Home
Mobile

தம்மாத்துண்டு போன்ல 7200mAh பேட்டரி, 200MP டெலி கேமரா, 16GB ரேம்.. அசால்ட் செய்யும் புது Honor போன்!

ஹானர் நிறுவனம் 7200mAh பேட்டரி, 200எம்பி டெலிபோட்டோ கேமரா உடனான ஒரு ப்ரோ மாடல் மற்றும் 7000mAh பேட்டரி, 64எம்பி சூப்பர் நைட் காட் டெலிஃபோட்டோ கேமரா உடனான ஒரு வெண்ணிலா மாடல் - என ஒரேநேரத்தில் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவைகள் ஹானர் மேஜிக் 8 மற்றும் ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

ஹானர் மேஜிக் 8 ப்ரோ (Honor Magic 8 Pro) ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட மேஜிக்ஓஎஸ் 10
- 6.71-இன்ச் 1.5கே LTPO OLED டிஸ்பிளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் வரையிலான எச்டிஆர் பீக் ப்ரைட்னஸ்)
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரை ரேம் மற்றும் 1TB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்

தம்மாத்துண்டு போன்ல 7200mAh பேட்டரி, 200MP டெலி கேமரா, 16GB ரேம்!

- ட்ரிப்பிள்ரியர் கேமரா யூனிட்
- 50 மெகாபிக்சல் 1/1.3-இன்ச் ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 200 மெகாபிக்சல் 1/1.4-இன்ச் டெலிஃபோட்டோ கேமரா (எப்/2.6, 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம்)
- AIMAGE ஹானர் நோக்ஸ் எஞ்சின் மற்றும் CIPA 5.5 இமேஜ் ஸ்டெபிலைசேஷன்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 3D டெப்த் சென்சார்

- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்
- 5ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், கலிலியோ, க்ளோநாஸ், பைடு, என்எப்சி, ஓடிஜி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 100W (வயர்டு) மற்றும் 80W (வயர்லெஸ்) பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7,200mAh பேட்டரி
- அளவீட்டில் 161.15×75×8.32மிமீ மட்டும் எடையில் 219 கிராம்.

ஹானர் மேஜிக் 8 (Honor Magic 8) ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே சாஃப்ட்வேர், செல்பீ கேமரா, ஐபி ரேட்டிங்ஸ், சிப்செட் மற்றும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள்
- 6.58-இன்ச் FHD+ டிஸ்பிளே (120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் வரையிலான எச்டிஆர் பீக் ப்ரைட்னஸ்)
- அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்

- ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்
- 50 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x வரை டிஜிட்டல் ஜூம் கொண்ட 64-மெகாபிக்சல் சூப்பர் நைட் காட் டெலிஃபோட்டோ சென்சார்
- 50 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் செல்பீ கேமரா
- 90W (வயர்டு) மற்றும் 80W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி
- அளவீடுகளில் 157.12×74.03×7.95மிமீ மற்றும் எடையில் சுமார் 205 கிராம்.

ஹானர் மேஜிக் 8 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.55,000 க்கும், 12GB + 512GB, 16GB + 512GB, மற்றும் 16GB + 1TB ஆப்ஷன்கள் முறையே சுமார் ரூ.59,100, ரூ.61,600 மற்றும் ரூ.67,800 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹானர் மேஜிக் 8 ஸ்மார்ட்போன் ஆனது வெல்வெட் பிளாக், ஸ்னோ ஒயிட், சன்ரைஸ் கோல்ட் மற்றும் அஸூர் கிளேஸ் என்கிற 4 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள ஹானர் மேஜிக் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.70,200 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

அடுத்தடுத்து உள்ள 12GB + 512GB, 16GB + 512GB, மற்றும் 16GB + 1TB ஆப்ஷன்கள் ஆனது முறையே (தோராயமாக) ரூ.73,900, ரூ.76,400 மற்றும் ரூ. 83,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் வெல்வெட் பிளாக், ஸ்னோ ஒயிட், அஸூர் கிளேஸ் மற்றும் சன்ரைஸ் கோல்ட் சாண்ட் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும். தற்போது வரையிலாக இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Magic 8 Pro With 7200mAh Battery 200MP Telephoto Launched Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X