Home
News

இந்தியா மீது ஆப்பிள் நிறுவனம் இவ்வளவு ஆர்வம் காட்ட என்ன காரணம்.?

ஆப்பிள் நிறுவனம் ஏன் இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி செய்ய இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது..? ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்கள் தான் என்ன.?

By Muthuraj

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ஆப்பிள் மிக விரைவில் இந்தியாவில் அதன் ஐபோன்கள் உற்பத்தியை தொடங்கவுள்ளது.

2016-ல் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இந்தியாவிற்கு வருகை புரிந்து நரேந்திர மோடியை சந்தித்து, தங்கள் கடைகளை இந்தியாவில் திறக்க ஒப்புதல் வாங்கியதில் இருந்து இந்த உற்பத்தி சார்ந்த விதைகள் மெல்ல மெல்ல முளைக்க தொடங்கின. முதலில் இது வெறும் புரளியாகவே நம்பப் பட்டது பின்னர் உறுதியாக பணிகள் நடைபெறுவது வெளிச்சத்திற்கு வந்தது.

இதற்கு முன்பே இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் இருப்பை வலுப்படுத்த விரும்பியது ஆனால் இந்திய அரசாங்கம் ஆப்பிள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் இப்போது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு குழு நாட்டில் உற்பத்தியை தொடங்கவும், அடித்தளம் அமைக்கவும் விவாதிக்க, இந்திய அமைச்சுகத்தில் மூத்த அதிகாரிகள் கூட்டம் ஒன்று விரைவில் நிகழும் என்பது போல் தெரிகிறது.

ஒருபோதும் வழங்கியதில்லை

ஒருபோதும் வழங்கியதில்லை

அவ்வாறே நடப்பின் ஆப்பிள் நிறுவனம் இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெரிய சலுகைகள், உபகரணங்கள் மற்றும் கூறுகளின் இறக்குமதிகளின் மீது 15-ஆண்டு வரி தளர்வு போன்றவைகளை கேட்கும் என்பது உறுதி. மறுபக்கம் இதுபோன்ற சுதந்திரத்தை இந்திய அரசாங்கம் எந்த நிறுவனத்திற்கும் முன்பு ஒருபோதும் வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"திறந்த மனதுடன்"

ரவி சங்கர் பிரசாத், தகவல் தொழில்நுட்பம், இந்தியா அமைச்சர், கூறுகையில் ஆப்பிள் கோரிக்கைகளை பொருத்தவரை "திறந்த மனதுடன்" ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று கூறியுள்ளார்.

ஏன் இவ்வளவு ஆர்வம்.?

ஏன் இவ்வளவு ஆர்வம்.?

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் மிக விரைவில், அவ்வளவு ஏன் நாளைய தினமே கூட இந்தியாவில் அதன் உற்பத்தி அடித்தளத்தை அமைக்க அனுமதி வழங்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. அதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஆப்பிள் நிறுவனம் ஏன் இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி செய்ய இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது..? ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்கள் தான் என்ன.? அதைப்பற்றி இதோ ஒரு சில காரணங்கள் உங்களுக்காக.!

இந்தியாவில் 50% வளர்ச்சி

இந்தியாவில் 50% வளர்ச்சி

அனைத்து நேரங்களிலும் மிகவும் வெற்றிகரமான நிறுவனங்கள் ஒன்றாக இருந்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் சாமீபத்திய காலங்கள் அதன் மீதான விடயங்கள் கடுமையாக மாறிவிட்டன என்பதை காட்டுகிறது. உண்மையில், ஆப்பிள் முதல் முறையாக கடந்த ஆண்டு ஐபோன் விற்பனையில் சரிவை கண்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. உலக விற்பனையில் அமெரிக்க மற்றும் சீனா உட்பட ஐபோன் விற்பனை வீழ்ச்சியை காண கடந்த 2016-ஆம் ஆண்டில் 2015-ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது இந்தியாவில் ஐபோன் விற்பனை 50% வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி செய்ய ஆப்பிள் ஆர்வம் காட்ட இதுவவொரு அடித்தளமான காரணமாகும்.

சாதாரண இந்தியர்கள்

சாதாரண இந்தியர்கள்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனதிற்கு குறைந்த சந்தை பங்கு இருக்க முதன்மை காரணங்களில் ஒன்று அதன் விலை.தற்போதுள்ள நிலையில் நாட்டிற்கு ஷிப்பிங் செய்யபப்டும் ஆப்பிள் கருவிகளின் இறக்குமதி வரி 12.5% அத்துடன் ஒரு ஐபோனின் இறுதி விலை மொத்தம் சேர்ந்து சாதாரண இந்தியர்கள் வாங்க முடியாத ஒரு விலை நிர்ணயத்தை அடையும். மறுபக்கம் சியோமி, ஒன்ப்ளஸ் மற்றும் ஹுவாய் போன்ற சீன நிறுவனங்கள் ஐபோன் கருவிகளின் பாதி விலையில் அதன் தலைமை-கருவிகளை வழங்கி கொண்டிருக்கிறது.

ஐபோன் விலையை குறைக்க

ஐபோன் விலையை குறைக்க

இதையெல்லாம் மனதில் கொண்டு முன்னர் ஆப்பிள் நிறுவனம் அதன் ரீபர்பிஷ்டு கருவிகளை இந்தியாவில் விற்பனை செய்து ஐபோன் விலையை குறைக்க திட்டமிட்டது ஆனால் இந்திய அரசாங்கம் அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது நாட்டில் ஐபோன் இறக்குமதி வரியை தவிர்க்க, ஐபோன் விலையை குறைக்க ஒரே வழியாக இந்தியாவில் ஒரு உற்பத்தி அலகு அமைப்பது மட்டும் தான்.

ஒன்று திரண்டு சீனாவில்

ஒன்று திரண்டு சீனாவில்

அறிக்கையின் படி ஆப்பிள் நிறுவனம் மொத்தம் 28 நாடுகளில் 766 சப்ளையர்கள் (அதில் சீனாவை சார்ந்திராத 346 சப்ள்ளையர்கள்) கொண்டு பரவியுள்ளது. மேலும், ஐபோன் துணை பாகங்கள் எங்கிருந்து வருகின்ற என்ற தகவலே கிடையாது ஆனால் இறுதியாக ஒன்று திரண்டு சீனாவில் (சில நேரங்களில் பிரேசிலில்) கருவிகள் கட்டமைக்கப்படுகிறது.

புதிய மையத்தை தேடி

புதிய மையத்தை தேடி

ஆனால், சீனாவின் தாமதமான கட்டமைப்பு செலவுகள் ஆப்பிள் நிறுவனத்தின் செலவுகளை அதிகரிக்கின்றன மற்றும் மறுபக்கம் ஆப்பிள் அதன் செயல்முறைகளுக்கு ஒரு புதிய மையத்தை தேடி அலைந்தது. தற்போது, இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ந்து கொண்டே போவதால் (உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) வெளிப்படையாகவே எந்த நிறுவனத்தின் முதல் தேர்வாகவும் இந்தியா தான் இருக்கும். அதுமட்டுமின்றி இந்தியாவில் தொழிலாளர் செலவுகளும் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக இருக்கும். இவைகள் தான் இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி செய்ய ஆப்பிள் இவ்வளவு ஆர்வம் காட்ட காரணங்களாகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி நடந்தால் என்னென்ன லாபம்.?

Best Mobiles in India

English summary
Why Apple wants to manufacture iPhones in India. Read more about this is in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X