கூகுளின் பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் இந்த தகவல்களை நீங்கள் தெரிந்தே ஆக வேண்டும்

By Siva
|

உலகின் நம்பர் ஒன் தேடுதள நிறுவனமான கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையிலும் கடந்த் ஆண்டு காலடி எடுத்து வைத்தது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான பிக்சல் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு வெளிவந்தது.

கூகுளின் பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் இந்த தகவல்களை நீங்கள் தெரிந்தே ஆக

கடந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ் சீரியஸ் மற்றும் ஆப்பிள் ஐபோனின் லேட்டஸ்ட் மாடல் ஆகியவை காரணமாகவும், பிக்சல் ஸ்மார்ட்போன் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலாக இருந்த காரணத்தாலும் மந்தமான வரவேற்பையே பெற்றது. ஆனால் இந்த போனில் உயர்தர அம்சங்கள் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் தயாரிப்பிற்கு இறுதி வடிவம் கொடுத்து வருவதாகவும் இவ்வருடம் கண்டிப்பாக பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வெளிவருவது உறுதி என்றும் கூறியுள்ளது. இதனால் இந்த போன் வருமா? வராதா? என்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

19எம்பி கேம், 4ஜிபி ரேம் கொண்ட சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ்.!

மேலும் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 2 குறித்து கூறியபோது, 'முதல் மாடல் போலவே இந்த இரண்டாவது மாடலும் உயர்தரத்தை விரும்பும் பயனாளிகளை மட்டுமே குறிவைத்து தயாரிக்கப்பட்டு வருவதால் விலையும் பிக்சல் 1 விலையை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் தகவல்களை பார்ப்போம்

பிக்சல் 2 டிசைன் எப்படி இருக்கும்?

பிக்சல் 2 டிசைன் எப்படி இருக்கும்?

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் டிசைனை பொருத்தவரை முதல் மாடலில் இருந்தது போல் இல்லாமல் டிசைனை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த மாடலில் பாதி மெட்டல் மற்றும் பாதி கண்ணாடி என்ற வகையில் டிசைன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த மாடல் IP67 தரத்துடன் வெளிவர இருப்பதாகவும் இதன் காரணமாக நீங்கள் உங்கள் பிக்சல் 2 போனை ஒரு மீட்டர் ஆழத்தில் உள்ள தண்ணீரில் போட்டாலும் எந்த வகையான சேதாரமும் ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

பிராஸசரின் புதுமை இருக்குமா?

பிராஸசரின் புதுமை இருக்குமா?

இந்த புதிய கூகுள் பிக்சல் 2 மாடல் ஸ்மார்ட்போனின் பிராஸசர் லேட்டஸ்ட்டாக இருக்கும் என்பதை கூறவே தேவையில்லை. குவால்கோமின் லேட்டஸ்ட் படைப்பான ஸ்னாப்டிரானன் 835 SoC சிப்செட் இந்த மாடலில் இருக்கும் என்று கசிந்துள்ள தகவலின்படி தெரிகிறது.

இதன்மூலம் ஏற்கனவே குவால்கோம் ஸ்னாப்டிராகன் பட்டியலில் உள்ள சாம்சங் மற்றும் சோனி நிறுவனத்துடன் கூகுளும் இணைகிறது. அடுத்ததாக ரேம் குறித்து பார்த்தால் 4GB மற்றும் 6GB என இரண்டு வித மாடல்களிலும், இண்டர்னல் ஸ்டோரேஜ் 32 GB முதல் 256 GB வரையிலும் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.2,999/-க்கு ஸ்வைப் கனெக்ட் நியோ 4ஜி.!ரூ.2,999/-க்கு ஸ்வைப் கனெக்ட் நியோ 4ஜி.!

வாடிக்கையாளர்களை அசத்துமா பிக்சல் 2 கேமிரா?

வாடிக்கையாளர்களை அசத்துமா பிக்சல் 2 கேமிரா?

கூகுள் பிக்சல் முத தயாரிப்பிலேயே அதிநவீன DXOMark செட்டிங் உடன் கூடிய கேமிரா இருந்தது. இந்த கேமிரா அனைத்து தரப்பினர்களையும் ஆச்சரியப்படுத்தியது போலவே இந்த இரண்டாவது மாடலான பிக்சல் 2 மாடலிலும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு கேமிரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்சல் 2 மாடலின் கேமிராவுக்காக கூகுள் நிறுவனத்தின் டீம் மிகவும் சிரத்தையுடன் ஆலோசித்து வருவதாகவும், வெளிச்சம் குறைவான அல்லது இருளிலும் கூட பளிச்சென இருக்கும் வகையிலான கேமிராவை உருவாக்க இந்த டீம் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அதெல்லாம் சரிங்க பாஸ்? என்ன விலை அதை சொல்லுங்க!!

அதெல்லாம் சரிங்க பாஸ்? என்ன விலை அதை சொல்லுங்க!!

இதுவரை இந்த மாடலின் சரியான விலை குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் இதில் அடங்கியுள்ள உயர்தர நவீன பிராஸசரை கொண்டு யூகிக்கும்போது நிச்சயம் இந்த மாடல் ரூ.50 ஆயிரத்தை விட அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த மாடலின் விலை குறைவாக இருக்க வேண்டும் என்று பயனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் எப்படி இருந்தாலும் கண்டிப்பாக ரூ.45,700க்கு குறையாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Rebranding the Nexus smartphone, the search engine giant Google launched its first Pixel smartphones in two variant under high-segment last year.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X