இதுவும் காப்பி-ஆ.. அசிங்க பட்டான் Apple.. ஆனால் iPhone 18 Series வாங்க போறவங்களுக்கு இது குட் நியூஸ்!
ஆப்பிள் (Apple) நிறுவனத்திடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 18 சீரீஸ் (iPhone 18 Series) மாடல்கள் ஆனது செப்டம்பர் 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஐபோன் 18 சீரீஸ் மாடல்களின் விலை விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த தகவலின்படி, சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 சீரிஸில் (Galaxy S26 Series) என்ன மாதிரியான விலை நிர்ணய உத்தியை பின்பற்றியதோ, அதையே ஆப்பிள் நிறுவனம் கையாள வாய்ப்புள்ளது. அதாவது ஆப்பிள் ஐபோன் 18 சீரீஸின் வரும் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் (iPhone 18 Pro Max) மாடலின் விலை "நிலையாக" இருக்க வாய்ப்புள்ளது.

இன்னும் தெளிவாக சொன்னால் ஆப்பிள் தனது உயர்தர ஐபோன் மாடல்களை விலையை அதிகரிக்காமல், அதை அப்படியே தொடர வாய்ப்புள்ளது. ஆரம்ப மதிப்பீடுகளின்படி, ஐபோன் 18 ப்ரோவின் (iPhone 18 Pro) விலை சுமார் $1,099 இல் தொடங்கலாம். அதே நேரத்தில் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் உலகளாவிய விலை சுமார் $1,199 ஆக இருக்கலாம்.
இந்த உத்தி, பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிளின் ஆதிக்கத்தை வலுப்படுத்தக்கூடும். மேலும், மேம்படுத்தப்பட்ட போட்டோகிராஃபி, செயற்கை நுண்ணறிவு திறன்கள் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை வழங்கும், நீடித்து உழைக்கும், "எதிர்காலத்திற்கு ஏற்ற" சாடிவைஸ்களுக்கான நுகர்வோரின் பெருகிவரும் விருப்பத்திற்கும் இது பதிலளிக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி, சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 சீரிஸிலும் இதேபோன்ற உத்தியைச் செயல்படுத்தி இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சாம்சங் தனது கேலக்ஸி எஸ்26 வரிசையிலும் இதேபோன்ற விலை நிர்ணய உத்தியை செயல்படுத்தி இருந்தது. சாம்சங் நிறுவனம் முக்கிய சந்தைகளில் கேலக்ஸி எஸ்26 அல்ட்ராவின் விலையை மாற்றாமல் வைத்திருந்த அதே வேளையில்,பேஸிக் கேலக்ஸி எஸ்26 (Galaxy S26) மற்றும் எஸ்26 பிளஸ் (Galaxy S26 Plus) மாடல்களின் விலைகளை உயர்த்தியது.
ஆப்பிள் நிறுவனமும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையை கையாளத் தயாராக இருப்பது தெளிவாக தெரிகிறது. அதாவது, அதன் பிளாக்ஷிப் ப்ரோ வகைகளை (ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்) அப்படியே "பாதுகாத்து", அதே சமயம் அதன் சிக்கனமான மாடல்களுக்கான விலை கட்டமைப்பை மறுசீரமைக்க வாய்ப்புள்ளது போல் தெரிகிறது.
ஆக சாதாரண ஐபோன் 18 மாடல்களின் விலைகள் அதிகரிக்கலாம். ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலில் குறிப்பிடத்தக்க விலை உயர்வுகள் இருக்காது என்றாலும், ஐபோன் 18 (iPhone 18), ஐபோன் 18 ஏர் (iPhone 18 Air) மற்றும் ஐபோன் 18இ (iPhone 18e) உள்ளிட்ட பேஸிக் மாடல்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும்.
அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளை ஆப்பிள் நிறுவனம் தனது கீழ்நிலை மாடல்கள் முழுவதும் பகிர்ந்தளிக்கக்கூடும் என்று வெளிவரும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதன் விளைவாக, 2027 இல் மலிவு விலையில் ஐபோன்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிக விலை கொடுக்க நேரிடலாம்.
ஆப்பிளின் ஸ்டோரேஜ் உத்தியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்: மற்றொரு சாத்தியமான மாற்றம், ஆப்பிளின் ஸ்டோரேஜ் விலை அமைப்பை மறுசீரமைப்பதாக இருக்கலாம். சமீபத்தில், சாம்சங் நிறுவனம் சில முதன்மை சந்தைகளில் இருந்து குறைந்த 128ஜிபி வகைகளை நீக்கிவிட்டு, 256ஜிபி மாடல்களில் கவனம் செலுத்தியது. ஆப்பிள் நிறுவனமும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடலில் இந்த முயற்சியை பின்பற்றக்கூடும்; அதாவது, பேஸிக் விலையை நிலையாக வைத்துக்கொண்டு, 512ஜிபி மற்றும் 1டிபி போன்ற ஹை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலைகளை படிப்படியாக அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications