ஐடியூன்ஸ் லைப்ரரியை ஆண்ட்ராய்டுக்கு மாற்ற உதவும் 5 இலவச சாப்ட்வேர்கள்

By Siva
|

ஆப்பிள் நிறுவனங்களின் தயாரிப்புகளில் உள்ள ஐடியூன் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த சாப்ட்வேர் ஆப்பிள் பயனாளிகளுக்கு ஐடியூன்ஸ் லைப்ரரி, காண்டாக்ட், நோட்ஸ், புத்தகம், வீடியோக்கள் ஆகியவற்றுக்கு சிறந்த மியூசிக் பிளேயராக உதவுகிறது.

ஐடியூன்ஸ் லைப்ரரியை ஆண்ட்ராய்டுக்கு மாற்ற உதவும் 5 இலவச சாப்ட்வேர்கள்

ரூ.153/-க்கு 2ஜிபி ஏர்டெல் தரவு, இம்முறை நேரடியாக வழங்குகிறது.!

ஐடியூனில் இருக்கும் மியூசிக் லைபரரியை ஆண்ட்ராய்டு டிவைசில் பயன்படுத்த முடியாது என்றே பலர் நினைத்து வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. ஒருசில இலவச சாப்ட்வேர் மூலம் மிக எளிதாக ஐடியூன்களை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு மாற்றலாம். இதுகுறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் ப்ளே மியூசிக்

கூகுள் ப்ளே மியூசிக்

அனைவரும் மிக எளிதாக ஐடியூன் ஃபைல்களை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனுக்கு மிக எளிதாக மாற்ற உதவுவது இந்த கூகுள் பிளே மியூசிக் என்ற சாப்ட்வேர். நீங்கள் முதலில் உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் கூகுள் மியூசிக் மேனேஜர் அல்லது கூகுள் பிளே மியூசிக்கை டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அதே நேரத்தில் உங்கள் ஆண்ட்ராய்டு போனிலும் கூகுள் பிளே மியூசிக் ஆப் இருக்க வேண்டும் என்பது மிக அவசியம்

கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்டு மொபைல் இரண்டிலும் கூகுள் பிளே மியூசிக் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்த பின்னர் நீங்கள் உங்கள் கூகுள் அக்கவுண்டில் லாக்-இன் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு Sync from iTunes என்ற ஆப்சன் கூகுள் அக்கவுண்டில் தெரியும். அதை தேர்வு செய்து ஐடியூன்ஸ் லைப்ரரியில் இருந்து ஆண்ட்ராய்டு டிவைசுக்கு மாற்றுங்கள்

ஐசிங்க்கர் (iSyncr)

ஐசிங்க்கர் (iSyncr)

ஐசிங்க்கர் என்பது கூகுள் பிளே ஸ்டோரில் ஐடியூன் ஃபைல்களை ஆண்ட்ராய்டு டிவைசுக்கு மாற்ற உதவும் மிக அற்புதமான ஒரு ஆப். இந்த ஆப் உதவியால் மிக எளிதாக ஐடியூனில் இருந்து ஆண்ட்ராய்டுக்கு மாற்ற முடிவ்யும். முந்தைய கூகுள் பிளே மியூசிக்கில் கூறியபடியே ஆண்ட்ராய்டு டிவைஸ் மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய இரண்டிலும் ஐசிங்க்கர் ஆப்-ஐ முதலில் இன்ஸ்டால் செய்யுங்கள்

பின்னர் டேட்டா கேபிள் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு போனை கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும். பின்னர் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஐசிங்க்கர் ஐகானில் வலதுபுறம் க்ளிக் செய்தால் ஒரு பாப்-அப் தோன்றும். இந்த பாப்-அப் உதவியால் ஐடியூன் ஃபைல்களை ஆண்ட்ராய்டு ஃபைலாக மாற்றிவிடலாம்.

டபுள் டுவிஸ்ட் (Double Twist)

டபுள் டுவிஸ்ட் (Double Twist)

அடுத்ததாக நாம் பார்க்கவிருக்கும் சாப்ட்வேர் பெயர் டபுள் டுவிஸ்ட். இந்த டபுள் டுவிஸ்ட் மூலமும் ஐடியூன் ஃபைல்களை ஆண்ட்ராய்டு ஃபைல்களை மிக எளிதான டிரான்ஸ்பர் செய்யலாம்.

முதலில் டவுள் டுவிஸ்ட் சாப்ட்வேரை உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். அதேபோல் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலும் டபுள் டுவிஸ்ட் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்

பின்னர் USB கேபிள் மூலம் இரண்டையும் இணைக்க வேண்டும். போனில் உள்ள டபுள் டுவிஸ்ட் ஆப் மூலம் ஐடியூன் ஃபைல்களை காப்பி செய்ய வேண்டும். இந்த ஆப், உங்கள் ஃபைல்களை காப்பி செய்ய அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மிக எளிதாக உங்கள் ஐடியூன் ஃபைல்கள் ஆண்ட்ராய்டு டிவைசுக்கு ஏற்றவாறு மாறிவிடும்

ஏர் சிங்க் (Airsync)

ஏர் சிங்க் (Airsync)

நாம் ஏற்கனவே பார்த்த டபுள் டுவிஸ்ட் சாப்ட்வேரின் வயர்லெஸ் வெர்ஷன் தான் இந்த ஏர் சிங்க் ஆப். ஐடியூனில் இருந்து ஆண்ட்ராய்டு பைலாக மாற்றுவதற்கு இதற்கு எந்த வித டேட்டா கேபிளோ அல்லது USB கேபிளோ தேவையில்லை. இந்த சாப்ட்வேர் உங்களிடம் கேட்பது வெறும் ரூ.50 கட்டணம் மட்டுமே. இந்த கட்டணத்தை செலுத்திவிட்டால் உங்கள் ஐடியூன் ஃபைல்கள் ஆட்டமொட்டிக்காக ஆண்ட்ராய்டு டிவைஸ் ஃபைலாக மாற்றிவிடும்

சிங்ஸி டியூன்ஸ் (SynciTunes)

சிங்ஸி டியூன்ஸ் (SynciTunes)

நாம் கடைசியாக பார்க்க இருக்கும் சின்ஸி டியூன்ஸ்-ம் இதற்கு முன்னர் நாம் பார்த்த ஏர் சிங்க் சாப்ட்வேருக்கு சமமானதுதான். ஃவைபை நெட்வொர்க் மூலம் உங்கள் ஐடியூன் ஃபைல்களை ஆண்ட்ராய்டு ஃபைலாக இந்த சாப்ட்வேர் மாற்றி தரும். ஆனால் இந்த சாப்ட்வேர் உங்களுக்கு ஒரே நேரத்தில் 100 பாடல்களை மட்டுமே இலவசமாக மாற்றித்தரும். அதற்கு மேல் தேவை என்றால் குறிப்பிட்ட கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

Best Mobiles in India

English summary
It is very easy to transfer your iTunes library to your Android device with the help of third party softwares. Here's a list of five effective softwares to do so.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X