மேலும் 22 நாடுகளில் தனது விற்பனையைத் தொடங்கிய ஐபோன் 5

Posted By: Karthikeyan
 மேலும் 22 நாடுகளில் தனது விற்பனையைத் தொடங்கிய ஐபோன் 5

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஐபோன் 5 தற்போது மேலும் 22 நாடுகளில் தனது விற்பனையைத் தொடங்கி இருக்கிறது. இந்த ஐபோன் 5 விற்பனைக்கு வந்த ஒரு வாரத்தில் 5 மில்லியன் விற்று சாதனை படைத்தது.

தற்போது இந்த ஐபோன் 5, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக்கோஸ்லோவாக்கியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, ஹங்கேரி, ஐயர்லாந்து, இத்தாலி, லிச்டென்ஸ்டெய்ன், லித்துவேனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கல், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

அதுபோல் அமெரிக்க சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் கிரிக்கெட், சிஸ்பையர், ப்ளூக்ராஸ் செல்லுலர், செல்காம், ஜிசிஐ, கோல்டன் ஸ்டேட் செல்லுலர், நெக்ஸ் டேக் வயர்லெஸ், பயனீர் வயர்லஸ், அப்பலசியன் வயர்லஸ் மற்றும் பிற நிறுவனங்களும் ஐபோனன் 5வை விற்பனை செய்ய தொடங்குகின்றன.

இதுவரை ஐபோன் 5விற்காக ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் விண்ணப்பத்தவர்கள் இந்த போனைப் பெற 3 முதல் 4 வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இனி இவ்வாறு காத்திருக்க தேவையில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்