ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏற்படும் ஆபத்தான ரிஸ்க்குகள்
உலகின் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ஆப்பிள் நிறுவனம் குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன.
உலகின் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ஆப்பிள் நிறுவனம் குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த செய்திகள் அதன் புதிய தயாரிப்பு பற்றியது அல்ல, ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இந்த போனில் உள்ள பல நெகட்டிவ் அம்சங்கள் அனைவரியும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த அலாவுதீன் பூதம் ரெடி : ஜியோ வெல்கம் ஆஃபர் 2 டிசம்பரில் அறிமுகம்.!?
குறிப்பாக நாம் பேசும் உரையாடல்கள், அனுப்பும் புகைப்படங்கள் ஆகியவை ரிகார்ட் செய்யப்படுவதாகவும், நம்முடைய பெர்சனல் விபரங்களை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
ஜியோவை ஓரங்கட்டுங்க, ஆர்காம் அதிரடியை கொஞ்சம் கவனியுங்க.!
எனவே ஒரு ஆண்ட்ராய்டு போனை கழட்டி விட்டுவிட்டு ஆப்பிள் ஐபோனை நீங்கள் மாற்ற முடிவு செய்திருந்தால் அது தற்போதைய நிலைமைக்கு நல்ல முடிவு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இனி ஆப்பிள் ஐபோன்கள் குறித்த நெகட்டிவ் விஷயங்களை பார்ப்போம்;

உங்கள் பெர்சனல் விஷயங்கள் ரகசியமாக ரிகார்டு செய்யப்படுகிறது
ஆப்பிள் ஐபோன் பயனாளிகளின் பெர்சனல் விஷயங்களை பாதுகாப்பதில் உள்ள நம்பகத்தன்மையை இழந்துள்ளது. சமீபத்தில் ரஷ்யாவின் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்று ஆப்பிள் நிறுவனம் செய்யும் இதுபோன்ற முறைகேடுகளை அப்பட்டமாக வெளியேற்றியுள்ளது.

வீடியோ அழைப்புகளிலும் பாதூகாப்பு இல்லை
வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகளை வாட்ஸ் நிறுவனமே ரிகார்டு செய்ய முடியாத டெக்னாலஜியை பயன்படுத்தி வரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் வாட்ஸ் அப், ஃபேஸ் டைம், ஸ்கைப் போன்ற வீடியோ அழைப்புகளில் நாம் பேசும் விஷயங்களை ரிகார்டு செய்வதாக திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நம்முடைய புகைப்படங்கள் ஆப்பிள் சர்வரில் பாதுகாக்கப்படுகின்றதா?
நம்முடைய அழைப்புகள், வீடியோ அழைப்புகளை ரகசியமாக பதிவு செய்வது மட்டுமின்றி நாம் உபயோகப்படுத்தும் ஐபோனில் உள்ள புகைப்படங்களும் ஆப்பிள் சர்வரில் சேமித்து வைக்கப்படுவதாக Inquisitr, ElcomSoft ஆகிய நிறுவனங்கள் அடித்து கூறுகின்றன. நாம் டெலிட் செய்த புகைப்படங்களையும் ரிகவரி செய்து சர்வரில் சேமித்துவிடும் தன்மை இருப்பதாகவும், இதனால் நம்முடைய தனித்தன்மையே கேள்விக்குறி ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆப்பிள் ஐபோனால் நோயும் ஏற்படுமா?
இந்த ஐபோன்களால் நம்முடைய பெர்சனல் விஷயங்கள் பறி போகின்றதே என்ற மன அழுத்தம் மட்டுமின்றி நம்முடைய உடல்நலனுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த போனை அடிக்கடி டச் செய்வதால் கைவிரலில் அலர்ஜி ஏற்படுவதாக புகார்கள் வெளிவந்துள்ளது. இந்த குறைக்கு தீர்வு காண ஆப்பிள் நிறுவனம் முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஹேக்கர்களின் நண்பனாமே ஐபோன்
iOS போன்கள் பயன்படுத்துபவர்களின் விபரங்களை ஹேக்கர்கள் எடுப்பது மிக எளிதாம். இதனால் நம்முடைய போன் ஆஃப் நிலையில் இருந்தாலும் ஹேக்கர்கள் நம்முடைய ஐபோனில் புகுந்து நம்முடைய டேட்டாக்களை வாரிக்கொள்ளும் வகையில் தொழில்நுட்பம் இருப்பதால் இது ஹேக்கர்களின் நண்பனாக கருதப்படுகிறது
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications