Home
Mobile

2017 ரேஸில் முந்துவது எது? ஐபோன் 8 vs கேலக்ஸி S8 vs ஒன்ப்ளஸ் 5.

இந்த ஆண்டின் ஹீரோ யார்? ஐபோன் 8ஐபோன் 8, கேலக்ஸி S8, ஒன்ப்ளஸ் 5

By Siva

2017ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு பொற்காலமாக இருக்கும் வகையில் ஏற்கனவே தங்களுடைய புதிய தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள் குறித்து எல்.ஜி, ஹூவாய், ஜியானி, லெனாவோ நிறுவனங்கள் அறிவிப்புகள் செய்துள்ளன.

2017 ரேஸில் முந்துவது எது? ஐபோன் 8 vs கேலக்ஸி S8 vs ஒன்ப்ளஸ் 5.

இந்த போன்கள் மிக விரைவில் வாடிக்கையாளர்கள் கையில் தவழ உள்ளது. அதுமட்டுமின்றி சாம்சங், HTC, ஒன்ப்ளஸ், சியாமி, நோக்கியா மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்களும் தங்களது புதிய தயாரிப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளன.

மேற்கண்ட நிறுவனங்களின் புதிய தயாரிப்புகள் குறித்து ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் ஒருசில உண்மையாகவும், ஒருசில வதந்திகளாகவும் இருக்கலாம். சாம்சங் நிறுவனத்தின் S8 மாடல் மார்ச் இறுதியில் வெளியாகவுள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மாடல் வரும் செப்டம்பரில் வெளியாகவுள்ளது. அதேஓல் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 5 மாடல் இவ்வருடத்திலேயே வெளிவரவுள்ளது.

ப்ரீ-ஆர்டர் ஆரம்பம் : சியோமி ரெட்மீ நோட் 4 (விலை & அம்சங்கள்).!

கடந்த ஆண்டு கேலக்ஸி 7, ஐபோன் 7, ஒன்ப்ளஸ் மற்றும் 3T போன்ற மாடல்கள் வெளிவந்து வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் அதே நேரத்தில் இந்த வருடம் வரப்போகும் மாடல்களும் அதே வரவேற்பை பெறுமா? என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

இந்நிலையில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள ஆப்பிள் ஐபோன் 8, கேலக்ஸி S8, ஒன்ப்ளஸ் 5 போன்ற மாடல்கள் என்னென்ன வித்தியாசங்கள் மற்றும் நவீன லேட்டஸ்ட் டெக்னாலஜி இருக்கலாம் என்பது குறித்து தற்போது பார்போம்

டிசைன் மற்றும் டிஸ்ப்ளே:

டிசைன் மற்றும் டிஸ்ப்ளே:

கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 மற்றும் 7ப்ளஸ் ஆகிய இரண்டு மாடல்களை வெளியிட்டது. அதேபோல் இந்த ஆண்டு இந்நிறுவனம் மூன்று வித மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஒன்று ஆப்பிள் நிறுவனத்தின் 10வது கொண்டாட்டத்தை அடுத்து வெளியாகும் ஐபோன்.

இதுவரை கசிந்துள்ள தகவலின்படி ஆப்பிள் ஐபோன் 8 மாடலில் கிளாஸ் பாடி மற்றும் வயர்லெஸ் சார்ஜ் செய்யும் வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கர்வ் அமோ எல்.இ.டி டிஸ்ப்ளேவும் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் டிஜிட்டல் ஹோம் பட்டன் மற்றும் பிங்கர்பிரிண்ட் சென்சார் கண்டிப்பாக இந்த மாடலில் இருக்கும்

இம்மாதம் வெளியாக உள்ள கேலக்ஸி S8, மற்றும் S8 ப்ளஸ் மாடல்களில் 5.1 இன்ச் மற்றும் 6.2 இன்ச் சூப்பர் அமோ எல்.இ.டி டிஸ்ப்ளே இருக்க வாய்ப்பு உள்ளது.

