கூகுள் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் திட்டம் என்ன?

By Siva
|

உலகின் நம்பர் ஒன் தேடுதள நிறுவனமான கூகுள் நிறுவனம் மனித குலத்திற்கு செய்து வரும் மகத்தான சேவைகளால் மனிதனின் வேலைகள் பெருமளவு குறைந்து வசதியும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் திட்டம் என்ன?

கூகுள் நிறுவனத்தின் அறிவியல் மற்றும் டெக்னாலஜி கண்டுபிடிப்புகளில் டிரைவர் இல்லாமல் ஓடும் கார், ரோபோ, லூனார் எக்ஸ்பிரைஸ் என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், அதே நேரத்தில் ஸ்மார்ட்போன் துறையில் கூகுள் ஏதாவது புதியதாக செய்யப்போகின்றதா? என்று கேட்டால் ஒரு மிகப்பெரிய 'இல்லை' என்ற பதிலும், ஒரு மிகச்சிறிய 'ஆம்' என்ற பதிலும் தான் கிடைக்கின்றது.

நான் ஒரு நோக்கியா காதலன்.! நீங்கள் எப்படி.?

ஆம் கூகுளின் ஸ்மார்ட்போன் புரஜொக்ட்களில் ஒன்றான ஆரா (Ara) என்ற புரொஜக்ட் கைவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் மாடல்கள் தொடரவுள்ளது.

ஆரா புரொஜக்ட் என்றால் என்ன?

ஆரா புரொஜக்ட் என்றால் என்ன?

ஆரா புரொஜக்ட் முழுக்க முழுக்க ஒரு மாடுலர் (Modular) ஸ்மார்ட்போன் மாடலாக தயாரிக்க கூகுள் திட்டமிட்டது. இந்த ஸ்மார்ட்போன் அப்கிரேட் செய்வதற்கோ அல்லது ரிப்பேர் செய்வதற்கோ எளிதான வகையில் இருக்கும்.

இந்த மாடலில் உள்ள கேமிரா, பிராஸசர், இண்டர்னல் ஸ்டோரேஜ், பேட்டரி, ஸ்க்ரீன் மற்றும் அனைத்து சென்சார்களும் தனித்தனியாக உருவாக்கப்பட்டது. இந்த போனை ஒரு வாடிக்கையாளர் வாங்கிவிட்டால் வேறு எந்தவிதமான கிளை உபகரணங்களும் தேவையில்லாத அளவிற்கு அனைத்துமே இதில் கிடைக்கும் வண்ணம் உருவாக்கப்பாவிருந்தது.

மோட்டொரோலொ நிறுவனத்தின் ATAP என்று சொல்லப்படும் (Advanced Technology and Project) என்ற முறையில் டெவலப் செய்யப்பட்ட இந்த போன், இந்த டெக்னாலஜியை கூகுள் கைப்பற்றியது. மேலும் இந்த டெக்னாலஜியை முன்னாள் DARPA நிறுவனத்தின் இயக்குனர் கையாண்டார். அதே சமயத்தில் டேவிட் ஹாக்கன் என்பவரும் இவருடன் இணைந்து இந்த புரொஜக்டில் பணியாற்றினார்

இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய 5 மாடல் ஸ்மார்ட்போன்கள்இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய 5 மாடல் ஸ்மார்ட்போன்கள்

ஏன் ஆரா கைவிடப்பட்டது?

ஏன் ஆரா கைவிடப்பட்டது?

இந்த போனின் மாடலில் உள்ள அனைத்து பொருட்களும் தனித்தனியாக உருவாக்கப்பட்டு செயல்பட இருந்த நிலையில் ஹார்ட்வேர் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த மாடல் பின்வாங்க தொடங்கியது.

மேலும் இதனுடைய பேட்டரி திருப்திகரமாஅக அமையாதது, போனின் உற்பத்தி விலை அதிகரித்ததன் காரணமாக வாடிக்கையாளருக்கு அதிக விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை வந்ததும் இந்த போனின் தயாரிப்பு கைவிட ஒரு காரணமாக அமைந்தது

மேலும் இந்த புரொஜக்டில் முக்கியமானவராக இருந்த ரெஜினா டூகன், பேஸ்புக் நிறுவனத்திற்கு சென்றுவிட்டதும் ஒரு முக்கிய காரணம்

நெக்ஸஸ் மாடலின் அடுத்த பிராண்ட் பிக்சல்:

நெக்ஸஸ் மாடலின் அடுத்த பிராண்ட் பிக்சல்:

கடந்த ஆண்டு HTC நிறுவனத்துடன் கைகோர்த்த கூகுள் தன்னுடைய முதல் பிக்சல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது கூகுள் நிறுவனம் அடுத்த மாடலை தயாரித்து வருகிறது.

அதில் லோ லைட் போட்டோ, வாட்டர் புரூப் உள்ளிட்ட புதிய வசதிகள் இருக்கும். இணையதளங்களில் இருந்து வரும் செய்திகளை கொண்டு பார்க்கும்போது கூகுள் நிறுவனம் தனது அடுத்த பிக்சல் 2 ஸ்மார்ட்போனை இந்த வருடமே வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன இருக்கும்?

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன இருக்கும்?

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 மாடலில் கண்டிப்பாக உயர்வகை சிப்செட் கொண்டு தான் உருவாக்கப்படவுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆன்லைனில் கசிந்து வரும் செய்திகள் உண்மையெனில் இந்த பிக்சல் 2 ஸ்மார்ட்போன், 5.2 இன்ச் அல்லது 5.7 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டு இருக்கும். மேலும் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4GB/6GB ரெம், வாட்டர் ரெசிஸ்டெண்ட், மிக விரைவில் சார்ஜ் ஆகும்,4.0 டெக்னாலஜி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஆகிய அம்சங்கள் இருக்குஇம்

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனின் விலையை பார்த்தால் கண்டிப்பாக பிக்சல் 1 மாடலை விட அதிகமாக இருக்கத்தான் வாய்ப்பு உள்ளது. உயர்வகை சிப்செட் உள்ளிட்ட அம்சங்கள் காரணமாக விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மேலே கூறிய பிக்சல் போனின் விபரங்கள் அனைத்துமே இணையதளங்களில் இருந்து கசிந்த தகவல் என்பதால் இவை எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த போன் வெளியான பின்னர்தான் உறுதியாக தெரியவரும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
The search engine giant, Google has a handful of project particularly in new science and technologies that benefit human beings in a great way.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X