Home
Mobile

ஆப்பிள் ஐபோன் 7, 7 ப்ளஸ், 7 புரோ மாடல்களின் விலை என்ன?

By Siva

ஆப்பிள் ஐபோனின் ஒவ்வொரு மாடல்கள் வெளியாகும்போதும் வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும்.

ஆப்பிள் ஐபோன் 7, 7 ப்ளஸ், 7 புரோ மாடல்களின் விலை என்ன?

குறிப்பாக அதன் விலையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடத்திலும் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள ஆப்பிள் ஐபோன் நிறுவனத்திம் ஆப்பிள் ஐபோன் 7, 7 ப்ளஸ், மறும் 7 புரோ ஆகியவற்றின் விலை குறித்து சீன இணையதளத்தில் கசிந்துள்ளது.

ஜியோ சலுகை : சோனி, வீடியோகான், சன்சுயி ஸ்மார்ட்போன்களில்..!

ஆப்பிள் ஐபோன் வெளியிடவுள்ள 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்கள் குறித்து ஏற்கனவே நாம் நிறைய பார்த்துள்ளோம். இந்த ஐபோன் மாடல்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 7, 7 ப்ளஸ், 7 புரோ மாடல்களின் விலை என்ன?

வரும் செப்டம்பர் அல்லது இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 7, 32ஜிபி கெப்பாசிட்டி உள்ள மாடல் ரூ.53,000 என்றும், 64ஜிபி கெப்பாசிட்டி உள்ள ஐபோன் ரூ.61,000 என்றும், 256 ஜிபி கெட்டாசிட்டி உள்ள ஐபோன் ரூ.71,000 இருக்க அதிக வாய்ப்புள்ளதாக சீன நிறுவனத்தின் வெய்போ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி கொண்டுள்ள அற்புதங்களும், ஆபத்துகளும்..!

அதே சமயத்தில் ஐபோன் 7 ப்ளஸ் மாடலில் 32 ஜிபி மொபைல் ரூ.60,999 என்றும், 64 ஜிபி மாடல் 69,500 என்றும், 128 ஜிபி மாடல் ரூ.79,000 என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐபோன் 7 புரோ மாடலில் 32 ஜிபி மொபைல் ரூ.71,000 என்றும், 128 ஜிபி மாடல் 79,000 என்றும், 256 ஜிபி மாடல் ரூ.89,000 என்றும் கூறப்படுகிறது.

கடந்த வாரத்தின் டாப் 10 டிரெண்டிங் ஸ்மார்ட்போன்கள்

இதற்கு முன்னர் வெளியான ஆப்பிள் ஐபோன்களின் விலையை ஒப்பிடும்போது இந்த மாடல்களின் விலையில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அதே நேரத்தில் 32ஜிபி மாடல்தான் வழக்கம்போல் விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் விலை ரூ.501 மட்டுமே/- நம்பலாமா பாஸ்.!?

இந்த விலை குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இந்த விலை உங்களுக்கு திருப்தி அளித்ததா? அல்லது அதிருப்தியை ஏற்படுத்தியதா? உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்சில் பதிவு செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Apple's upcoming iPhone 7 pricing is leaked in a Weibo post.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X