இதுவரை கசிந்துள்ள புகைப்படங்களில் இருந்து இந்த மாடலில் டூயல் கர்வ் எட்ஜ் டு எட்ஜ் டிசைனாக இருக்கலாம். மேலும் ஐபோன் 8 மாடலில் இருப்பது போன்று முன்பக்கம் ஹோம் பட்டன் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கலாம்.

அதேபொல் இன்னொரு மாடலால ஒன்ப்ளஸ் 5 மாடலில் 5.5 இன்ச் டூயல் கர்வ் எட்ஜ் அமோ எல்.இ.டி டிஸ்ப்ளே மற்றும் கேலஸி S7 மாடலில் உள்ளது போன்று எட்ஜ் இருக்கலாம். இந்த மாடலின் ரெசலூசன் குறித்த விபரங்கள் வெளிவரவில்லை எனினும் QHD 1440P ரெசலூசன் கண்டிப்பாக இருக்கும்

இந்த மாடல்களின் சாப்ட்வேர் எப்படி இருக்கும்?

இந்த மாடல்களின் சாப்ட்வேர் எப்படி இருக்கும்?

சாம்சங் கேலக்ஸி 8 மாடல் ஆண்ட்ராய்ட் நெளக்ட் மாடலிலும், ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்னாப்டிராகன் 835 மாடலுடன் லேட்டஸ்ட் குவால்கோம் அமைந்திருக்கும். மேலும் எக்ஸினோஸ் 8995 SoC சாம்சங் கேலக்ஸி 8 மாடலிலும் அமைந்திருக்கும். அதேபோல் ஆப்பிள் ஐபோன் 8 மாடைல் ஆப்பிள் 11 பிராஸசரின் அப்கிரேட் இருக்கலாம்

ரேம் குறித்து பார்ப்போமே ஆனால், சாம்சங் கேலக்ஸி 8 மாடலில் 4 GB யும், ஒன்ப்ளஸ் 5 மாடலில் 6GB அல்லது 8GBயும் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆப்பிள் ஐபோனில் வழக்கம் போல குறைந்த அளவு ரேம் தான் இருக்கும். அனேகமாக 2GB இருக்கலாம். அதே நேரத்தில் அனைத்து போன்களிலும் இன்னர் ஸ்டோரேஜ் 32 GB முதல் 128 GB வரை இருக்கலாம்.,

கேமிரா எப்படி இருக்கும்?

கேமிரா எப்படி இருக்கும்?

ஐபோன் 8 மாடலை பொருத்த வரையில் 12 MP டூயல் கேமிராவும், 4K வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதியும் இருக்கலாம். அதேபோல் 8 MP செல்பி கேமிராவும் கண்டிப்பாக அமைந்திருக்கும். மேலும் கேலக்ஸி 8 மாடலில் 16 GB மெயின் கேமிரா, 4K வீடியோ ரெக்கார்டிக் வசதி, 12 MP செல்பி கேமிரா எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ப்ளஸ் 5 மாடலில் 25GB பின் கேமிரா, 12 MP செகண்டரி கேமிரா மற்றும் 8 MP செல்பி கேமிரா இருக்க அதிக வாய்ப்புள்ளது.

கடைசியில என்னதான் சொல்ல வர்றோம்:

கடைசியில என்னதான் சொல்ல வர்றோம்:

என்னதான் புதுப்புது வசதி, டிசைன், லேட்டஸ்ட் டெக்னாலஜி இருந்தாலும் விலை ஒரு முக்கிய விஷயமாக வாடிக்கையாளர்களிடையே பார்க்கப்படுகிறது. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

ஒன்ப்ளஸ் 5 மாடலை விட கண்டிப்பாக ஐபோன் 8 மற்றும் கேலக்ஸி S8 மாடல் விலை உயர்வாகத்தான் இருக்கும். இருப்பினும் இந்த மாடல் வெளிவரும்போது அதன் விலையை பொருத்து எந்த மாடல் ரேசில் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்டிருந்து பார்போம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Apple iPhone 8, Samsung Galaxy S8 and OnePlus 5 are the upcoming flagship smartphones those are rumored heavily. Here is a rumored spec comparison.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X