ரிலையன்ஸ் ஜியோ 4ஜி கொண்டுள்ள அற்புதங்களும், ஆபத்துகளும்..!

|

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி முன்னோட்டம் சலுகையானது இந்தியாவில் வணிக ரீதியாக தொடங்கப்படவில்லை என்றாலும் கூட சந்தையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

முதலில் ரிலையன்ஸ் நிறுவனம் லைஃ ஸ்மார்ட்போன்களில் தனது ஜியோ 4ஜி முன்னோட்டம் வாய்ப்பை வழங்க தொடங்கியது. பின்னர் 4ஜி செயல்படுத்தப்பட்ட சாம்சங், எல்ஜி, பானாசோனிக், அசுஸ், மைக்ரோமேக்ஸ் மற்றும் யூ தொடங்கி நிற்காமல் டிசிஎல் மற்றும் அல்காடெல் போன்ற 4ஜி ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளையும் சென்றடைந்தது.

வரவேற்பு :

வரவேற்பு :

இப்போது அதன் பெரிய அளவிலான வரவேற்பு மற்றும் வெற்றியை தொடர்நது ரிலையன்ஸ் அதன் முன்னோட்ட வாய்ப்பை ஜியோனி, லாவா மற்றும் கார்போன் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் வாய்ப்பை திறந்துள்ளது.

சர்ச்சை :

சர்ச்சை :

ஒருபுறம், ரிலையன்ஸ் ஜியோ 4ஜி முன்னோட்டமானது சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் பல சர்ச்சைகளை கொண்டிருக்க மறுபுறம் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் கொதிப்பிற்க்கு உள்ளாகி சந்தையில் தனது பங்கை தக்கவைத்துக்கொள்ள வேலை செய்து வருகிறது.

நிறை - குறை :

நிறை - குறை :

ரிலையன்ஸ் ஜியோ பற்றிய முன்னோட்ட இலவச சேவைகளை அறிந்துகொண்டால் நீங்களும் ஜியோ சிம்மை கையில் பெற தூண்டப்படலாம். அதற்கு முன்பு அதன் நிறை குறைகளை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்கள், ஒரு முடிவுக்கு வாருங்கள்..!

நிறை #01

நிறை #01

வரம்பற்ற வாய்ஸ் கால், டேட்டா மற்றும் டெக்ஸ்ட் : அது வரம்பற்ற எச்டி வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள், வரம்பற்ற அதிவேக டேட்டா, வரம்பற்ற எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்-ல் உள்ளடங்கிய ஜியோஆன்டிமாண்ட், ஜியோபீட்ஸ், ஜியோப்ளே, ஜியோமாக்ஸ், ஜியோமணி ஆகியவைகளும் உள்ளடங்கும்.

நிறை #02

நிறை #02

3 மாத வேலிடிட்டி : உங்கள் ரிலையன்ஸ் 4ஜி சிம் ஆக்டிவேட் ஆன பின்பு 90 நாட்களுக்கு அதாவது 3 மாதங்கள் வரை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் 4ஜி டேட்டாவை நுகர்வு செய்ய முடியும்.

நிறை #03

நிறை #03

மலிவான டேட்டா கட்டண திட்டம் : 90 நாட்களுக்கு பிறகு, நீங்கள் ரிலையன்ஸின் கட்டண திட்டங்களுக்கு கீழ் ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தலாம். உடன் ஒரு எம்பி 50 பைசா என்ற நாட்டின் மலிவான தரவு விகிதங்களை ரிலையன்ஸ் நிகழ்த்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிறை #04

நிறை #04

பல்வேறு சாதனங்களில் கிடைக்கும் : முதலில் இந்த சேவையானது லைஃ ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் தான் என்ற வரையறைக்குள் இருந்தது, இப்போது சாம்சங், எல்ஜி, மைக்ரோமேக்ஸ், யூ, பானாசோனிக், ஜியோனி, லாவா, கார்போன், டிசிஎல் மற்றும் அல்காடெல் போன்ற 4ஜி செயல்படுத்தப்பட்ட அணைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் திறந்து விடபட்டுள்ளது.

குறை #01

குறை #01

சட்ட சிக்கல்கள் : ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் ட்ராய்தனை அணுகி அரசு ஸ்பெக்ட்ரமிற்கு கட்டணம் செலுத்தாமல் அதன் 4ஜி முன்னோட்ட சேவைகளை தொடங்கியதற்காக அபராதம் செலுத்த கோரிக்கை விடுத்துள்ளன.

குறை #02

குறை #02

கால் ட்ராப் சிக்கல்கள் : 65% கால் டிராப்களை ரிலையன்ஸ் சந்திக்கிறது, ஆக வாய்ஸ் கால்களில் சிறப்பான நிலையை அடைய மற்ற நெட்வொர்க்குகள் உடனான இணைப்புத் புள்ளியின் அதிகம் தேவைப்படுகிறது.

குறை #03

குறை #03

ஜியோவை ரிலையன்ஸ் அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை ஆக நீங்கள் உங்கள் தொலைப்பேசி எண்ணை போர்ட் செய்ய இயலாது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio 4G Preview: Good and Bad About It. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X