நாம் மேற்கண்ட எல்லா அம்சங்களுமே லீக்ஸ் தகவல்களை அடிப்படையாக கொண்டது; அதிகாரபூர்வமான தகவல்கள் அல்ல என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்.
ஒன்பிளஸ் நோர்ட் 3 என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது ரூ,30,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிறுவனத்தின் மற்ற நோர்ட் சீரீஸ் போன்களை போலவே இதுவும் பட்ஜெட் வாசிகளை குறிவைத்து வெளியாகும் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications