Home
News

அடுத்த அலாவுதீன் பூதம் ரெடி : ஜியோ வெல்கம் ஆஃபர் 2 டிசம்பரில் அறிமுகம்.!?

ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆஃபர் 2 ஆனது வரும் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By Muthuraj

முதல் பாகம் வெற்றி அடைந்தால் அதனை தொடர்ந்து இரண்டாம் பாகங்கள் எடுக்கப்படுவது திரைப்படத்துறையில் சகஜமே. ஆனால், எல்லா இரண்டாம் பாகங்களும், முதல் பாகத்தை போன்றே வெற்றி பெற்றுவிடுவதில்லை. இந்த விதி சினிமாத்துறையில் செல்லுபடியாகி நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தொலைத்தொடர்பு துறையில் பார்த்திருப்போமா..? விரைவில் பார்ப்போம்..!

அதுவும் சிம் கார்ட் உட்பட அனைத்தையும் இலவசமாக அள்ளிவழங்கி பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஆக்கிரமிப்பு செய்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் இரண்டாம் பாகம் மேட்டரையும் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது டிசம்பர் மாத இறுதியோடு முடிவடையும் அதன் வெல்கம் ஆஃபரின் இரண்டாம் பகுதி டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்கப்படும் என்றும், அந்த வெல்கம் ஆஃபர் 2 ஆனது அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் என்ற தகவல்கள் அலாவுதீன் பூதமாய் கிளம்பி உள்ளது.

குழப்பமான யூகம்

குழப்பமான யூகம்

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் இன்னும் நிலுவையில் இருக்கிற அதேவேளைவில், வெல்கம் ஆஃபர் 2 வாய்ப்பு வழங்கப்படும் மற்றும் அந்த வாய்ப்பு மேலும் 90 நாட்கள் செல்லுபடியாகும் என்ற யூகங்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன. அது நிச்சயமாக ஒரு குழப்பமான யூகம் தான். அந்த குழப்பமான யூகம் பற்றி இதுவரை எங்களுக்கு கிடைத்த ஒரு சில விவரங்கள் உங்களுக்காக.!

டிசம்பர் 3, 2016 அன்றுடன்

டிசம்பர் 3, 2016 அன்றுடன்

டிராய் கட்டுப்பாடுகள் எந்த விளம்பர வாய்ப்பும் 90 நாட்கள் வரம்பு கொண்டிருக்க வேண்டும் என்று கூறுவதால் அதாவது சரியாக 90 நாட்கள் என்றால் ஜியோவின் வெல்கம் ஆஃபர் செப்டம்பர் 5-ஆம் தேடி சேவையை ஆரம்பித்து டிசம்பர் 3, 2016 அன்றுடன் முடிவடைகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

100 மில்லியன் சந்தாதாரர்கள்

100 மில்லியன் சந்தாதாரர்கள்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு முடிவுக்குள் 100 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, வெல்கம் ஆஃபர் டிசம்பர் 3-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்றாலும் கூட அதன் இலவச சேவைகள் 100 மில்லியன் பயனர்களை அடையும் நோக்கில் டிசம்பர் 31, 2016 வரை வழங்கப்படும்.

2017-ஆம் ஆண்டு மார்ச் வரை

2017-ஆம் ஆண்டு மார்ச் வரை

100 மில்லியன் சந்தாதாரர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அடைய வாய்ப்பே இல்லை என்பதால் டிசம்பர் 30 அன்று முடியும் என்று கூறப்படும் ஜியோ வெல்கம் ஆஃபர் ஆனது அடுத்த 2017-ஆம் ஆண்டு மார்ச் வரை நீடிக்கப்பட சாத்தியம் உள்ளது என்பது தெரிய வருகிறது. அப்படி நீடித்தால் அது அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அதன் 100 மில்லியன் இலக்கை அடைய முடியும்.

அறிமுகம் செய்யப்படும் தேதி

அறிமுகம் செய்யப்படும் தேதி

மேலே குறிப்பிட்டுள்ள வெல்கம் ஆஃபர் 2 மற்றும் அதன்கீழ் வழங்கப்படும் இலவச சேவைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அது அறிமுகம் செய்யப்படும் தேதி எதுவுமே தெளிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முதல் வெல்கம் ஆஃபர் டிசம்பர் 3-ஆம் தேதி முடிவடையும்போது அது அறிமுகம் செய்யப்பட சாத்தியமுள்ளது என்றும் நம்பப்படுகிறது.மறுபக்கம் நிறுவனத்தின் இலவச சேவைகள் நீட்டிப்பு சார்ந்த அறிவிப்பு ஆனது டிசம்பர் 28 அன்று வெளியாகும் என்றும் சில நிபுணர்களால் நம்பப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புதிதாக இணையும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே

புதிதாக இணையும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே

வெல்கம் ஆஃபர் 2 பற்றி மற்றொரு யூகம் ஜியோ பயனர்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம். அதாவது எதிர்வரும் இரண்டாம் பாக வாய்ப்பை ஜியோ சேவையில் புதிதாக இணையும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கலாம் என்று கூறப்படுகின்றது. எனவே, நீங்கள் வெல்கம் ஆஃபர் அனுபவித்துக் கொண்டிருந்தாள் உங்களால் வெல்கம் ஆஃபர் 2 அனுபவிக்க இயலாது.

மார்ச் 2017

மார்ச் 2017

90 நாட்கள் செல்லுபடியாகும் என்று உண்மையான வாய்ப்பை போலவே வெல்கம் ஆஃபர் 2-ஆம் பாகமும் மேலும் 90 நாட்கள் செல்லத்தக்க ஒன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படியானால் அந்த சலுகை மார்ச் 2017 அன்று முடிவுக்கு வரும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஏர்டெல் இன்னொரு ரிலையன்ஸ் ஜியோ..!? - புலம்பும் ஏர்டெல் வாசிகள்.!

Best Mobiles in India

English summary
Reliance Jio Welcome Offer 2 to be Valid Until March 2017. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X