Amazon-ல் ஆர்டர் அள்ளுது.. 3 நாட்கள் பேட்டரி லைஃப்பை வழங்கும் இந்த NOKIA 5G Phone மீது ரூ.3000 விலை குறைப்பு!
சிங்கிள் சார்ஜில்.. அதாவது கிட்டத்தட்ட 100% சார்ஜில் 3 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும் நோக்கியா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது.. முழுதாக ரூ.3,000 விலைக்குறைப்பு கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக 23% டிஸ்கவுண்ட்டின் கீழ் வாங்க கிடைக்கிறது. நாம் இங்கே பேசுவது நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:
நோக்கியா ஜி42 5ஜி அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? அமேசான் இந்தியா வழியாக கிடைக்கும் 23% நேரடி தள்ளுபடிக்கு பிறகு நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வெறும் ரூ.9999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் அறிமுக விலை ரூ.12,999 ஆகும்.

நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? 2 காரணங்களை முன்வைத்து இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். ஒன்று - நீங்கள் ஒரு தீவிரமான நோக்கியா பிராண்டட் ரசிகராக இருந்தால், இந்த ஸ்மார்ட்போனை கண்டிப்பாக வாங்கலாம். இது அட்டகாசமான 3 கலர்களில் (க்ரே, பிங்க் மற்றும் பர்பிள்) வருகிறது. இரண்டாவது காரணம் - நீங்களொரு என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போனை தேடினால் நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனை தாராளமாக வாங்கலாம்.
விரிவான அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 720 x 1,612 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 560 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை (HD+ LCD Display) கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை இது ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட்டை (Snapdragon 480 Plus Chipset) பேக் செய்கிறது. இது அதிகபட்சமாக 6ஜிபி வரையிலான ரேம்-ஐ வழங்கும். இருப்பினும் 5ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வழியாக, இந்த நோக்கியா ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 11ஜிபி ஆக அதிகரிக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. அதில் எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு (Auto Focus Support) உடனான 50எம்பி மெயின் கேமரா + எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.

இந்த கேமரா செட்டப்பில் நைட் மோட் (Night mode), டார்க் விஷன் (Dark Vision), ட்ரைபாட் மோட் (Tripod mode), ஏஐ போர்ட்ரெயிட் (AI portrait), எச்டிஆர் உடனான 50எம்பி மோட் (50MP mode with HDR), பெர்சனலைஸ்டு வாட்டர்மார்க்ஸ் (Personalized watermarks), ஓஸோ 3டி ஆடியோ ரெக்கார்டிங் (OZO 3D Audio recording) போன்ற அம்சங்கள் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை இது 20W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. நோக்கியா நிறுவனத்தின் கூற்றுப்படி இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 3 நாட்கள் வரையிலான பிளேபேக் டைம் (Playback Time) கிடைக்கும். இது பிங்கர் ஃபிரிண்ட் சென்சார் (Fingerprint Sensor) மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கையும் (IP52 Rating) கூட கொண்டுள்ளது.
அமேசான் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் அமேசான் அதன் அடுத்த ப்ரைம் டே விற்பனையை (Amazon Prime Sale Day Sale 2024) நடத்த உள்ளது. ப்ரைம் மெம்பர்களுக்கு மட்டுமான இந்த சிறப்பு விற்பனையின் கீழ் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது நம்ப முடியாத விலை குறைப்புகள், டிஸ்கவுண்ட்கள் மற்றும் ஆபர்கள் கிடைக்கும். என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிய இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








