19எம்பி கேம், 4ஜிபி ரேம் கொண்ட சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ்.!
இன்று இந்தியாவில் வெளியாகிறது.!
ஜப்பானிய மின்னணு நுகர்வோர் ன் நிறுவனமான சோனி இன்று (திங்கள்) புது தில்லியில் நடக்கும் நிகழ்ச்சியில், அதன் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிகு தொடங்கும்.
நினைவூட்டும் வண்ணம் இந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் முதலில் நிகழ்ந்து முடிந்த எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது இக்கருவியுடன் இணைந்து எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம், எக்ஸ்பீரியா ஸ்எக்ஸ்ஏ1 மற்றும் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

டிஸ்ப்ளே
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் அடிப்படையில் ஒரு 5.2 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) ட்ரைலூமினஸ் (Triluminos) டிஸ்ப்ளே கொண்ட ஒரு கருவியாகும்.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்
இது சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் ஸ்மார்ட்போனின் ஒரு சிறிய மாற்று ஆகும். ஒற்றை சிம் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும். ஆனால் சோனி இந்தியாவில் இரட்டை சிம் மாறுபாடு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

செயலி
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் கருவியானது அட்ரெனோ 510 ஜிபியூ மற்றும் 4ஜிபி ரேம் இணைந்த க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 820 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

சேமிப்புத்திறன்
32ஜிபி மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறன் கொண்ட இக்கருவி 256ஜிபி வரையிலாக மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழியாக நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.

19 மெகாபிக்சல்
ஒளியியல் துறையை பொறுத்தமட்டில் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் ஸ்மார்ட்போன் 19 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் செல்பீகளுக்கான 13 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி
ஒரு 2900எம்ஏஎச் பேட்டரி கொண்ட இக்கருவி அளவீட்டில் 146x72x8.1 மிமீ மற்றும் 161 கிராம் எடையுடையது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வைஃபை 802.11, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் + ஜிஎல்ஒஎன்அஎஸ்எஸ், என் என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப் சி (யுஎஸ்பி 3.1) போர்ட் ஆகியவைகள் இருக்கும்.

சென்சார்கள்
அக்கசலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கிரையோஸ்கோப், மேக்னட்டோ மீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி ஆகிய சென்சார்கள் கொண்ட இக்கருவி ஐஸ் ப்ளூ, வார்ம் சில்வர் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

மேலும் படிக்க
சூடுபிடிக்கும் ஆட்டம் : நோக்கியா, ஆப்பிளுக்கு சாம்சங் சரியான பதிலடி.!


Click it and Unblock the Notifications
