கூகுள் மேப்ஸ் மூலம் லோக்கேஷன் ஷேர் செய்வது எப்படி.?
உங்களின் நம்பிக்கைக்கு உரிய நபர்களுக்கு மட்டும் பகிருங்கள் என்ற ஆப்ஷனும் உள்ளது.!
கூகுள் நிறுவனம் அதன் லோக்கேஷன் பகிர்வு அம்சத்தை கூகுள் ப்ளஸில் இருந்து கூகுள் மேப்ஸ்-க்கு இடம் நகர்த்தி இருக்கிறது. இப்போது இந்த அம்சம் எல்லா பயனர்களுக்கும்உருட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பதை கூகுள் மேப்ஸ் வழியாக பகிர்ந்து கொள்ள முடியும் ஆக உங்கள் நண்பர் உங்களை மிக எளிமையாக வந்தடைய முடியும்.
சரி கூகுள் மேப்ஸ் மூலம் லோக்கேஷன் ஷேர் செய்வது எப்படி.? அப்டேட் நிகழ்த்திவிட்டு உங்களின் கோகுல் மேப்ஸ் ஆப்பில் உள்நுழையவும். பின்னர் இடது புறம் உள்ள மெனுவை கிளிக் செய்யவும். உள்ளே நீங்கள் ஒரு புதிய 'ஷேர் லோக்கேஷன்' விருப்பத்தை காண்பீர்கள்.

வழிமுறை #01
பின்னர் இடத்தை கிளிக் செய்வதன் மூலமாக நீங்கள் இயல்புநிலையாக சுமார் ஒரு மணிநேரம் உங்கள் இடத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் + மற்றும் - குறிகளை பயன்படுத்தி ஷேர் செய்யப்படும் நேரத்தை அதிகரிக்க அல்லது குறைக்கவும் செய்யலாம்.

வழிமுறை #02
ஒவ்வொரு - குறி மீதான கிளிக்கும் 15 நிமிடங்கள் பகிர்வு நேரத்தைக் குறைக்கும் மற்றும் + குறியின் மீது நிகழ்த்தும் ஒவ்வொரு கிளிக்கும் ஒரு மணி நேரம் அதிகரிக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உடன் நீங்களாகவே முடக்கும்வரை "உங்கள் இடத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்' என்றவொரு விருப்பமும் உள்ளது.

வழிமுறை #03
ஒருமுறை நீங்கள் இதை நிகழ்த்திய பின்னர் லோக்கேஷன் பகிர விரும்பும் மக்களை தேர்ந்தெடுக்கும் வண்ணம் 'சூஸ் பீப்பிள்' விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். இந்த பகிர்வை நீங்கள் ஹாங்அவுட்ஸ், மெஸ்ஸெஞ்சர் அல்லது வாட்ஸ்ஆப்பிலும் பகிர்ந்து கொள்ளும் விருப்பமும் உள்ளது.

சிறப்பான பகுதி
இந்த அம்சத்தின் சிறப்பான பகுதியாக நீங்கள் விருப்பத்தை ஒவ்வொரு நபருக்கும் அல்லது இணைப்பிற்கும் தேர்ந்தெடுத்து பகிர்வும், நிறுத்திக்கொள்ளவும் முடியும் என்பது தான்.

நம்பிக்கைக்கு உரிய நபர்
உடன் உங்களின் நம்பிக்கைக்கு உரிய நபர்களுக்கு மட்டும் பகிருங்கள் என்ற ஆப்ஷனும் உள்ளது ஆனால் இந்த ஆப்ஷன் இப்போதைக்கு ஆண்ட்ராய்டு கருவிகளில் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த புதிய கூகுள் மேப்ஸ் லோக்கேஷன் ஷேர் அம்சம் உங்கள் ஆப்பில் கிடைக்கவில்லை என்றால் அப்டேட் நிகழ்த்த மறக்காதீர்கள்.

மேலும் படிக்க
எது பெஸ்ட்? கூகுள் டிரைவ் vs டிராப் பாக்ஸ்.!?


Click it and Unblock the Notifications