Home
Mobile

புது iPhone 17 விலை இவ்ளோ தானா.. பழைய iPhone 16 க்கும் இதுக்கும் விலை வித்தியாசம் இவ்ளோ தானா?

ஆப்பிள் நிறுவனம் தயார்.. நீங்கள் தயாரா? ஐபோன் 17 (iPhone 17), ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 புதிய ஐபோன் மாடல்களை உள்ளடக்கிய ஐபோன் 17 சீரீஸ் ஆனது இன்று (செப்.9) இரவு, இந்தியா உட்பட உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன

2025 ஐபோன் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் சில முக்கிய மாற்றங்களை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இம்முறை ஐபோன் 17 பிளஸ் மாடலுக்கு பதிலாக முற்றிலும் புதிய ஐபோன் 17 ஏர் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே ஐபோன் 17 சீரீஸ் ஆனது முன்னெப்போதும் இல்லாத அளவிலான ரேம் உடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புது iPhone 17 விலை இவ்ளோ தானா?

இதற்கிடையில் இன்னும் சில மணி நேரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஐபோன் 17 சீரீஸின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் லீக் ஆகியுள்ளது. அதன்படி ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களின் எதிர்பார்க்கப்படும் இந்திய விலை விவரங்கள் இதோ:

கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவலின்படி, ஆப்பிள் ஐபோன் 17 மாடல் ஆனது இந்திய சந்தையில் ரூ.89,999 என்கிற விலைக்கும், அமெரிக்காவில் $899 என்கிற விலைக்கும் வாங்க கிடைக்கும். அதாவது ஐபோன் 17 மாடலின் அறிமுக விலையான ரூ.79,990 விட சுமார் ரூ.10,000 அதிகமாக இருக்கும். அடுத்ததாக உள்ள ஆப்பிள் ஐபோன் 17 ஏர் மாடல் ஆனது இந்தியாவில் ரூ.99,999 என்கிற விலைக்கும், அமெரிக்காவில் $999 என்கிற விலைக்கும் விற்பனைக்கு வரலாம்.

ப்ரோ மாடல்களை பொறுத்தவரை ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மாடல் ஆனது இந்தியாவில் ரூ.1,34,999 என்கிற விலைக்கும், அமெரிக்காவில் $1,199 என்கிற விலைக்கும் அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக உள்ள ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது இந்தியாவில் ரூ.1,64,999 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்

இந்த விலை பழைய ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலை விட சற்று அதிகமாகும். அமெரிக்க விலையை பொறுத்தவரை ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆனது $1,499 என்கிற விலைக்கு வாங்க கிடைக்கலாம். ஆப்பிளின் 4 புதிய ஐபோன் 17 சீரீஸ் மாடல்களுமே செப்டம்பர் 12, 2025 முதல் முன்பதிவு செய்ய கிடைக்கும் என்றும், பின்னர் செப்டம்பர் 19, 2025 முதல் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

புதிய ஐபோன் 17 சீரிஸ் உடன் சேர்த்து ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 11 (Apple Watch Series 11) மற்றும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ தேர்ட் ஜெனரேஷன் டிடபுள்யூஎஸ் ஹெட்செட் (AirPods Pro 3rd Generation TWS Headset) உட்பட மேலும் சில புதிய ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவ் ட்ராப்பிங் (Awe Dropping) என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த ஐபோன் 17 சீரீஸ் வெளியீட்டு நிகழ்வானது இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 9 ஆம் தேதி) இரவு 10.30 மணிக்கு முக்கிய உரையுடன் (கீ நோட் உடன்) தொடங்கும். கடந்த கால ஐபோன் வெளியீட்டு நிகழ்வுகளை போலவே இந்த நிகழ்வும் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறும்.

Best Mobiles in India

English summary
Apple iPhone 17 iPhone 17 Air iPhone 17 Pro iPhone 17 Pro Max Expected Price In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X