Home
Mobile

2025 குடியரசு தின ஆபர்.. iPhone 16 முதல் iPhone 16 Pro Max வரை.. 4 மாடல்கள் மீதும் டிஸ்கவுண்ட்!

2025 இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு, பிளிப்கார்ட் வலைத்தளமானது அதன் சுதந்திர தின சிறப்பு விற்பனைக்கான தேதிகளை அறிவித்து இருந்தது. தற்போது பிளிப்கார்ட் நினைவுச்சின்ன விற்பனை 2025 (Flipkart Monumental Sale 2025) என்கிற பெயரின்கீழ் நடக்க உள்ள இந்த விற்பனையின் போது ஐபோன் 16 சீரீஸ் மீது கிடைக்கும் தள்ளுபடி விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் மொனுமென்டல் சேல் 2025 ஆனது வருகிற ஜனவரி 14 ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 19 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த விற்பனையிலும் பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு (Flipkart Plus Members) முன்னுரிமை அளிக்கப்படும். அதவாது பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்கள் ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜனவரி 13 ஆம் தேதியே இந்த சிறப்பு விற்பனையின் கீழ் கிடைக்கும் சலுகைகளை அணுக முடியும்.

iPhone 16 முதல் iPhone 16 Pro Max வரை.. 4 மாடல்கள் மீதும் டிஸ்கவுண்ட்!

பொதுவாக ஆப்பிள் நிறுவனம் (அதன் புதிய மற்றும் பழைய மாடல்கள் என எந்த ஐபோன்கள் மீதும்) பெரிய அளவிலான சலுகைகளை மற்றும் தள்ளுபடிகளை அறிவிக்காது என்பதால், பலரும் பண்டிகை காலங்களில் நடக்கும் சிறப்பு விற்பனைகளின் போது ஐபோன்கள் மீதான ஆபர்கள் மீதே அதிகம் கவனம் செலுத்துவார்கள். அதை நன்றாக அறிந்த பிளிப்கார்ட் வலைத்தளம், பிளிப்கார்ட் மொனுமென்டல் சேல் 2025-ல் முழு ஐபோன் 16 சீரீஸ் மீதும் சலுகைகளை அறிவித்துள்ளது.

ஐபோன் 16 விலை: இது ரூ.63,999 க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விலை அனைத்து வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை உள்ளடக்கியதாக இருக்கும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் ஐபோன் 16 மாடலின் விலையை குறைக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 இந்திய சந்தையில் ரூ.79,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது

ஐபோன் 16 பிளஸ் ஆபர் விலை: இது ரூ.73,999 க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் அனைத்து வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை உள்ளடக்கிய விலையாக இருக்கும். கூடுதலாக பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் இன்னும் விலையை குறைக்கலாம்; கூடவே நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களையும் பெறலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 பிளஸ் இந்திய சந்தையில் ரூ.89,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது

ஐபோன் 16 ப்ரோ ஆபர் விலை: இது ரூ.1,02,990 க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அனைத்து வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் இன்னும் விலையை குறைக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோ இந்திய சந்தையில் ரூ1,19,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆபர் விலை: இது ரூ.1,27,990 க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ஆபர் விலைகளை போலவே இதுவும் அனைத்து வங்கி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை உள்ளடக்கிய விலையாக இருக்கும். பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் இன்னும் விலையை குறைக்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16 ப்ரோ இந்திய சந்தையில் ரூ1,44,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது

ஐபோன் 16 சீரீஸ் தவிர்த்து வேறு பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீதும் சலுகைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கூடவே லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், டேப்லெட்டுகள், மியூசிக் சிஸ்டம்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளின் மீது பெரிய அளவிலான டீல்கள் கிடைக்கும். எலக்ட்ரானிக்ஸ்-ஐ தவிர, வீட்டு உபயோகப் பொருட்கள், பேஷன் பொருட்கள், காலணிகள் மற்றும் பலவற்றிலும் தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்.

அமேசான் இந்தியா வலைத்தளமும் அதன் 2025 அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனைக்கான (Amazon great republic day sale 2025) ஆரம்ப தேதியை அறிவித்துள்ளது. இது ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2205 அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையின் போது என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் கிடைக்கும் என்கிற பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்

More from GizBot

Best Mobiles in India

English summary
2025 Flipkart Republic Day Sale Offers on iPhone 16 iPhone 16 Plus iPhone 16 Pro iPhone 16 Pro Max
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X