10வது ஆண்டில் ஆப்பிள் ஐபோன். இதுவரை சாதித்தது என்ன?

இந்த பத்து ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட மாடல்கள், அதன் சாதனைகள் குறித்து தற்போது பார்ப்போம்

By Siva
|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் விதவிதமான டிசைன்களில் விலைகளில் வெளிவந்து கொண்டிருந்தாலும் ஐபோனை வாங்க வேண்டும் என்றும் குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற கனவு இல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

10வது ஆண்டில் ஆப்பிள் ஐபோன். இதுவரை சாதித்தது என்ன?

அந்த வகையில் அனைவரது மனதையும் கவர்ந்து பிரமிப்பை ஏற்படுத்திய ஆப்பிள் ஐபோன் இந்த ஆண்டு தனது பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது.

ஆம் மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2007ஆம் ஆண்டு ஜனவரியில்தான் முதல் ஆப்பிள் ஐபோனை அறிமுகம் செய்தார்.

தற்போது சி.இ.ஓஆக உள்ள டிம் குக், இந்த பத்தாவது ஆண்டில் என்ன புதுமையான ஐபோனை ரிலீஸ் செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இன்று முதல் விற்பனைக்கு விவோ வி5 ப்ளஸ் (விலை & அம்சங்கள்).!

ஆப்பிள் நிறுவனத்தை கடந்த பத்து ஆண்டுகளாக கவனித்து வந்தவர்கள் அந்நிறுவனம் இதுவரை வெளியிட்டுள்ள ஐபோன்களின் வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள். இந்நிலையில் இந்த பத்து ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட மாடல்கள், அதன் சாதனைகள் குறித்து தற்போது பார்ப்போம்

ஐபோன் (முதல் ஜெனரேஷன்)

ஐபோன் (முதல் ஜெனரேஷன்)

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களே அதிகம் வெளிவராத 2007ஆம் ஆண்டில் முதல் ஐபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு புதிய புரட்சியை செய்தது. 3.5 இன்ச் டச் டிஸ்ப்ளே, ஐஒஎஸ் 1.0 பிராஸசர், மற்றும் 4GB, 6GB என இருவித மாடல்களில் ஐபோனை வெளியிட்டது. இந்த ஐபோன் வெளியான முதல் வருடத்தில் 6.1 மில்லியன் போன்கள் விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 3G:

ஐபோன் 3G:

கடந்த ஆண்டு முதல்தான் நாம் 3G ஸ்மார்ட்போன்களை அதிகம் பார்த்து வருகிறோம். ஆனால் கடந்த 2008ஆம் ஆண்டிலேயே ஆப்பிள் 3G வெளிவந்துவிட்டது. ஐஒஎச்2.0 சிப்செட்டில், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதியுடன் 8GB, 16GB என இரண்டு வகைகளில் ஐபோன் 3G வெளியானது. இந்த போன் வெளியான ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் போன்கள் விற்பனை ஆனது

ஐபோன் 3GS

ஐபோன் 3GS

ஐபோன் 3G வெர்ஷனின் வேகமான வெர்ஷன் தான் ஐபோன் 3GS. 2009ஆம் ஆண்டு வெளிவந்த பவர்புல் போன் இது என்ற பெயரை பெற்றது. ஐபோன் 3G போனின் ஜெராக்ஸ் காப்பி போல் இந்த மாடல் இருந்தாலும் இதில் இருந்த ரேம் மற்றும் இண்டர்னல் கெப்பாசிட்டி அதிகம் இருந்தது. மேலும் டெக்ஸ்ட்டை காப்பி, பேஸ்ட் செய்யும் வசதியும் இதில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஐபோன் 4:

ஐபோன் 4:

2010ஆ ஆண்டில் வெளிவந்த ஐபோன் 4, முதன்முதலில் வெளியான தினத்திற்கு முந்தைய நாள் இரவே அதன் ஸ்டோர் அருகே படுத்திருந்து ஆயிரக்கணக்கானோர் வாங்கினர். ஐஒஎஸ் 4.0 சிப்செட்டில் வெளிஅந்த இந்த போன் பிளாட் சைட் ஆகவும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேமிலும், முன்பக்கமும் பின்பக்கமும் கிளாஸை உடையதாகவும் இருந்தது. 512 MG ரேம் கொண்ட இந்த போன் ஹை ரெசலூசனுடன் இருந்தது

