பவர் பேங்க் கதை முடிஞ்சது.. 8 மிமீ ஸ்லிம் டிசைனில் 10000mAh பேட்டரி.. புது Honor போன்.. எந்த மாடல்?
ஹானர் (Honor) நிறுவனமானது ஒரு சூப்பர் லார்ஜ் பேட்டரி ஸ்மார்ட்போனை (Super-large Battery Smartphone) அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது ஹானர் பவர் 2 (Honor Power 2) மாடல் ஆகும். இது பிரபலமான ஒரு ஸ்மார்ட்போன் பிராண்டிலிருந்து வரும் முதல் 10000mAh பேட்டரி போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது அறிமுகமாகும்? நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ஹானரின் 10000mAh பேட்டரி ஆனது சீனாவில் சான்றிதழை பெற்றுள்ளது. ஆக இந்த புதிய பேட்டரியை கொண்ட ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 இல்ல 3 போன்கள்: ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனில் மட்டுமல்ல ஹானர் நிறுவனமானது இவ்வளவு பெரிய பேட்டரி உடன் மொத்தம் 3 மிட்-ரேஞ்ச் போன்களை அறிமுகம் செய்யும் என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார். இந்த மூன்று போன்களும் - ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 மற்றும் டைமன்சிட்டி 8500 ஆகியவற்றால் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 உடனான ஹானர் போனின் பைனல் மார்க்கெட்டிங் பெயர் என்ன என்பது குறித்து தெளிவு இல்லை. இந்த டிப்ஸ்டர் பேசக்கூடிய ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 உடனான ஸ்மார்ட்போன் ஹானர் 500 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஹானர் 500 ப்ரோவை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite SoC) உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டைமன்சிட்டி 8500 உடனான மாடலை பொறுத்தவரை (முன்னரே குறிப்பிட்டபடி) இது ஹானர் பவர் 2 ஆக இருக்கலாம்.
ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.79-இன்ச் LTPS OLED டிஸ்பிளே
- டைமன்சிட்டி 8500 சிப்செட்
- மிகப்பெரிய பேட்டரியை கொண்டிருந்தாலும் 8 மிமீ ஸ்லிம் பாடி
- டிராப்-ரெசிஸ்டண்ட் பாடியையும் கொண்டிருக்கலாம்
- அண்டர்-டிஸ்பிளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
சமீபத்தில் ஹானர் மேஜிக் 8 மற்றும் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சீனாவில் இந்த மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.55,000 க்கும், 12GB + 512GB, 16GB + 512GB, மற்றும் 16GB + 1TB ஆப்ஷன்கள் முறையே சுமார் ரூ.59,100, ரூ.61,600 மற்றும் ரூ.67,800 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஹானர் மேஜிக் 8 ஸ்மார்ட்போன் ஆனது வெல்வெட் பிளாக், ஸ்னோ ஒயிட், சன்ரைஸ் கோல்ட் மற்றும் அஸூர் கிளேஸ் என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.70,200 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து உள்ள 12GB + 512GB, 16GB + 512GB, மற்றும் 16GB + 1TB ஆப்ஷன்கள் ஆனது முறையே (தோராயமாக) ரூ.73,900, ரூ.76,400 மற்றும் ரூ. 83,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் வெல்வெட் பிளாக், ஸ்னோ ஒயிட், அஸூர் கிளேஸ் மற்றும் சன்ரைஸ் கோல்ட் சாண்ட் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும். தற்போது வரையிலாக இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை. ஹானர் மேஜிக் 8 சீரீஸின் விரிவான அம்சங்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications








