3D சோனிக் மேக்ஸ், 200MP செல்பி கேமரா உடன் Samsung ஸ்மார்ட்போன்- இன்னும் இருக்கு பாஸ்!

|

Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனானது 200 மெகாபிக்சல் கேமரா மற்றும் ஃபாஸ்ட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. எஸ் 22 ஸ்மார்ட்போனின் அம்சங்களே தலை சுத்தும் வகையில் மேம்பட்டு இருந்தது.

இந்த நிலையில் S23 Ultra குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான அம்சங்கள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ராவின் வாரிசாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா இருக்கும் என கூறப்படுகிறது.

அதாவது எஸ்22 அல்ட்ராவை மேம்பட்ட அம்சங்களுடன் இதே போன்ற வடிவமைப்பை எஸ்23 அல்ட்ரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எஸ்23 அல்ட்ரா குறித்து வெளியான தகவல் இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

3D Sonic Max ஃபிங்கர் ஸ்கேனிங்

3D Sonic Max ஃபிங்கர் ஸ்கேனிங்

Samsung Galaxy S23 Ultra குறித்து வெளியான அறிக்கையின்படி, 200 மெகாபிக்சல் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேலக்ஸி எஸ்22 சீரிஸ்-ஐ வெளியிட்டது.

இதையடுத்து அடுத்த ஆண்டு கேலக்ஸி எஸ் 23 சீரிஸை நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனானது Qualcomm இன் 3D Sonic Max ஃபிங்கர் ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் என டிப்ஸட்ர் தகவல் தெரிவிக்கிறது.

எஸ்22 அல்ட்ராவின் வாரிசாக புதிய ஸ்மார்ட்போன்

எஸ்22 அல்ட்ராவின் வாரிசாக புதிய ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் வாரிசாக எஸ்23 அல்ட்ரா இருக்கும் என கூறப்பட்டாலும் இதை உறுதிப்படுத்தும் விதமான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

200 மெகாபிக்சல் கேமரா

200 மெகாபிக்சல் கேமரா

இதுகுறித்து கொரியா ஐடி செய்தி அறிக்கையில் வெளியான தகவலை விரிவாக பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எஸ் 23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் ஒரு மாடல் 200 எம்பி கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது.

சாம்சங்கின் மொபைல் எக்ஸ்பீரியன்ஸ் (எம்எக்ஸ்) பிரிவு இந்த தகவலை முக்கிய கேமரா கூட்டாளர்களுக்கு தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரத்யேகமாக உருவாக்கப்படும் 200எம்பி கேமரா சென்சார்

பிரத்யேகமாக உருவாக்கப்படும் 200எம்பி கேமரா சென்சார்

சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு 200 மெகாபிக்சல் சென்சார் பாகங்களை உருவாக்குவதற்கு என சில நிறுவனங்களை சாம்சங் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

சாம்சங் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தான் 200 மெகாபிக்சல் கேமராவை உற்பத்தி செய்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு முக்கிய மேம்படுத்தல்

நீண்ட நாட்களுக்கு பிறகு முக்கிய மேம்படுத்தல்

சாம்சங் தனது கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் சென்சாரை பொருத்தியது. இதுவே நிறுவனம் கடைசியாக கேமரா பிரிவில் செய்த மேம்படுத்தல் ஆகும். இதே 108எம்பி கேமரா சென்சார் தான் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மற்றும் எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனிலும் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2023 இல் அறிமுகமாக இருக்கும் ஸ்மார்ட்போனில் நிறுவனம் கேமரா பிரிவை மேம்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

3டி சோனிக் மேக்ஸ் கைரேகை ஸ்கேனிங் தொழில்நுட்பம்

3டி சோனிக் மேக்ஸ் கைரேகை ஸ்கேனிங் தொழில்நுட்பம்

இதுகுறித்து டிப்ஸ்டர் தளத்தில் வெளியான தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா குவால்காமின் 3டி சோனிக் மேக்ஸ் கைரேகை ஸ்கேனிங் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கைரேகை சென்சார் Vivo X80 Pro மற்றும் iQoo 9 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெறும் என தகவல் தெரிவிக்கிறது.

விற்பனைக்கு கிடைக்கும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா

விற்பனைக்கு கிடைக்கும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தற்போதே விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் விலை ரூ.89,990 எனவும் அதிகப்பட்ச வேரியண்ட் விலை ரூ.100,910 எனவும் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 108 எம்பி பிரதான கேமரா மற்றும் 40 எம்பி செல்பி கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஒன் யுஐ 4.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

File Images

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S23 Ultra Might be Launching With 200MP Selfie Camera, 3D Sonic Max Tech

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X