Best Phones April 2023: உங்க பட்ஜெட் ரூ.15,000-ஆ? அப்போ இந்த 4 போன்ல ஒன்னு தாராளமா வாங்கலாம்!
பெரும்பாலான பட்ஜெட் வாசிகளை போலவே நீங்களும் ரூ.15,000 க்குள் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற தேடலில் இருந்தால்.. கவலையை விடுங்கள்.. சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஏப்ரல் 2023ல் ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் 4 சிறந்த போன்களின் பட்டியல் இதோ:
01. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி: ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் மலிவு விலையில் ஒரு நல்ல 5ஜி போனை தேடுகிறீர்கள் என்றால், போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை நிச்சயம் கருத்தில் கொள்ளலாம். இது ரூ.14,999 க்கு பிளிப்கார்ட் மற்றும் போக்கோ இந்தியா வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 810 ப்ராசஸர், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான ஐபிஎஸ் டிஸ்பிளே, 33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் பல 5ஜி பேண்டுகளுடன் இணக்கத்தன்மை போன்றவைகளை கொண்டுள்ளது.
02. மோட்டோ ஜி13 4ஜி: உண்மையில் இது ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மட்டுமல்ல; ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் சிறந்த மொபைலும் கூட. ஏனென்றால் இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக ரூ.9,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஹீலியோ ஜி85 சிப்செட், க்ளீன் யூஸர் இன்டர்பேஸை வழங்கும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரெட் உடனான டிஸ்ப்ளே, டால்பி அட்மோஸ் உடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 5000mAh பேட்டரி, ஐபி52 ரேட்டிங் மற்றும் திங்க்ஷீல்ட் ப்ரொடெக்ஷன் போன்றவைகளை கொண்டுள்ளது.
03. சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி: சாம்சங்கின் ஸ்மார்ட்போன் இல்லாமல் "சிறந்த ஸ்மார்ட்போன்கள்" என்கிற பட்டியலை பார்ப்பது மிகவும் அரிது. பெரிய பேட்டரியை கொண்ட ஒரு நம்பகமான 5ஜி போனை தேடும் எவருக்கும் இதுவொரு சிறந்த தேர்வாகும். இது ரூ.13,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, டைமன்சிட்டி 700 சிப்செட், 11 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவு, 5000mAh பேட்டரி, 50எம்பி மெயின் கேமரா, ரேம் பிளஸ் ஆதரவுடன் 12ஜிபி வரையிலான ரேம் போன்றவைகளை கொண்டுள்ளது
4. ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி: இது கடந்த பல மாதங்களாகவே ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் சிறந்த பட்ஜெட் விலை 5ஜி போன்கள் என்கிற பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. இது ஐக்யூ இந்தியா மற்றும் அமேசான் இந்தியா வலைத்தளங்கள் வழியாக ரூ,13,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 ப்ராசஸர், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.58 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி, 50எம்பி ஐ ஆட்டோ ஃபோகஸ் டூயல் இயர் கேமரா செட்டப் போன்றவைகளை கொண்டுள்ளது.
ஒருவேளை மேற்கண்ட 4 ஸ்மார்ட்போன்களின் அம்சங்களும் உங்களை ஈர்க்கும்படி இல்லையென்றால், எதுவுமே வாங்கி தூண்டும்படி இல்லையென்றால்.. அப்போதும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இந்த ஏப்ரல் 2023ல் மட்டுமே மொத்தம் 12 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அந்த போன்களின் முழு பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








