ஃபேஸ்புக் போன் அறிவிப்பு...எதை எதிர்பார்க்கலாம்?

நேற்று அமெரிக்காவில் ஃபேஸ்புக் நிறுவனம் 'நியூ ஹோம் ஆன் ஆன்ட்ராய்டு' என்ற சிறப்புநிகழ்ச்சியை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடத்தி முடித்தது. இதில் ஃபேஸ்புக் புதிய போனை ஹெச்டிசி நிறுவனத்துடன் இனைந்து வெளியிடப்போவது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஃபேஸ்புக் போனானது 'பர்ஸ்ட்' என அழைக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி ஃபேஸ்புக் தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
நேற்றைய சிறப்பு நிகழ்ச்சியின் சாராம்சம்...கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படும் மொபைல் போன்களுக்காகவே பிரத்யோகமாக ஃபேஸ்புக் இயங்குதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயங்குதளத்திற்கு மேல், மற்றொரு இயங்குதளமா? என்றொரு கேள்வியும் எழுகிறது. ஆனால் இந்த புதிய மென்பொருளை ஃபேஸ்புக் நிறுவனம் 'ஃபேஸ்புக் இயங்குதளம்' என்றே குறிப்பிடுகிறது. இதை தங்களுடைய ஹெச்டிசி போனில் செயல்படுத்தியும் காட்டியுள்ளது.
அதிக பேட்டரி திறன்கொண்ட ஸ்மார்ட்போன்களில் சில...
ஃபேஸ்புக் தளத்தை மொபைல் போன்களில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டும் மாதத்திற்கு 68 கோடிகளாம். எனவே, ஃபேஸ்புக் பக்கங்களை சாதாரணமாக மட்டும் பயன்படுத்தாமல் சற்றே வித்தியாசமாகவும், கணினிகளில் பயன்படுத்துவது போன்ற உணர்வையும் தரவிருப்பதாக ஃபேஸ்புக் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் இன்டர்நெட் ஆய்வாளர்களின் கருத்தோ வேறுவிதமாகவே உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் மொபைல் போன்கள் வழியாகவும் பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளது. அதன் முதல்கட்டமே இது! என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
உங்களோட ஃபேஸ்புக் கணக்கை பத்திரமா வைக்க...நச்சுனு சில டிப்ஸ்...


Click it and Unblock the Notifications