போட்டோவை அனுப்புங்கள் ஸ்மார்ட்போனை வெல்லுங்கள்!!

Posted By:

இரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு நமது ஹிஸ்பாட் அணி வாசகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் போட்டி மற்றும் பரிசை அறிவிக்க உள்ளது. வாசகர்களான உங்களின் உதவி இல்லாமல் இந்த போட்டி நிறைவுபெற இயலாது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இரக்ஷா பந்தன் சிறப்பு நாளில் உங்கள் பாசத்திற்க்கும், அன்பிற்க்கும் உடையவர்களை செல்போனில் படம் பிடித்து அந்த போட்டோவை எங்களுக்கு அனுப்புங்கள்.

அழகான போட்டோவை அனுப்புபவருக்கு அழகிய ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன் பரிசாக காத்திருக்கிறது. நீங்கள் எந்த வகையான படங்களை வேண்டுமானாலும் எடுக்கலாம் ஆனால் அந்த படங்களில் உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் எதாவது ஒரு ரிலேஷன்ஷிப் இருக்க வேண்டும்.

போட்டோவை அனுப்புங்கள் ஸ்மார்ட்போனை வெல்லுங்கள்!!

நீங்கள் எடுக்கும் போட்டோ இரக்ஷா பந்தன் நன்னாளை சார்ந்ததாக இருக்க வேண்டும். நீங்கள் பிளாக் அன் ஒய்ட் படங்களையும் எடுக்கலாம், அர்த்தமுள்ள கலர்புல் படங்களையும் எடுக்கலாம். நீங்கள் போட்டோவுடன் அதை சார்ந்த கருத்து அல்லது தகவலையும் சேர்த்து அனுப்பினால் இன்னும் சிறப்பு. ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெற்றியாளர் அறிவிக்கபடுவார்.

நிபந்தனைகள்:

>ஒருவர் ஒரு போட்டோவை தான் அனுப்ப வேண்டும். >இன்று ஆகஸ்ட் 20 மதியம் 1 மணி முதல் போட்டி ஆரம்பம் ஆகிறது.
>நீங்கள் எடுக்கும் போட்டோவை gadgets@oneindia.co.in அல்லது harishkumar.m@oneindia.co.in என்ற மெயில்களுக்கு அனுப்பலாம்.
>இரக்ஷா பந்தன் நன்னாளை சார்ந்த படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்(உதாரணமாக தங்கை அண்ணன் கையில் ராக்கி கட்டுவது போல் அல்லது குடும்பத்தினர் இதை கொண்டாடுவது போல் இருக்கலாம்).
>உங்கள் பெயர், அட்ரஸ், கான்டாக்ட் நம்பர் மற்றும் நீங்கள் போனில் போட்டோ எடுத்தீர்களோ அந்த போன் மாடல் பெயர் ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.
>மெயில் அனுப்பும் பொழுது சப்ஜெக்டில் GizBot Raksha Bandhan Contest: Name குறிப்பிட வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot