போனா வராது.. ரூ.2000 முதல் ரூ.50,000 வரை விலை குறைப்பு.. Amazon Prime Days-ல் இந்த 8 போன்களையும் விட்றாதீங்க!
ஜூலை 20 மற்றும் 21 ஆம் தேதிகளை "மறக்காமல்" குறித்து வைத்துக்கொள்ளவும். ஏனென்றால் இவ்விரு தினங்களில் தான் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா அதன் அடுத்த ப்ரைம் டே விற்பனையை (Amazon Prime Sale Day Sale 2024) நடத்தவுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே, இது அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு மட்டுமான ஒரு சிறப்பு விற்பனையாகும். இந்த விற்பனை தொடங்க இன்னும் பல நாட்கள் மீதமிருக்கிறது என்றாலும் கூட.. என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவவ்ளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும்? என்னென்ன புதிய அறிமுகங்கள் நடக்கும்? என்கிற பட்டியலை, அமேசான் இப்போதே வெளிப்படுத்தியுள்ளது.
2024 அமேசான் ப்ரைம் டேஸின் போது என்னென்ன புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகும்? பல பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மீதான விலை குறைப்புகள், சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஒருபக்கம் இருக்க, 2024 அமேசான் ப்ரைம் டேஸின் போது பல நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகமும் செய்யவுள்ளன; விற்பனையும் செய்யவுள்ளன.

இந்த பட்டியலில் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G), மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ரா (Motorola Razr 50 Ultra), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போனின் அல்ட்ரா ஆரஞ்சு கலர் ஆப்ஷன் (OnePlus Nord CE 4 Lite Ultra Orange), ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) போன்ற மாடல்களும் அடங்கும்.
இந்த பட்டியலில் ஹானர் 200 சீரிஸ் (Honor 200 Series), லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G), ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) மற்றும் ஒரு புதிய வகை ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி (OnePlus 12R 5G) மாடல்களும் உள்ளன.
என்னென்ன வங்கிகளிடம் இருந்து என்னென்ன ஆபர்கள் கிடைக்கும்? ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுடன் 10% வரை கேஷ்பேக் கிடைக்கும். மேலும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளுக்கு இஎம்ஐ விருப்பமும் கிடைக்கும். இதேபோல அமேசான் ஐசிஐசிஐ கார்டுகளுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும்
எஸ்பிஐ கார்டுகளுடன் 10% வரை உடனடி கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ விருப்பங்கள் அணுக கிடைக்கும். மேலும், புதிய அமேசான் பே மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகளும் வழங்கப்படும். புதிய பயனர்கள் ரூ.2500 வரையிலான வரவேற்பு வெகுமதிகளை பெறுவார்கள். சரி அமேசான் பிரைம் டே விற்பனையின் போது என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவவ்ளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும்?
1. ஐக்யூ நியோ 7 5ஜி (iQOO Neo 7 5G): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.34,999 க்கு பதிலாக அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கும். அதாவது இது ரூ.7000 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படும்.
2. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.24,999 க்கு பதிலாக அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும். அதாவது இது ரூ.5000 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படும்.
3. ரியல்மி நார்சோ 60 5ஜி (Realme narzo 60 5G): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.19,999 க்கு பதிலாக அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும். அதாவது இது ரூ.2000 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படும்.
4. சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி (Samsung Galaxy M33 5G): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.24,999 க்கு பதிலாக அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும். அதாவது இது ரூ.2000 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படும்.
5. டெக்னோ ஃபாண்டாம் எக்ஸ்2 5ஜி (Tecno Phantom X2 5G): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.51,999 க்கு பதிலாக அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கும். அதாவது இது ரூ.15,000 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படும்.
6. ஐக்யூ 9 ப்ரோ (iQOO 9 Pro): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.74,990 க்கு பதிலாக அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ரூ.64,990 க்கு வாங்க கிடைக்கும். அதாவது இது ரூ.10,000 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படும்.
7. மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.1,19,999 க்கு பதிலாக அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ரூ.69,998 க்கு வாங்க கிடைக்கும். அதாவது இது ரூ.50,001 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படும்.
8. மோட்டோரோலா ரேஸர் 40 (Motorola Razr 40): இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.99,999 க்கு பதிலாக அமேசான் பிரைம் டே விற்பனையின் போது ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கும். அதாவது இது ரூ.50,000 தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