ஐபோன் 4S

ஐபோன் 4S

முந்தைய மாடல்கள் போல் இல்லாமல் ஓரளவுக்கு அதிகமான வித்தியாசம் கொண்டு வந்த போன் தான் ஐபோன் 4S. ஐஒஎஸ் 5.0 சிப்செட்டில், டூயல் கோர் பிராஸசரில் 64 GB ஸ்டோரேஜ் உடன், அபாரமான கேமிராவுடன் வெளிவந்தது. மேலும் வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆன சிறி ஆப் இதில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

ஐபோன் 5

ஐபோன் 5

கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த ஐபோன் 5 மாடல்தான் தற்போது வரை டிசைன் ஆக உள்ளது. வெகுவிரைவில் சார்ஜ் ஆகும் தன்மை இதில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முந்தைய மாடல் வரை 3.5 இன்ச் ஸ்க்ரீன் பயன்படுத்தப்பட்ட நிலையில் ஐபோன் 4S மாடலில்தான் முதல்முறையாக 4 இன்ச் ஸ்க்ரீன் அறிமுகம் செய்யப்பட்டது. மூன்றே நாட்களில் ஐபோன் 4S மூன்று மில்லியன் போன்கள் விற்பனை ஆனது.

ஐபோன் 5S

ஐபோன் 5S

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த ஐபோன் 5Sஆரம்பத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. ஐஒஎஸ் 7.0 சிப்செட்டில் 4 இன்ஸ் ஸ்க்ரீன் சைசில் வெளிவந்தது. மேலும் இந்த மாடலில்தான் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், பெட்டர் கேமிரா, டிராக்கிங் சிஸ்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டது

ஐபோன் 5C

ஐபோன் 5C

ஐபோன் 5S வெளிவந்த அதே ஆண்டில் கிட்டத்தட்ட அதேபோல் வெளிவந்த ஐபோன் தான் ஐபோன் 5C. பாலிகார்பனேட் பயன்படுத்தப்பட்டது என்ற ஒன்றை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லாததால் இந்த ஐபோன் பெரிய வரவேற்பை பெறவில்லை

ஐபோன் 6 / 6 பிளஸ்

ஐபோன் 6 / 6 பிளஸ்

ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மாடல்கள் 4.7 மற்றும் 5.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளிவதது. இரண்டுமே ஐஒஎஸ் 8.0 சிப்செட்டை கொண்டது. மேலும் இவற்றில் A8 பிராஸசர்கள் இருந்ததால் போன் மிகவும் வேகமாக செயல்படும். ஆனால் ஐபோன் 6 பிளஸ் பெண்ட் ஆனதால் ஒருசிலரால் குற்றம் சாட்டப்பட்டது

ஐபோன் 6s/6s பிளஸ்:

ஐபோன் 6s/6s பிளஸ்:

இந்த இரண்டு மாடல்களிலும் ஐஒஎஸ் 9.0 சிப்செட் பயன்படுத்தப்பட்டது. மேலும் இவற்றில்தான் முதன்முறையாக 3D டச் டெக்னாலஜி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிராஸசர், அலுமினியம் கவர், 12MP ஐசைட் கேமிரா, 4K வீடியோ ரிக்கார்டிங் வசதி ஆகியவை இருந்ததால் இந்த ஐபோன்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.

ஐபோன் SE

ஐபோன் SE

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் SE மாடலில் ஐஒஎஸ் 9.3 சிப்டெட் கொண்டது. ஆனால் பழைய ஆப்பிள் மாடல் போல மீண்டும் 4இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டதாக இருந்தது. மேலும் இந்த ஐபோனின் டிசைன் கிட்டத்தட்ட ஐபோன் 5 மாடலை போன்றே இருந்தது. ஆனாலும் இந்த போனில் லேட்டஸ்ட் ஹார்ட்வேர் இருந்ததால் வாடிக்கையாளர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.

ஐபோன் 7 / 7 பிளஸ்

ஐபோன் 7 / 7 பிளஸ்

ஐஒஎஸ் 10.0 சிப்செட், ஆடியோ ஜாக், ஹோம் பட்டனின் மாற்றம், டூயல் கேமிரா ஆகியவைகளுடன் வெளிவந்த போன் ஐபோன் 7 / 7 பிளஸ். மேலும் ஆப்பிள் போன்களில் முதன்முதலில் வாட்டர் ரெசிஸ்டெண்ட் உடன் வந்த போன் இவைகள்தான். மேலும் இந்த மாடல்களின் டிஸ்ப்ளே மற்ற மாடல்களை விட 25% ரிச் ஆக இருந்ததால் பல புதிய கலர்கள் இதில் தோன்றின.

Best Mobiles in India

English summary
Apple iPhone is 10 years now and we have come up with the list of iPhones launched till date and how they have changed since 2007. Take a look!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X