ஏர்செல்லின் ஜாலி ஆஃபர்...சென்னை சூப்பர் கிங்ஸ் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் நமக்கு காசு...

Written By:

ஏர்செல் நிறுவனம் இன்று புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் இந்த சிறப்புச் சலுகைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர்செல்லின் ஜாலி ஆஃபர்...சென்னை சூப்பர் கிங்ஸ் அடிக்கும் ஒவ்வொரு ரன்னு

எமலோகத்திலிருந்து பூமி...அசத்தல் படங்கள்...

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் நமக்கு எக்ஸ்ட்ரா டாக்டைம் கிடைக்குமாம். இதற்காக ஏர்செல் வாடிக்கையாளர்கள் ரூ.164க்கு ரீசார்ஜ் செய்யவேண்டும். இதுவும் புல்டாக்டைம் ஆஃபரில் தான் கிடைக்கிறது என்றாலும், ஒரு நிபந்தனை மட்டும் முன்வைக்கப்படுகிறது.

அதாவது நீங்கள் ரூ.164க்கு ரீசார்ஜ் செய்தால் 15 நாட்கள் இந்த சலுகையைப் பெறலாம். தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் 164 ரன்களுக்கும் மேல் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஏர்செல் ரூ.1ஐ தருமாம். உதாரணத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் 200 ரன்கள் எடுத்தால் ரூ.36 எக்ஸ்ட்ரா டாக்டைம் நமது கணக்கில் கூடுதலாக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஜாலி ஆஃபர் தானே?

புதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot