Home
Mobile

ஆப்பிள் ஐபோனின் விலை விவரம்?

ஆப்பிள் ஐபோனின் விலை விவரம்?

இந்த மாதம் 26ம் தேதி நமது நாட்டில் அறிமுகமாகும் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் என்று பல தகவல் அடுத்து அடுத்து வந்து குவிந்து கொண்டிருக்கிறது. ஆனால் புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் விலையினை பற்றி சரிவர எந்த தகவல்களும் வெளியாகமல் இருந்தது.

இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றிய தகவல்கள் லேசாக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது. 16 ஜிபி மெமரி வசதி கொண்ட ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ரூ. 46,000த்தில் இருந்து ரூ. 48,000 விலை வரையில் பெறலாம் என்பது போல் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 32 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 51,000 விலையில் இருந்து ரூ. 53,000 விலை கொண்டதாக இருக்கும் என்றும், இதன் 64 ஜிபி வெர்ஷன் ரூ. 58,000 விலையில் இருந்து ரூ. 61,000 விலை வரை கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் விலை பற்றிய, தோராயமான விலை கூட வெளியாகாமல் இருந்தது. ஆனால் இப்போது இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் விலை பற்றிய கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் பல வலைத்தளங்களில், ப்ரீ-ஆர்டர் செய்யப்பட்டு வருவதால் இதன் விலை விவரத்தினையும் பார்க்கலாம். ரெட்டிஃப் வலைத்தளத்தில் 16 ஜிபி மாடல் ரூ. 54,990 விலையினையும், ட்ரேட்ஸ்.காம் வலைத்தளத்தில் ரூ. 59,990 விலையினையும் கொண்டதாக இருக்கும். அதே ட்ரேட்ஸ்.காம் வலைத்தளத்தில் 32 ஜிபி மாடல் ரூ. 73,599 விலையினையும், 64 ஜிபி மாடல் 86,699 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

இப்படி ஆன்லைன் விலைகள் ஒரு பக்கம் இருக்க, இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விலை விவரங்கள் காற்றுவாக்கில் கசிந்து வருகிறது. வருகிற 26ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் நமது சந்தையில் அறிமுகமான பின்பு, இதன் விலை பற்றிய விவரங்களும் வொளியாகும் என்று கருதப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X