Subscribe to Gizbot

நான் ஒரு நோக்கியா காதலன்.! நீங்கள் எப்படி.?

Written By:

என்னையும் உங்களையும் சேர்த்து இந்த பூமியில் உள்ள எல்லோருக்குமே நோக்கியா கருவிகள் மீதான ஒரு தோராயமான இணைப்பு உள்ளது.

சில நேரங்களில் அதுவொரு பெரிய அளவிலான காதலாக கூட இருக்கலாம். முன்பொரு காலத்தில் நம்மோடும் நம் கைகளையோடும் பின்னிப்பிணைந்து கிடந்த நோக்கியா கருவிகளின் படுபாதாள தோல்விக்கு எதை காரணம் சொல்வது.?? யாரை குற்றம் சொல்வதென்று இன்றுவரை புரியவில்லை.!

நான் ஒரு நோக்கியா காதலன்.! நீங்கள் எப்படி.?

ஆனால் உண்மையில் அதற்கான பதில்களை தேடும் நேரம் இதுவல்ல. இது நோக்கியா பிரியர்களான நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம். ஏனெனில் நோக்கியா பிராண்ட் கருவிகள் முன்பைவிட அதிக வலுவுடன் ஸ்மார்ட்போன் சந்தையையும் நமது மனங்களையும் ஆட்கொள்ள இருக்கிறது. நம்மை இப்படி மயக்கி வைத்திருக்கும் இந்த நோக்கியா கருவிகள் அப்படி என்னதான் மாய மந்திரங்கள் செய்ததோ.?

நான் ஒரு நோக்கியா காதலன்.! நீங்கள் எப்படி.?

முதலில் அதன் "அழிக்கமுடியாத" வடிவமைப்பை நம்மையெலலாம் ஒட்டுமொத்தமாக கவர்ந்த அம்சங்களில் ஒன்றென கூறலாம். நவீன கால ஸ்மார்ட்போன்களோடு ஒப்பிடும்போது நோக்கியா 3310 மற்றும் 6600 ஆகிய கருவிகள் எல்லாம் "செங்கல்கள்" - "கருங்கல்கள்" ஆகும். அதை மீறியும் சேதமடைந்தால் கூட, அது அகற்றப்பட்டு மிக மலிவான செலவில் புதுப்பித்துக்கொள்ள முடியும். எந்தவொரு இயற்கைப் பேரழிவுகளிலிலும் தப்பிய நோக்கியாவின் வடிவம் நம்மை இன்றுவரை ஈர்க்கிறது என்பதில் எதிர்க்கருத்தே கிடையாது.!

நான் ஒரு நோக்கியா காதலன்.! நீங்கள் எப்படி.?

அடுத்தபடியாக நோக்கியா பிராண்ட் என்ற பெயரை நம்மை அதிகம் ஈர்க்கிறது. "நீ படிச்ச ஸ்க்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா" என்ற சினிமா வசனம் போல பிற கருவிகள் மீதான ஒப்பீட்டில் நம்மை கர்வம் கொள்ள வைக்க வேறு எந்த நிறுவனத்தினாலும் முடியாது. ஆப்பிள் நிறுவனத்தி போன்றே நோக்கியா தனது சொந்த வடிவமைப்பு, அதன் சொந்த தொழில்நுட்பங்கள் மற்றும் நிச்சயமாக சொந்த மென்பொருள் கொண்ட ஒரு நிறுவனமாகும். மென்பொருள் என்றதுமே சிம்பியன் நினைவில் குதிக்கிறது. அது தான் நோக்கியா வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இன்றுவரை நம்பப்படுகிறது.!

நான் ஒரு நோக்கியா காதலன்.! நீங்கள் எப்படி.?

தோல்விகளை ஓரங்கட்டி வருங்காலத்தை கடந்த காலத்திலேயே நிர்ணயம் செய்த நோக்கியா அம்சங்களில் ஒன்றான "ஸ்மார்ட்" பயன்பாடு பற்றி கூற வேண்டுமானால் அதன் ஸ்நேக் கேம், 140 எழுத்துக்கள் வரையிலான எஸ்எம்எஸ், அலாரம், ஸ்டாப்வாட்ச், கால்குலேட்டர் ஆகியவைகளை சுட்டிக்காட்டலாம். !

எல்லாவற்றிற்கும் மேலாக நோக்கியா தனது தனிப்பட்ட பாணி மற்றும் வடிவங்கள் மூலமாக பிரபலாமாக அறியப்படுகிறது. கால்க்கட்டத்திற்கும் பயனர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற வெவ்வேறு வடிவங்களை மொபைல்களை அறிமுகம் செய்ததற்கு நோக்கியாவிற்கு நிகர் நோக்கியா மட்டுமே.!

நான் ஒரு நோக்கியா காதலன்.! நீங்கள் எப்படி.?

உதாரணமாக 8110, 3310, 6600, நோக்கியா என்-கேஜ், என்-72 மற்றும் முன்பக்க கேமரா கொண்ட எஸ்-73 ஆகிய கருவிகள் நமது கனவு கருவிகளாகும். துரதிருஷ்டவசமாக, ஆண்ட்ராய்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் போக்கை மாற்றிய நோக்கியா தோல்வி அடைந்து, அதிலிருந்து பாடங்கள் கற்று மீண்டு எழுந்து வந்துள்ளதை நோக்கியா காதலர்களாகிய நம்மால் கொண்டாடமல் இருக்க முடியவில்லை.!

மேலும் படிக்க: கம்ப்யூட்டரில் சி ட்ரைவ் உள்ளது.? ஏன் ஏ அல்லது பி ட்ரைவ் இல்லை.? - தெரியுமா.?

English summary
Why we love Nokia still? Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot