1 இல்ல 2 இல்ல.. இந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 12 புதிய போன்கள் அறிமுகமாக உள்ளன.. இதோ முழு லிஸ்ட்!
2023 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களை போலவே, ஏப்ரல் மாதத்திலும் கூட மூச்சு மூட்டும் அளவிற்கு புதிய ஸ்மார்ட்போன்கள் (New Smartphones) அறிமுகம் செய்யப்படவுள்ளன. இன்னும் சொல்லப்போனால், இம்மாதம் அறிமுகமாகும் புதிய போன்களானது இதற்கு முன் வெளியான லேட்டஸ்ட் மாடல்களை மறக்கடிக்கும் ரேன்ஞ்சில் இருக்கப்போகின்றன!
முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே மொத்தம் 12 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஒன்பிளஸ், சாம்சங், போக்கோ, ஆசஸ், ரெட்மி, ஐக்யூ, மோட்டோ, ஒப்போ, விவோ என கிட்டத்தட்ட எல்லா பெரிய நிறுவனங்களுமே தங்களுடைய புதிய போன்களை அறிமுகம் செய்யவுள்ளன!

01. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி: ஒன்பிளஸின் இந்த புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஏப்ரல் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் கீழ் ரூ.27,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
02. போக்கோ எஃப்5 5ஜி: போக்கோவின் இந்த புதிய மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனானது ரூ.30,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
03. ஆசஸ் ஆர்ஓஜி போன் 7: ஆசஸின் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் ஏப்ரல் 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
04. சாம்சங் எம்54 5ஜி: சாம்சங்கின் இந்த மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இந்த ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கலாம் என்னு ஊகிக்கப்படுகிறது.
05. விவோ எக்ஸ்90 சீரீஸ்: விவோவின் இந்த பிளாக்ஷிப் சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் கூட இந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ எக்ஸ்90 மாடலானது ரூ.56,999 க்கும், எக்ஸ்90 ப்ரோ மாடலானது ரூ.61,999 க்கும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
06. ஐக்யூ நியோ 8 சீரீஸ்: ஐக்யூவின் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களானது இம்மாதத்தின் நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படலாம். இதன் கீழ் நியோ 8 மற்றும் நியோ 8 ப்ரோ என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும். வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐக்யூ நியோ 8 மாடலானது ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
07. சியோமி 13 அல்ட்ரா: சியோமியின் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில், சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் வெளியாகும்; இது ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
08. ஐக்யூ இஸட்7 சீரீஸ்: ஐக்யூவின் இந்த பட்ஜெட் விலை சீரீஸ் ஸ்மார்ட்போன்களானது ஏப்ரல் 4 ஆம் தேதி இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த சீரீஸில் புதிதாக ஐக்யூ இஸட்7எக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படலாம்; விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்7-ன் பேஸிக் வேரியண்ட் ரூ.19,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
09. மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ: மோட்டோரோலாவின் இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போனின் 8ஜிபி ரேம் + 12ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.52,990 க்கு வெளியாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
10. ஒப்போ ரெனோ 10 சீரீஸ்: ஒப்போவின் புதிய ரெனோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், இந்த ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. கிடைக்கப்பெற்ற வதந்திகளின்படி, ஒப்போ ரெனோ 10 சீரிஸின் ஆரம்ப விலை ரூ.44,490 ஆக இருக்கலாம்.
11. விவோ வி27இ: இந்தியாவில் ஏற்கனவே அறிமுகமாகி விட்ட விவோ வி27 சீரீஸின் கீழ் அறிமுகமாகவுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் அறிமுகமாகுமென்று கூறப்படுகிறது. இந்த போனின் பேஸிக் வேரியண்ட் ஆன 8ஜிபி + 12ஜிபி ஆப்ஷன் இந்தியாவில் ரூ.23,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
12. விவோ டி2 சீரீஸ்: கடந்த ஆண்டை போலவே இது பல வகையான மாடல்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. விவோவின் இந்த புதிய சீரிஸ் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியாகலாம். இந்த சீரீஸின் கீழ் வாங்க கிடைக்கும் வெண்ணிலா வேரியண்ட், இந்தியாவில் ரூ.19,999 என்கிற விலை நிர்ணயத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








