விரைவில் வெளியாகவுள்ள நோக்கியா D1C மாடல் உள்பட 3 புதிய மாடல்கள் குறித்து ஒரு பார்வை
ஒருகாலத்தில் செல்போன் என்றாலே நோக்கியோ என்றுதான் அர்த்தம். நோக்கியோ போனை தவிர வேறு மாடல்களையே தெரியாத மக்களும் ஒருகாலத்தில் இருந்தனர்.

ஆனால் நாளடைவில் நோக்கியாவிற்கு பின்னடைவு ஏற்பட பல நிறுவனங்கள் நோக்கியாவை பின்னுக்கு தள்ளிவிட்டன. இருப்பினும் இன்று நோக்கியாவுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை
அமேசான் நிறுவனத்தில் மட்டும் கிடைக்கும் டாப் 10 எக்ஸ்குளூசிவ் ஸ்மார்ட்போன்கள்
இந்நிலையில் மீண்டும் நோக்கியா நிறுவனம் ஒரு பிரமாண்டமான ரீஎண்ட்ரிக்கு தயாராகி வருகிறது. ஸ்மார்ட்போன் உலகில் அனைவரையும் அசர வைக்கும் வகையில் நோக்கியா D1C என்ற மாடலை அந்நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மாடல் மட்டுமின்றி மேலும் இரண்டு புதிய மாடல்கள் என மொத்தம் மூன்று வகை புதிய மாடல் போன்களை நோக்கியா வெளியிட திட்டமிட்டுள்ளது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் 64 பிட் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 3GB ரேம், 32GB இண்ட்ர்னல் ஸ்டோரேஜ், ஃபுல் HD ஸ்க்ரீன், மற்றும் அட்ரெனோ 505 GPU ஆகிய சிறப்பு அம்சங்கள் உள்ளன. நோக்கியா D1C மட்டுமின்றி மேலும் இரண்டு புதிய மாடல்களையும் நோக்கியா அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களூம் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் உள்ளவை என்றும் கூறப்படுகிறது,. மேலும் இந்த இரண்டு மாடல்களில் குவாட் HD டிஸ்ப்ளே, 5.2/5.5 இன்ச் டிஸ்ப்ளே, மற்றும் 22.6 எம்பி பிரைமரி கேமிரா மற்றும் 4K வீடியோ ரிகார்டிங் வசதி ஆகியவையும் உண்டு, புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள் நோக்கியா D1C உள்பட மூன்று வகை ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 7.0 வகை என்றும் இதனால் இந்த மாடல்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாம் எதிர்பார்த்த, எதிர்பார்க்காத இன்னும் பல வசதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,000 இருக்கலாம் என்றும் அதுமட்டுமின்றி ரூ.20,000 விலையிலும் புதிய மாடல்கள் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மூன்று வகை மாடல்களும் இவ்வருட இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது உறுதி செய்யப்படவில்லை. மிக விரைவில் இந்த மாடல்கள் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள் 
நோக்கியா D1C-இல் அப்படி என்னதாம்பா இருக்குது?

மேலும் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள்:

ஆண்ட்ராய்டிலும் 7.0

அதெல்லாம் சரிங்க சார்? விலை என்ன?


Click it and Unblock the Notifications