ஆளுக்கு ஒரு 5G போன் பார்சல்! சரியான நேரத்தில்.. Samsung-ன் தரமான ப்ரைஸ் கட்!
எதிர்பார்த்தபடியே, இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமான வேகத்தில், 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது!
சாம்சங் (Samsung) நிறுவனம், அந்த சூட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விரும்புவது போல் தெரிகிறது!

தரமான விலைக்குறைப்பு!
ஏனென்றால் சாம்சங் நிறுவனம், மிகவும் பிரபலமான மற்றும் நல்ல விற்பனையை சந்திக்கும் அதன் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது தரமான விலைக்குறைப்பை அறிவித்துள்ளது!
அதென்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? இந்த விலைக்குறைப்பு எதன் வழியாக அணுக கிடைக்கும்? இந்த சாம்சங் ஸ்மார்ட்போனை யாரெல்லாம் நம்பி வாங்கலாம்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

அதென்ன மாடல்?
நாம் இங்கே பேசுவது - சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான்!
கேலக்சி எம்13 5ஜி மீதான லேட்டஸ்ட் விலைக்குறைப்பு ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் வழியாக அணுக கிடைக்கிறது.
அதாவது தசரா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமேசானில் தொடரும் சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இந்த சலுகை அணுக கிடைக்கும்.

Samsung Galaxy M13 5G பழைய விலை vs புதிய விலை!
அறிமுகமான வேகத்தில், ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பெற்ற சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஆனது தற்போது ரூ.2,000 என்கிற விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது.
அதாவது ரூ.13,999 க்கு அறிமுகமான இந்த 5ஜி போன், தற்போது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது; இந்த விலை குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் 64 ஜிபி ஸ்டோரேஜின் சலுகை விலை ஆகும்.

ப்ரைஸ் கட் மட்டும் அல்ல.. பேங்க் ஆபரும் உண்டு!
அமேசான் வழியாக சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, விலைக்குறைப்பு மட்டுமின்றி, சில வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கும்.
நீங்கள் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில், ரூ.1,250 வரை தள்ளுபடி கிடைக்கும்.

கூடுதலாக.. எக்ஸ்சேன்ஜ் ஆபரும் உண்டு!
மேலும் நீங்கள் ஒரு பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில், ரூ.11,350 வரையிலான தள்ளுபடியை பெறலாம்.
எவ்வாறாயினும், நீங்கள் ஒருபோதும் முழுமையான எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியை பெற மாட்டீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் மொபைலின் "வயது" மற்றும் வொர்கிங் கண்டிஷனை அடிப்படையாக கொண்டே எக்ஸ்சேன்ஜ் தொகை கணக்கிடப்படும்!

ரூ.11,999 க்கு சாம்சங் Galaxy M13 வொர்த்-ஆ?
5ஜி ஆதரவுடன் சேர்த்து பெரிய பேட்டரி மற்றும் பெரிய டிஸ்ப்ளேவை தேடுபவர்களுக்கு இது நிச்சயம் ஒரு நல்ல தேர்வாகவே அமையும்.
ஏனெனில் இது 5,000mAh பேட்டரி மற்றும் 6.5 இன்ச் எல்சிடி HD+ டிஸ்பிளேவை பேக் செய்கிறது!
மேலும் இது மென்மையான செயல்திறனை வழங்கும் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்பையும் கொண்டுள்ளது.

கேமராக்கள் எப்படி?
பொதுவாக இந்த பட்ஜெட்டின் கீழ், அதாவது ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போனில் பெரிய அளவிலான கேமரா செயல்திறனை எதிர்பார்க்க முடியாது!
அந்த வகையில், இந்த எம்13 மாடலானது விலைக்கு ஏற்ற நல்ல புகைப்படங்களையே வழங்குகிறது; போதுமான வண்ணங்களுடன், போதுமான விரிவான புகைப்படங்களை வழங்குகிறது!

இந்த போன் வேண்டாம் என்றால்.. இதோ வேறு சில பரிந்துரைகள்!
சாம்சங் Galaxy M13 5G ஆனது உங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றால், ரூ.15,000 க்கு கீழ் வாங்க கிடைக்கும் வேறு ஸ்மார்ட்போன்களை தேடுகிறீர்கள் என்றால்..
நீங்கள் Poco M4 5G, Redmi Note 11T மற்றும் iQOO Z6 Lite போன்ற ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்!


Click it and Unblock the Notifications