Home
Mobile

சாம்சங் காலக்ஸி நோட்டுக்கு போட்டியாக ஆப்பிள் ஐபோன்6?

By Prabakaran

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ஐபோன்5S மற்றும் கம்மி விலை ஐபோனான ஐபோன்5C பற்றிய எந்த அதிகாரபூர்வ தகவலையும் இன்னும் வெளியிடாமல் தான் இருக்கிறது. ஆனால் இவைகளை பற்றி நிறைய வதந்திகள் மற்றும் தகவல்கள் இன்டர்நெட்டில் உலவுகின்றன.

ஆப்பிளின் அடுத்த படைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புக்கு செப்டம்பர் 10ஆம் தேதி வரை நாம் காத்திருக்க தான் வேண்டும். ஏனென்றால் செப்டம்பர் 10ஆம் தேதி தான் ஆப்பிள் தனது அடுத்த படைப்பை வெளியிடும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இப்பொழுது ஐபோன்6 பற்றிய கான்ஷெப்ட் படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்டர்நெட்டில் வரத் தொடங்கிவிட்டன. பெரிய சைஸ் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் கலாச்சாரத்தை முதலில் சாம்சங் தான் அறிமுகப்படுத்தியது.

கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 4.8இன்ஞ் டிஸ்பிளே கொண்ட ஐபோனை வெளியிடும் என்ற வதந்தி மக்களிடத்தில் நல்ல பிரபலம் ஆனது. இப்பொழுது ஐபோன்6 6.2இன்ஞ் டிஸ்பிளே உடன் வெளிவரும் என்று கான்ஷெப்ட் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த கான்ஷெப்ட் சாம்சங் காலக்ஸி நோட் 3க்கு போட்டியாக இருக்கலாம்.

மேலும் 2.5ஜிபி ராம், AX8 சிப்செட், 256ஜிபி ரோம், 4ஜி எல்டிஈ, பிங்கர் பிரின்ட் சென்ஸார், 10 மெகாபிக்சல் கேமரா, 3.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, ஐஓஎஸ் 7.1 ஓஎஸ் ஆகிய அம்சங்களுடன் வரும் என்ற வதந்திகளும் உள்ளன.

6.2இன்ஞ் டிஸ்பிளே உடன் ஐபோன்6யை ரான் அன்வி என்பவர் டிஸைன் செய்தார். அவர் இதற்க்கு ஐபேப்லெட் என்று பெயரிட்டுள்ளார். கீழே உள்ள சிலைட்சோவில் இந்த ஐபேப்லெட்டின் கான்ஷெப்ட் படங்கள் மற்றும் வீடியோவை பாருங்கள்.

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்

ஆப்பிள் ஐபோன்6 கான்ஷெப்ட்களுக்கு இங்கே கிளிக் செய்யும்

ஆப்பிள்

ஆப்பிள்

6.2இன்ஞ் ஹச்டி டிஸ்பிளே

ஆப்பிள்

ஆப்பிள்

பிங்கர் பிரின்ட் சென்ஸார்

ஆப்பிள்

ஆப்பிள்

ஐஓஎஸ் 7.1 ஓஎஸ்

ஆப்பிள்

ஆப்பிள்

ஐபோன்6 கான்ஷெப்ட் பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்

ஐபோன்6 கான்ஷெப்ட் வீடியோ

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X