Home
Mobile

இந்த 1 காரணம் போதுமே.. iPhone 17 இந்திய விற்பனை தூள் பறக்குமே.. Apple-ன் புதிய வியாபார உத்தி!

டேட்டா பகுப்பாய்வு நிறுவனமான டிரெண்ட் ஃபோர்ஸ் (TrendForce) ஆனது கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளியான ஐபோன் 16 சீரீஸ் (iPhone 16 Series) உடன் ஒப்பிடும்போது, வருகிற செப்.9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) மொத்த ஏற்றுமதி 3.5% அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

முன்னறிவிப்புடன், டிரெண்ட் ஃபோர்ஸ் நிறுவனம் ஆனது ஐபோன் 17 சீரீஸின் முக்கிய அம்சங்களையும் பகிர்ந்துள்ளது. எதிர்பார்க்கப்படியே ஐபோன் 17 சீரிஸின் கீழ் 4 மாடல்கள் அறிமுகமாகும்: ஐபோன் 17, ஐபோன் 17 ஏர் ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்.

இந்த 1 காரணம் போதுமே.. iPhone 17 இந்திய விற்பனை தூள் பறக்குமே!

இந்த மாடல்களில் ஐபோன் 17 ஏர் (iPhone 17 Air), ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) ஆகிய 3 மாடல்களுமே 12ஜிபி ரேம்-ஐ (12GB RAM) கொண்ட முதல் ஐபோன்களாக இருக்கும் என்றும் டிரெண்ட் ஃபோர்ஸ் அறிக்கை வெளிப்படுத்துகிறது. வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்?

ஐபோன் 17: டிரெண்ட் ஃபோர்ஸ் அறிக்கையின்படி, ஐபோன் 17 மாடல் ஆனது LTPO 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.2-இன்ச் ப்ளெக்சிபில் AMOLED ஆன்-செல் டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது TSMC இன் 3என்எம் செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட A19 சிப்பால் இயக்கப்படும். இது 8ஜிபி LPDDR5X RAM உடன் இணைக்கப்படலாம். ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை 128GB, 256GB மற்றும் 512GB ஆகியவைகள் இருக்கலாம். அமெரிக்க விலை முறையே $799, $899 மற்றும் $1,099 என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐபோன் 17 ஏர்: இன்னும் தற்காலிக பெயராக இருக்கும் ஐபோன் 17 ஏர் மாடல் LTPO 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் ப்ளெக்சிபில் AMOLED ஆன்-செல் டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் TSMC இன் 3என்எம் செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட A19 சிப்பால் இயக்கப்படும். இது 12ஜிபி ரேம் உடன் இணைக்கப்படலாம். ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை 256GB, 512GB மற்றும் 1TB ஆகியவைகள் இருக்கலாம். அமெரிக்க விலை முறையே $1099, $1299 மற்றும் $1499 என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐபோன் 17 ப்ரோ: ஐபோன் 17 ப்ரோ மாடல் ஆனது LTPO 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.2-இன்ச் ப்ளெக்சிபில் AMOLED ஆன்-செல் டிஸ்பிளேவுடன் வரலாம். இது ஆப்பிளின் மிகவும் சக்திவாய்ந்த A19 Pro சிப்பால் இயக்கப்படலாம். இது 12ஜிபி ரேம்-ஐ கொண்டிருக்கலாம். ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை 256GB, 512GB மற்றும் 1TB ஆகியவைகள் இருக்கலாம். அமெரிக்க விலை முறையே $1199, $1399 மற்றும் $1599 என மதிப்பிடப்பட்டுள்ளது

ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்: கடைசியாக உள்ள ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது LTPO 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8-இன்ச் ப்ளெக்சிபில் AMOLED ஆன்-செல் டிஸ்பிளேவுடன் வரலாம். இதுவும் A19 Pro சிப்பால் இயக்கப்படலாம். இதுவும் 12ஜிபி ரேம்-ஐ கொண்டிருக்கலாம். ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை 256GB, 512GB மற்றும் 1TB ஆகியவைகள் இருக்கலாம். அமெரிக்க விலை முறையே $1299, $1499 மற்றும் $1699 என மதிப்பிடப்பட்டுள்ளது

டிரெண்ட் ஃபோர்ஸ் அறிக்கையானது ஐபோன் 17 சீரீஸின் கேமரா, பேட்டரி அல்லது சார்ஜிங் ஆகிய அம்சங்களை குறித்த விவரங்களை வழங்கவில்லை. இருப்பினும், ஐபோன் 17 ஏர் மாடல் - ஆப்பிள் நிறுவனம் ஆனது மிகவும் மெல்லிய மற்றும் எடை குறைவான ஃபிளாக்ஷிப் பிரிவில் நுழைவதைக் குறிக்கிறது என்று இந்த பகுப்பாய்வு நிறுவனம் குறிப்பிடுகிறது, இருப்பினும் இது பேட்டரி ஆயுள் மற்றும் கேமரா தரத்தில் சமரசங்களை உள்ளடக்கியிருக்கலாம். பிளஸ் மாடலுடன் ஒப்பிடும்போது அதன் விற்பனை செயல்திறன் நிச்சயமற்றதாகவே இருக்கும்.

Best Mobiles in India

English summary
3 Out of 4 New iPhone Models in Apple iPhone 17 Series To Pack 12GB RAM For First Time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X