கைக்கு அடக்கமான போன்..இந்தியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன Asus நிறுவனம்.!

|

ஆசஸ் நிறுவனம் புதிய ஆசஸ் ஜென்போன் 9 (Asus ZenFone 9) எனும் ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் Asus 9z எனும் பெயரில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஆசஸ் ஜென்போன் 9

ஆசஸ் ஜென்போன் 9

அதேபோல் ஆசஸ் ஜென்போன் 9 ஆனது ஏற்கனவே தைவானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆசஸ் ஜென்போன் 9 அம்சங்களை சற்றுவிரிவாகப் பார்ப்போம்.

1 இல்ல மொத்தம் 7 இருக்கு: 2022 இல் Apple செய்ய இருக்கும் சம்பவம்- உங்க காட்டில் மழை தான்!1 இல்ல மொத்தம் 7 இருக்கு: 2022 இல் Apple செய்ய இருக்கும் சம்பவம்- உங்க காட்டில் மழை தான்!

சூப்பர் டிஸ்பிளே

சூப்பர் டிஸ்பிளே

ஐபோன்களை போன்ற சிறிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் இந்த ஆசஸ் போன். அதாவது ஆசஸ் ஜென்போன் 9 ஆனது 5.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது. எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக 1080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ரேஷியோ, 1100 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதுஇந்த ஆசஸ் ஜென்போன் 9 மாடல். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

Vodafone Idea சொன்ன டாப் 3 பிளான்கள்: கம்மி விலையில் அன்லிமிடெட் டேட்டா, அதிக வேலிடிட்டி!Vodafone Idea சொன்ன டாப் 3 பிளான்கள்: கம்மி விலையில் அன்லிமிடெட் டேட்டா, அதிக வேலிடிட்டி!

 அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

ஆசஸ் ஜென்போன் 9 போன் ஆனது 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 12எம்பி Sony IMX363 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி Sony IMX663 கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் போன்.

அதேபோல் ஸ்லோ மோஷன், லைட் டிரெயில், பனோரமா, நைட் ஃபோட்டோகிராபி மற்றும் டைம் லேப்ஸ் போட்டோகிராபி போன்ற சிறப்பான கேமரா அம்சங்களை வழங்குகிறது இந்த புதிய ஆசஸ் ஜென்போன் 9 மாடல்.

இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!

தரமான சிப்செட் வசதி

தரமான சிப்செட் வசதி

புதிய ஆசஸ் ஜென்போன் 9 மாடலில் தரமான ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

மேலும் Adreno 730 GPU ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஆசஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

3D சோனிக் மேக்ஸ், 200MP செல்பி கேமரா உடன் Samsung ஸ்மார்ட்போன்- இன்னும் இருக்கு பாஸ்!

16ஜிபி ரேம்

16ஜிபி ரேம்

ஆசஸ் ஜென்போன் 9 ஆனது 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு IP68-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். அதாவது தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது இந்த ஆசஸ் ஜென்போன் மாடல்.

மிகவும் ஸ்லிம்மான 5G போன் அறிமுகம் செய்த Motorola: விலை எவ்வளவு தெரியுமா?மிகவும் ஸ்லிம்மான 5G போன் அறிமுகம் செய்த Motorola: விலை எவ்வளவு தெரியுமா?

 4300 எம்ஏஎச் பேட்டரி

4300 எம்ஏஎச் பேட்டரி

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஆசஸ் ஜென்போன் 9 ஆனது 4300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Anti-India கருத்துகள் போடும் YouTube சேனல்கள்: மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!Anti-India கருத்துகள் போடும் YouTube சேனல்கள்: மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!

 பேட்டரி அம்சம்

குறிப்பாக இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 18.5 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தையும் 8 மணிநேரம் வரை கேமிங் நேரத்தையும் வழங்குவதாக ஆசஸ் நிறுவனம் கூறுகிறது.

மேலும் டூயல் மைக்ரோபோன், OZO Audio Noise Reduction தொழில்நுட்பம், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்டபல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆசஸ் போன்.

Oneplus, Vivo, Nothingக்கு போட்டியாக களமிறங்கும் Realme- ஸ்மார்ட்போன்னா இப்படி இருக்கனும்!Oneplus, Vivo, Nothingக்கு போட்டியாக களமிறங்கும் Realme- ஸ்மார்ட்போன்னா இப்படி இருக்கனும்!

 கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6/6எஸ்இ, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், NavIC, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Asus Zenfone 9 to launch in India on August 23: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X