சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஏற்படும் 5 பெரிய பிரச்சனைகளும் அதனை தீர்க்கும் வழிகளும்...

By Siva
|

பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த சாம்சங் கேலக்ஸி நோட் 7 வாடிக்கையாளர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றதோ அதே அளவுக்கு திடீரென ஆங்காங்கே சார்ஜ் செய்யப்படும்போது வெடித்து பயத்தையும் கொடுத்தது.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஏற்படும் 5 பெரிய பிரச்சனைகளும்

உலகெங்கிலும் பல சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதாக வந்த தகவலை அடுத்து இவ்வகை போன்களை இந்தியர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் தடை செய்துள்ளன.

ஜியோ ஜிகாபைபர் சேவைக்கு பதிலடி கொடுக்கும் பிஎஸ்என்எல்-ன் பிபிஜி1999..!

ஆசை ஆசையாய் வாங்கிய இந்த மாடல் ஸ்மார்ட்போனை பலர் திருப்பி கொடுக்க மனமில்லாமல் திருப்பி கொடுத்தனர். பலர் விமானங்களில் கொண்டு செல்ல முடியாது என்ற காரணத்தாலே திரும்பி கொடுத்தாக கூறப்படுகிறது.

ஜியோவுடன் இணைந்து இணைப்பு புள்ளிகளை மும்மடங்காக உயர்த்தும் வோடபோன்..!

இந்நிலையில் சார்ஜ் போடும்போது வெடிப்பது மட்டுமின்றி வேறு சில பிரச்சனைகளும் இந்த மொபைலில் ஏற்பட்டு வருவதாக புகார்கள் வெளிவந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன புகார்கள் வருகின்றன, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதை தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வொர்க் ஆகவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வொர்க் ஆகவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்

சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த ஸ்கேனர்தான் என்றாலும் இதில் பிராப்ளம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் செயல்படவில்லை என்றால் உடனே இன்ஃப்ராரெட் ஐரிஸ் ஸ்கேனர் உள்ள பகுதியில் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இப்படியும் பிங்கர்பிரிண்ட் செயல்படவில்லை என்றால் செட்டிங் சென்று லாக்ஸ்க்ரீன் மற்றும் செக்யூரிட்டி சென்று ஐரிஸ் சென்று ரிமூவ் ஐரீஸ் செய்யவும்

ஸ்மார்ட்போன் வெடித்தால் என்ன செய்வது?

ஸ்மார்ட்போன் வெடித்தால் என்ன செய்வது?

நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்மார்ட்போன் வெடித்தால் என்ன செய்வது. இதற்கு வேறு பரிகாரமே இல்லை. உடனடியாக சாம்சங் ஷோரூமுக்கு சென்று வேறு போனை மாற்றி கொள்ளுங்கள். அல்லது தலையை சுற்றி தூக்கி எறிந்துவிடுங்கள்

கிரீன் ஸ்கிரீன் வந்தால் என்ன செய்ய வேண்டும்

கிரீன் ஸ்கிரீன் வந்தால் என்ன செய்ய வேண்டும்

சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் வெகு அரிதாக திடீரென க்ரீன் ஸ்க்ரீன் தெரிவதாக புகார் அளித்துள்ளனர். இதுமாதிரியான பிரச்சை வந்தால் உடனே சேஃப் மோட்-க்கு சென்று போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள். அப்படியும் இந்த பிரச்சனை தொடர்ந்தால் முக்கிய ஆப்ஸ்களை பேக்கப் எடுத்துக்கொண்டு ஸ்மார்ட்போனை ரீசெட் செய்யுங்கள். கண்டிப்பாக இந்த பிரச்ச்னை சரியாகிவிடும்

உங்கள் போனை தெரியாமல் தண்ணீரில் குளிப்பாட்டி விட்டீர்களா?

உங்கள் போனை தெரியாமல் தண்ணீரில் குளிப்பாட்டி விட்டீர்களா?

ஸ்மார்ட்போனும், தண்ணீரும் எலியும் பூனையும் மாதிரி பயங்கர எதிரிகள். தெரிந்தோ அல்லது தெரியாமலே ஸ்மார்ட்போனுக்குள் குறிப்பாக சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் தண்ணீர் புகுந்துவிட்டால் ஸ்பீக்கர் அடிவாங்கிவிடும்

இதுமாதிரி சமயங்களில் தண்ணீர் தானாக காய்ந்துவிடும் வரை பொறுமை கொள்ளுங்கள். முடிந்தவரை ஸ்மார்ட்போனை ஷேக் செய்து ஸ்பீக்கரில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்யுன்க்கள். ஸ்பீக்கரில் உள்ள தண்ணீர் முழுவதும் காய்ந்தவுடன் மீண்டும் ஸ்பீக்கர் முன்புபோல இயங்கும் அதிசயத்தை நீங்அள் காணலாம்

பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனாளிகள் Google Now Launcher என்ற ஆப்ஸை கண்டிப்பாக பயன்படுத்துவார்கள். ஆனால் சோதனையாக ஒருசில ஸ்மார்ட்போன்கள் இந்த ஆப்ஸ்-க்கு சப்போர்ட் செய்யாது. இதுமாதிரி சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா?

பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனாளிகள் Google Now Launcher என்ற ஆப்ஸை கண்டிப்பாக பயன்படுத்துவார்கள். ஆனால் சோதனையாக ஒருசில ஸ்மார்ட்போன்கள் இந்த ஆப்ஸ்-க்கு சப்போர்ட் செய்யாது. இதுமாதிரி சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா?

சாம்சங் க்னாக்ஸ் செக்யூரிட்டி சாப்ட்வேர் காரணமாகத்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. எனவே நீங்கள் உடனடியாக Settings > Lock screen & security > Secure Folder > Uninstall > Back up & uninstall செய்து க்னாக்ஸை டிஸ் ஏபில் செய்யுங்கள். பின்னர் மீண்டும் Google Now Launcher ஆப்ஸை இன்ஸ்டால் செய்யுங்கள். உங்கள் பிரச்சனை சரியாகிவிடும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Note 7 has been making rounds on the internet for all bad reasons, thanks to its exploding batteries. Many airlines including the Indian Airlines have issued a ban on carrying the Galaxy Note 7.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X