பெஞ்ச்மார்க் ரேட்டிங்கில் இடம்பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்.!

Written By:
  X

  கடந்த 2016ஆம் ஆண்டில் பலவிதமான புதுப்புது ஸ்மார்ட்போன்களின் மாடல்கள் வெளிவந்து வாடிக்கையாளர்களை திருப்தி செய்தது. அவ்வப்போது புதுப்புது மாடல்கள் வெளிவந்து கொண்டிருந்ததால் எந்த ஸ்மார்ட்போனை வாங்குவது என்று பொதுமக்கள் குழப்பம் அடையும் வகையில் இருந்தது.

  பெஞ்ச்மார்க் ரேட்டிங்கில் இடம்பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்.!

  கேமிரா, சாப்ட்வேர், ஹார்ட்வேர் என ஒவ்வொரு மாடலிலும் ஒவ்வொரு சிறப்பு அம்சங்கள் இருந்தன. இந்நிலையில் பொதுமக்களின் இந்த குழப்பத்தை போக்க AnTuTu benchmark கடந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களை வகைப்படுத்தியுள்ளது.

  இந்தியா மீது ஆப்பிள் நிறுவனம் இவ்வளவு ஆர்வம் காட்ட என்ன காரணம்.?

  இதுதான் இறுதியான முடிவு என்று சொல்ல முடியாவிட்டாலும், குழப்பத்தில் இருப்பவர்கள் இதன் ரேட்டிங் பார்த்து ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இனி AnTuTu benchmark வகைப்படுத்திய மாடல்கள் குறித்து பார்ப்போமா?

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் - 183, 106

  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ். 5.5 இன்ச் டிஸ்ப்ளேவில் டூயல் லென்ஸ் கேமிராவுடன் வெளிவந்த இந்த போன், ஆப்பிள் ஐபோன் A10 ஃபியூஷன் சிப்செட்டை கொண்டது. 2GB ரேம் உள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.72000 முதல் 92000 வரை அதன் ஸ்டோரேஜை பொறுத்து விற்பனை ஆனது.

  ஆப்பிள் ஐபோன் 7 - 173, 767

  ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் மாடல் போலவே இந்த ஆப்பிள் ஐபோன் 7 மாடலும் ஆப்பிள் ஐபோன் A10 ஃபியூஷன் சிப்செட்டை கொண்டது. குவாட்கோர் பிராஸசர் கொண்ட இந்த போன்களின் சிபியு மற்ற போன்களை விட 40% வேகமான சிபியூவை கொண்டது. இந்த போனின் விலை அதன் ஸ்டோரேஜை பொறுத்து ரூ.60000 முதல் ரூ.80000 வரை விற்பனை ஆனது/

  ஒன்ப்ளஸ் 3T - 165, 132

  AnTuTu benchmark ரேட்டிங்கில் முதல் இரண்டு இடங்களை ஆப்பிள் ஐபோன் பிடித்து கொண்ட நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை செய்துள்ள இந்த ஒன்ப்ளஸ் 3T. கடந்த டிசம்பர் மாதம் வெளியான இந்த போன் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசரை கொண்டது. மிக வேகமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த போனின் விலை ரூ.29999 முதல் 34999 வரை விற்பனை செய்யப்பட்டது.

  லீகோ லீ ப்ரோ 3 (LeEco Le Pro 3) – 161, 923

  சீனாவில் கடந்த ஆண்டின் மூன்றாவது காலிறுதிப் பகுதியில் வெளியான இந்த போன் இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை. 5.5 இன்ச் FHD 1080P டிஸ்ப்ளேவை கொண்ட இந்த போன் 2.2D வளைந்த கிளாஸ் டாப்-ஐ கொண்டது. ஸ்நாப்டிராகன் 821 பிராஸசர் கொண்ட இந்த போனில் 3.5mm ஆடியோஜாக் உள்ளது.

  மோட்டோ Z

  மோட்டோரோலா கம்பெனியின் மிகச்சிறந்த மாடல்களில் ஒன்றான இந்த மோட்டோ Z ஸ்மார்ட்போன் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட்டை கொண்டது. 4 GB ரேம் கொண்ட இந்த போன் இந்தியாவில் ரூ.39999க்கு விற்பனை ஆனது

  ஒன் ப்ளஸ் 3: 14, 533

  AnTuTu benchmark ரேட்டிங்கில் முதல் பத்து இடங்களில் பிடித்த இந்த ஒன் ப்ளஸ் 3 மாடல் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசரை கொண்டது. 6 GB ரேம் கொண்ட இந்த போன் இந்தியாவில் ரூ.27999 விலைக்கு விற்பனை ஆனது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற முக்கியமான போன்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

  சியாமி மி 5எஸ் - 148, 661

  சியாமி நிறுவனத்தின் மி 5எஸ் என்று கூறப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட்டை கொண்டது. 3GB/4GB RAM and 64GB/128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனில் 12MP/4MP திறன் கொண்ட கேமிராக்கள் உள்ளன. பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்பட பல வசதிகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற போன் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆசஸ் ஜென்போன் 3 - 144,610

  5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஆசஸ் ஜென்போன் 3 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோகோர் பிராஸசர் கொண்டது. மேலும் 3GB/4GB ரேம் மற்றும் 32GB or 64GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனில் 8 MP செல்பி கேமிராவும், 16 MP பின் கேமிராவும் உள்ளது. 3,000mAh பேட்டரி கொண்ட இந்த போன் இந்தியாவில் 27999 விலைக்கு விற்பனை ஆனது

  சியாமி மி 5எஸ் ப்ளஸ் - 143,788

  சியாமி நிறுவனத்தின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்ட ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டது. குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட்டை கொண்ட இந்த போனில் 4GB/6GB ரேம் என இருவகைகள் உண்டு. பல்வேறு வசதிகள் கொண்ட இந்த போன் விரைவில் இந்தியாவில் வெளியாகவுள்ளது.

  ZTE ஆக்சோன் 7 – 143,463

  ZTE ஆக்சோன் 7 ஸ்மார்டோனில் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் உள்ளது. கடந்த ஆண்டு வெளியான இந்த போனில் GB/6GB ரேம்கள் கொண்டு 64GB and 128GB ஸ்டோரேஜ் கொண்டதாக வெளிவந்தது. 20 MP கேமிரா கொண்ட இந்த போனி 8MP செல்பி கேமிராவும் உண்டு.

  புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  We have listed the best performing smartphones as per the AnTuTu benchmark here. Take a look at the best smartphones of 2016 as per the benchmarks from here.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more