Home
Mobile

ரூ.10,400 தள்ளுபடி! இந்த லேட்டஸ்ட் Xiaomi போன் மீது.. இப்போ செம்ம டிமாண்ட்!

சியோமி நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது நம்பமுடியாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

அதென்ன ஸ்மார்ட்போன்? அதன் மீது கிடைக்கும் தள்ளுபடிகள் என்னென்ன? குறிப்பிட்ட Smartphone-ஐ நம்பி வாங்கலாம் என்பதற்கான காரணங்கள் என்னென்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

தொடர்ச்சியான முறையில்..!

தொடர்ச்சியான முறையில்..!

இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமானதுமே, 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீதான தேடல் மற்றும் விற்பனை திடீரென்று அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, தொடர்ச்சியான முறையில் 5ஜி போன்களின் மீதான சலுகைகள் அறிவிக்கப்பட்ட
வண்ணம் உள்ளன.

முன்னதாக சாம்சங்.. தற்போது சியோமி!

முன்னதாக சாம்சங்.. தற்போது சியோமி!

முன்னதாக சாம்சங் அதன் பெஸ்ட் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.2000 என்கிற விலைகுறைப்பை அறிவித்தது.

அதனை தொடர்ந்து சியோமி நிறுவனம், தனது பெஸ்ட் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனின் மீது ரூ.10,400 என்கிற நம்ப முடியாத சலுகையை அறிவித்துள்ளது!

என்ன மாடல்?

என்ன மாடல்?

நாம் இங்கே பேசுவது சியோமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றான - Xiaomi 11T Pro 5G மாடலை பற்றித்தான்!

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்ட சியோமி 11டி ப்ரோ 5ஜி-யின் ஆரம்ப விலை ரூ.34,999 ஆகும்.

ஆனால் சியோமியின் தீபாவளி சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இதன் மீது ரூ.10,400 என்கிற தள்ளுபடி அணுக கிடைக்கிறது!

ரூ.10,400 என்கிற தள்ளுபடியை பெறுவது எப்படி?

ரூ.10,400 என்கிற தள்ளுபடியை பெறுவது எப்படி?

சியோமியின் தீபாவளி விற்பனையின் கீழ், இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.7,400 என்கிற உடனடி தள்ளுபடி அணுக கிடைக்கிறது.

இந்த தள்ளுபடியை பெற, நீங்கள் பாங்க் ஆஃப் பரோடாவின் (BOB) கிரெடிட்/டெபிட் கார்டு வழியாக இருந்து பணம் செலுத்த வேண்டும்.

அடுத்தது.. எக்ஸ்சேன்ஜ் சலுகை!

அடுத்தது.. எக்ஸ்சேன்ஜ் சலுகை!

உடனடி தள்ளுபடியை தொடர்ந்து, சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மீது எக்ஸ்சேன்ஜ் ஆபரும் அணுக கிடைக்கும்.

இதன் கீழ் நீங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில், உங்களுக்கு ரூ.3,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.

இப்படியாக, சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.10,400-ஐ உங்களால் குறைக்க முடியும்!

Xiaomi 11T Pro 5G-ஐ நம்பி வாங்கலாமா?

Xiaomi 11T Pro 5G-ஐ நம்பி வாங்கலாமா?

டக்கென்று.. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் - சியோமி 11டி ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ஒரு சாலிட் ஆன பெர்ஃபார்மெர் என்றே கூறலாம்.

ஒருவேளை விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.. கீழ்வரும் சில முக்கிய காரணங்களுக்காகவே சியோமி 11டி ப்ரோ 5ஜி மாடலை வாங்கலாம்!

தெறிக்க விடும் டிஸ்பிளே!

தெறிக்க விடும் டிஸ்பிளே!

சியோமி 11டி ப்ரோ 5ஜி ஆனது 6.67-இன்ச் அளவிலான AMOLED டாட் டிஸ்பிளேவை பேக் செய்கிறது.

இது 2400 x 1080 பிக்சல்ஸ் என்கிற ரெசல்யூஷனையும், 20:9 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோவையும், 480Hz வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட்டையும், 120HZ ஆரெஃப்ரெஷ் ரேட்டையும் வழங்குகிறது.

போதாக்குறைக்கு, இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாக்கப்படுகிறது.

நல்ல பெர்ஃபார்மென்ஸ் மற்றும் நல்ல கேமராக்கள்!

நல்ல பெர்ஃபார்மென்ஸ் மற்றும் நல்ல கேமராக்கள்!

குவால்காமின் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டை கொண்டுள்ள சியோமியின் 11டி ப்ரோ மாடலின் பெர்ஃபார்மென்ஸில் ஒருகுறையும் கண்டுபிடிக்க முடியாது; 10க்கு 10 மார்க் கொடுக்கலாம்!

அதேபோல, இதன் ரியர் கேமரா செட்டப்பையும் பெரிதாக குறை சொல்ல முடியாது. பெரும்பாலும் இது நல்ல ரிசல்ட்களையே வழங்குகிறது. ஆனால் லோ-லைட்டில் கொஞ்சம் திணறுகிறது மற்றும் அல்ட்ரா வைட்டில் சில ஏமாற்றங்கள் இருக்கலாம்!

போதுமான பேட்டரியுடன் 120W பாஸ்ட் சார்ஜிங் வேற!

போதுமான பேட்டரியுடன் 120W பாஸ்ட் சார்ஜிங் வேற!

சியோமி 11டி ப்ரோ மாடல் ஆனது 5,000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது 17 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் 120W ஹைப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது!

இதோடு எங்கள் வேலை முடிந்தது.. இனிமேல் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா? என்கிற முடிவுக்கு வர வேண்டியது, நீங்கள் தான்!

Best Mobiles in India

English summary
Best Mid Range 5G Smartphone 2022 Xiaomi 11T Pro Gets Unbelievable Discount Offer Upto Rs 10400
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X