Home
Mobile

ஆன்லைன் விற்பனையில் ஆப்பிள் ஐபோன்-5!

By Super

ஆன்லைன் விற்பனையில் ஆப்பிள் ஐபோன்-5!
ஆன்லைன் விற்பனையில் முகம்காட்டுகிறது ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன். அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியிடப்பட்ட ஆப்பிளின் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இன்னும் நமது நாட்டில் அறிமுகம் செய்யப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் நமது நாட்டில் எப்போது ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் சில ஆன்லைன் வலைத்தளங்களில் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் முகம்காட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மூன்று மெமரி வெர்ஷன்களை கொண்டுள்ளது. இதில் 16 ஜிபி மெமரி வெர்ஷன் ஐபோன்-5 ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் வலைத்தளத்தில் காட்சியளிக்கின்றன.

ஷாப்பிங்.ரெட்டிஃப்.காம் வலைத்தளத்தில் 16 ஜிபி மெமரி வெர்ஷன் கொண்ட ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ரூ. 54,990 விலை கொண்டதாக இருக்கும். அதே டிரேடஸ்.காம் வலைத்தளத்தில் அதே மாடல் 59,500 விலை கொண்டதாக இருக்கும். இதில் 32 ஜிபி ரூ. 73,599 என்ற விலையிலும், 64 ஜிபி மெமரி வெர்ஷன் கொண்ட ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ரூ. 86,699 விலையிலும் கிடைக்கும்.

இபே வலைத்தளத்தில் 16 ஜிபி வெர்ஷன் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ரூ. 59,990 விலையிலும், 32 ஜிபி மாடல் ரூ. 67,990 விலையிலும், 64 ஜிபி வெர்ஷன் ரூ. 76,990 விலையிலும் கிடைக்கும்.

ஆனால் இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகமான சமயத்தில், இந்திய வாடிக்கையாளர்கள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனை 1.2 லட்சம் கொடுத்து கூட வாங்க தயாராக இருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இந்த லட்ச ரூபாய் விலைக்கு, இங்கே ஆன்லைன் வலைத்தளங்கள் காட்டும் விலை கொஞ்சம் குறைவாகத்தான் தெரிகிறது.

ஆனால் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமென்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் இன்னும் நமது நாட்டில் அறிமுகம் செய்வது பற்றி ஆப்பிள் நிறுவனத்தின் அதிகார பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X