ஆப்பிளின் புதிய ஓஎஸ் வெளியானது! செம ஓட்டம்!

Posted By:
  X

  ஆப்பிள் நிறுவனம் சென்ற செப்டம்பர் 10 ஆம் தேதி புதிய மாடல் ஐபோன்களான ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C உடன் தனது லேட்டெஸ்ட் மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7யையும் வெளியிட்டது. இந்த புதிய மொபைல் ஓஸ் இப்பொழுது உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது.

  நீங்கள் உங்கள் ஆப்பிள் ஐபோன், ஐபேட் அல்லது ஐபாட் டச்ல் உள்ள பழைய ஓஎஸ்களை மாற்றி ஆப்பிள் புதிய ஐஓஎஸ் 7யை அப்டேட் செய்துகொள்ளலாம். புதிய ஓஎஸ்யை எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்பதை முன்பே கூறியிருந்தோம். இப்பொழுது ஆப்பிளின் புதிய ஓஎஸ் பற்றிய டிப்ஸ் மற்றும் அதில் உள்ள புதிய அம்சங்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

  புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  நீங்கள் போனை பயன்படுத்த பழைய ஐஓஎஸ் 6ல் ஸ்கிரீனின் இடது பக்கம் ஸ்வைப் செய்ய வேண்டும் . ஆனால் இந்த புதிய ஓஎஸ்ல் ஸ்கிரீனில் எந்த பக்க வேண்டுமானாலும் ஸ்வைப் செய்து போனை எளிதாக பயன்படுத்தலாம்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  Settings > iTunes & App Store > Automatic Downloads சென்று ஆட்டோமேடிக் டவுன்லோடை ஆன் செய்துவிட்டால் போதும் அப்டேட் ஆக வேண்டிய அப்ளிகேஷன் அதுவாக டவுன்லோட் ஆகி அப்டேட் ஆகிக்கொள்ளும்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  நீங்கள் பனோரமாவில் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தனியாக ஆல்பத்திற்க்குள் ஒவ்வொன்றும் தனி போல்டரில் ஷேவ் ஆகிக்கொள்ளும்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  இதில் உள்ள போட்டோ அப்ளிகேஷன் போட்டோக்களை Years > Collections > Moments என்ற வகையில் ஆக்சஸ் செய்ய உதவும்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  Momentsல் உள்ள போட்டோக்கள் தேதி மற்றும் இடத்தின் பெயருடன் சேமிக்க பட்டிருக்கும் அதை நீங்கள் Momentsல் இருந்து Share > Share this moment என்ற ஆப்ஷனை கிளிக் எளிதாக மற்றவர்களிடம் போட்டோக்களை பகிர்ந்துகொள்ளலாம்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  போட்டோ அப்ளிகேஷன் மூலம் போட்டோக்களை சுழற்றலாம், கிராப் செய்யலாம், போட்டோவில் கண்களில் சிகப்பு புள்ளி போல் இருந்தால் அதை சரி செய்யலாம் மேலும் போட்டகளில் பில்டர்களை கூட்டலாம்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  இதில் உள்ள நோட்டிபிக்கேஷன் சென்டரில் Todays tab என்று உள்ளது அதன் மூலம் இன்று என்னென்ன நடந்தது என்ன நடிக்கிறது ஆகிய குறிப்புகளை அறியலாம்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  ஐஓஎஸ் 7 ஓஎஸ்ல் Airdrop என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது இதன் மூலம் நீங்கள் ஓரே wi-fi கனெக்ஷனில் கனெக்ட் செய்யப்பட்ட சாதனங்களுக்கு பைல்களை எளிதாக பகிர்ந்துகொள்ளலாம்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  இதில் உள்ள மெசேஜ் அப்ளிகேஷன் கான்டெக்ட் மற்றும் காலர் பற்றிய தகவல் அறிய, உடனே கால் செய்ய உதவும் வகையில் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  இந்த புதிய ஓஎஸ்ல் உள்ள கன்ட்ரோல் சென்டர் மூலம் மேல் இருந்து கீழ் ஸ்வைப் செய்தால் போதும் அதில் நீங்கள் பல அப்ளிகேஷன்களை எளிதாக பயன்படுத்தலாம்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  நீங்கள் ஒரு காலரை பிளாக் செய்ய வேண்டும் என்று எண்ணினால் Contacts > Select a contact > Block this Caller இந்த ஆப்ஷனில் பிளாக் செய்யலாம்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  இதில் உள்ள கேமரா அப்ளிகேஷன் மூலம் சதுர வடிவில் போட்டோக்களை எடுக்கலாம்

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  App Store > Updates tab > Purchased > Search இந்த ஆப்ஷனில் சென்று பர்ச்சேஸ் செய்த அப்ளிகேஷன் பற்றி அறியலாம்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  திறந்துள்ள அப்ளிகேஷனை மூட வேண்டும் என்றால் ஹோம் ஸ்கிரீனில் டபுள் கிளிக் செய்தால் போதும். அப்ளிகேஷனை ரிமூவ் செய்ய ஸ்கிரீன் மேல் பகுதிக்கு டிராக் செய்யுங்கள்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  ஆப்பிள் ஓஎஸ்ல் உள்ள சிரி அப்ளிகேஷன் பெண்ணின் குரலில் தான் பேசும். இப்பொழுது இதில் ஆணின் குரலும் உள்ளது அதற்க்கு நீங்கள் General > Settings > Siri > Voice Gender > Male இந்த ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  இதில் உள்ள world clock மற்ற நாட்டை விட நமது டைம் எத்தனை மணி நேரம் பின்னாடி உள்ளது என்பதையும் காமிக்கும்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  நீங்கள் உங்கள் வசதிகேற்ப எழுத்துகளின் அளவை மாற்ற Settings > General > Text Size என்ற ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  Find My iPhoneயை ஆப் செய்வதற்க்கு பாஸ்வேர்ட் தேவைப்படும்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  நீங்கள் itunes radio மூலம் உங்கள் விருபத்திற்க்கேற்ப ரேடியோவை கேட்கலாம்.

  ஐஓஎஸ் 7 டிப்ஸ்

  இதில் உள்ள மேப்ஸ் அப்ளிகேஷன் இப்பொழுது மிகவும் தெளிவாக உள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more